சமத்துவ இயேசு
இயேசு புற இனத்து எல்லைப்பகுதியில் இருக்கிறார். ஏற்கெனவே தூய்மைச்சடங்கு மற்றும் சட்டங்களைப் பற்றிய தனது பார்வையைத் தெளிவுபடுத்தியிருக்கிறார். யார் என்ன நினைத்தாலும், எது உண்மையோ அதைத்துணிந்து போதித்திருக்கிறார். இப்போது புற இனத்தவர் மத்தியில் இயேசு இருக்கிறார். அடுத்து தனது பணி யாருக்கு இருக்கப்போகிறது என்பதை வெளிப்படுத்தும் அடையாளமாகக் கூட, இயேசுவின் தூய்மைச்சடங்குப்பற்றிய போதனை அமைந்திருக்கலாம். யூதர்கள் தீட்டான உணவு தங்கள் நாவில் படுவதையும், தீட்டான மக்களான புறவினத்தாரோடு உறவு கொண்டு வாழ்வதையும் வெறுப்பவர்கள். ஆனால், இயேசு அவர்கள் மத்தியில் இருக்கிறார். இயேசு வடக்குப்பகுதியில் புறவினத்து மக்கள் மத்தயில் இருப்பது, பாதுகாப்பு தேடிக்கூட இருக்கலாம் ஏனெனில், அவருக்கு எதிர்ப்பு வலுத்துக்கொண்டிருக்கிறது. தொடக்க முதலே பரிசேயர்களும், மறைநூல் அறிஞர்களும், இயேசுவை சட்டத்தை அழிக்க வந்தவராக குற்றம் சுமத்தினர். ஏரோது அரசன் தனது பதவிக்கு இயேசுவால் ஆபத்து வரப்போவதாக அறிந்து, அவர் மீது வெறியில் இருக்கிறான். அவருடைய சொந்த மக்களோ, அவர் மதிமயங்கிப்பேசுவதாக நினைத்தனர். இவர்களையெல்லாம்...