Category: தேவ செய்தி

இறைத்தந்தையின் இரக்கம்

1யோவான் 1: 1 – 4 யோவானின் நற்செய்தியில், முதல் அதிகாரம் ஒட்டுமொத்த புத்தகத்தின் சுருக்கமாக இருப்பது போல, இந்த கடிதத்தின் முதல் நான்கு இறைவார்த்தைகள், ஒட்டுமொத்த நூலின் சாராம்சமாக பார்க்கப்படுகிறது. கடவுள் தான் நிலைவாழ்வை அருள்கிறவர். அந்த நிலைவாழ்வு நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து வழியாக இந்த உலகத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. நம்முடைய பாவங்களை மறைத்து விட்டு, கடவுள் முன் நிற்போமேயானால், நம்மை யாராலும் காப்பாற்ற முடியாது. அதே வேளையில், நம்முடைய பாவங்களை அறிக்கையிட்டு, அவருடைய மன்னிப்பிற்காக நாம் காத்திருப்போமே என்றால், நாம் மீட்கப்படுவோம். அதுதான் இங்கு நமக்கு தரப்படுகிற செய்தியாக இருக்கிறது. கடவுள் யாரையும் நிர்கதியாக விட்டு விட வேண்டும் என நினைத்ததில்லை. இந்த உலகத்தில் பிறந்திருக்கிற ஒவ்வொரு குழந்தையும் கடவுளின் குழந்தையே. அனைவரையும் மீட்க வேண்டும் என்பதே கடவுளின் திட்டம். இந்த திட்டத்தை முழுமையாக நிறைவேற்றியவர் நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து. எப்படி நிறைவேற்றினார்? நமக்காக சிலுவையில் அறையப்பட்டு,...

அன்னாவின் அர்ப்பணம்

1சாமுவேல் 1: 20 – 22, 24 – 28 விவிலியத்தில் யார் தனியொருவராக அதிகமாக துன்பங்களைச் சந்தித்தவர் என்று பார்க்கிறபோது, நிச்சயம் நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவுக்கு அதில் முதல் இடமுண்டு. ஏனென்றால், அவர் கடவுளின் மகனாக இருந்தபோதும், மனித வடிவெடுத்தார். வல்லமை இருந்தாலும் கத்தாத செம்மறியாக இருந்தார். தவறே செய்யவில்லை என்றாலும், அவமானச்சிலுவையை ஏற்றுக்கொண்டார். நமக்காக உயிர்துறந்தார். இதற்கு அடுத்து, நிச்சயம் யோபு என்பதில் சந்தேகம் இருக்க முடியாது. அதன் பின் இறைவாக்கினர்கள், குறிப்பாக எரேமியா, எலியா என்று இந்த பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. விவிலியத்தில், அன்னை மரியாளைத் தவிர, பெண்களில் அதிக துன்பப்பட்டவர்கள் என்கிற பட்டியலைப் பார்க்கிறபோது, அவ்வளவாக நமக்கு யாருடைய பெயரும் தென்படுவதில்லை. அவர்களுடைய அதிகபட்ச துன்பமாக நமக்குத் தரப்படுவது, குழந்தையின்மை. நிச்சயம் அது பெண்களுக்கு மிகப்பெரிய துன்பம் தான். ஆண்வர்க்க சமுதாயத்தில், அத்தகைய கொடுமை நிச்சயம் பெண்களுக்கு அதிகமானது தான். இதில் நிச்சயம்...

கிறிஸ்துமஸ் பிறப்பு விழா

ஒவ்வொரு ஆண்டும் கிறிஸ்து பிறப்பு விழாவை நாம் சிறப்பாகக் கொண்டாடி வருகின்றோம். இந்த கொண்டாட்டங்கள் நமக்கு தேவையா? அதற்காக நாம் செலவழிக்கக்கூடிய பணம் வீணாக விரயமாகிறதா? இந்த கொண்டாட்டங்களும் வெறும் சடங்கு தானா? கிறிஸ்து பிறப்பு விழா நம்மில் எப்படி மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது? இது போன்ற கேள்விகளை எழுப்பி, கிறிஸ்து பிறப்பு விழாவைப்பற்றிய செய்தியை, சிந்திக்கலாம் என்று நினைக்கிறேன். கிறிஸ்து பிறப்பு விழாவையொட்டி, ஏராளமான பணத்தை நாம் தேவையில்லாமல் வாரி இறைத்தாலும், கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தோடு பல நல்ல செயல்பாடுகளும் நல்ல உள்ளங்களால் முன்னெடுக்கப்படுகிறது என்பதை நாம் மறந்து விடக்கூடாது. குறிப்பாக, ஆதரவற்ற இல்லங்களுக்கு பல நல்ல மக்கள் சிறப்பான உதவிகளைச் செய்து, இந்த திருவிழாக்களின் நோக்கத்தை இன்னும் உரக்க, இந்த உலகத்திற்கு சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். ஆக, ஒருபுறம் கொண்டாட்டம் என்கிற பெயரில் தேவையில்லாமல் பணத்தை வீண், ஆடம்பர செலவு செய்துகொண்டிருந்தாலும், மறுபுறம் உதவிகளும் பெருகிக்கொண்டிருக்கின்றன. நாம் கொண்டாடக்கூடிய கிறிஸ்து பிறப்பு விழா...

