நோன்புடன் காத்திருப்போம்
மத்தேயு – 9 : 14-15 இத்தவக்காலம் நமக்குத் தரப்பட்டதன் நோக்கமே நாம் நம் பாவங்களிலிருந்து மனந்திரும்ப வேண்டும் என்பதற்காகவே. இயேசுவின் பாடுகளையும் அவரது இறப்பையும் நாம் நினைவிற்குக் கொண்டு வரவேண்டிய காலம். அவரின் பாடுகளோடு நம்மை ஐக்கியப்படுத்துகின்ற காலம். அவரோடு ஐக்கியமாக இன்னும் கூடுதல் ஆற்றல் தேவைப்படுகின்றது. இவ்வாற்றல் நோன்பிருத்தலில் கிடைக்கிறது. ஒருசந்தியும், நோன்பும் சமயச்சடங்குகளின் ஓர் அங்கமாகவே யூதர்களிடம் இருந்தது. அவர்களின் நோன்புகள் வெறும் வெளிச்சடங்குகளாயின. சிலர் பிறரிடம் புகழையும் பெயரையும் பெற வேண்டும் என்பதற்காகவே நோன்பிருந்தனர். இதனைச் சாடும் விதமாக இன்றைய நற்செய்தியில் ஆண்டவரின் வார்த்தைகள் அமைந்திருக்கின்றது. நோன்பிருக்க அடிப்படையில் ஒரு காரணமும், ஒரு காலமும் தேவைப்படுகிறது. இதனை இன்றைய வாசகத்தில் இயேசு இன்னும் தெளிவாகக் குறிப்பிடுகின்றார். இன்றைய நற்செய்தியில் அவர் இவ்வாறு கூறுவதன் மூலம் அவர் பழைய உடன்படிக்கைக்கு எதிராகச் செல்லவில்லை. மாறாக அதனை இன்னும் அர்த்தமுள்ளதாக்கி நிறைவு செய்கிறார். அவரே புதிய ஏற்பாடாகவும், புதிய...