இறைவனே எப்போதும் உயர்ந்தவர்

2சாமுவேல் 7: 1 – 5, 8 – 12, 16 கடவுளை விடவும் மேலானவர்களாக ஒரு சில தருணங்களில் நம்மையே நாம் நினைத்துக் கொள்கிறோம். கடவுளை விட அதிகம் சிந்திப்பவர்களாகவும், அறிவாளிகளாகவும் நினைத்துக் கொள்கிறோம். அதற்கு சிறந்த எடுத்துக்காட்டு இன்றைய முதல் வாசகம். தாவீது ஆண்டவர்க்கு ஓர் இல்லம் கட்ட வேண்டும் என்கிற தன்னுடைய ஆசையை இறைவாக்கினர் நாத்தானிடம் வெளிப்படுத்துகிறார். இது ஓர் அருமையான சிந்தனை என்று, இறைவாக்கினரும், ஆண்டவருடைய திருவுளம் எது? என்பதை அறிய நினைக்காமல், அவர் என்ன நினைக்கிறாரோ, அதை பதிலாக தருகிறார். தாவீதை உற்சாகப்படுத்துகிறார். ஆனால், அன்றிரவே ஆண்டவருடைய வார்த்தை நாத்தானுக்கு அருளப்படுகிறது. தாவீது அவருடைய நிலையை அறிந்து கொள்வதற்காக, அவருடைய தொடக்கநிலையிலிருந்து கடவுள் பல நிகழ்வுகளை எடுத்துக்காட்டுகிறார். சாதாரண ஆடு மேய்க்கிற சிறுவனாக இருந்த அவரை, கடவுள் யாரும் நினையாத அளவுக்கு உயர்த்தினார். அந்த உயர்ந்த நிலைக்குச் சென்றவுடன், தன் பழைய நிலையை தாவீது...

தலைநிமிர்ந்து நில்லுங்கள், உங்கள் மீட்பு நெருங்கி வருகிறது

திருப்பாடல் 25: 4 – 5ஆ, 8 – 9, 10 & 14 யார் தலைநிமிர்ந்து நிற்க வேண்டும்? யாருக்கு மீட்பு நெருங்கி வருகிறது? உலகம் எப்படி இருந்தாலும், இந்த உலகப்போக்கிலே வாழாமல், கடவுள் பயத்தோடு ஒரு சில மனிதர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களை இந்த உலகம் பரிகாசம் செய்கிறது. இப்படி விழுமியங்களோடு வாழக்கூடிய இவர்கள், வாழ்க்கையில் என்ன சாதித்துவிட்டார்கள்? என்கிற ஏளனம் அவர்களது பேச்சில் தெரிகிறது. இப்படி மற்றவர்கள், இந்த உலகப்போக்கின்படி வாழ்கிறவர்கள் பரிகசிக்கிறவர்களை, தலைநிமிர்ந்து நிற்கும்படியும், அவர்களுக்கு மீட்பு அண்மையில் இருக்கிறது என்றும், திருப்பாடல் ஆசிரியர் தெரிவிக்கிறார். ஆண்டவருடைய எல்லா நலன்களையும் பெற்றுக்கொள்ள வேண்டுமென்றால், நம்பிக்கையில் நிலைத்திருக்க வேண்டும் என்பதுதான் இந்த திருப்பாடலின் வரிகளில் வெளிப்படுகிறது. இன்றைக்கு பலர் நம்பிக்கையைப் பெறுகின்றனர். ஆனால், அந்த நம்பிக்கையில் நிலைத்திருக்கிறார்களா? என்றால், அது மிகப்பெரிய கேள்விக்குறியாகத்தான் இருக்கும். வாழ்க்கையில் ஒரு சில துன்பங்கள் வருகிறபோது, துவண்டு போகிறார்கள். வாழ்வின் வேதனையான...