தவக்காலமே அடையாளம்
லூக் 11: 29 – 32 நாம் தவக்காலத்தை ஆரம்பித்து இன்றோடு ஒரு வாரம் ஆகின்றது. நம்மில் பல பேர் இந்த ஒரு வாரத்தில் பல வேண்டுதல்களோடும் கருத்துகளோடும் செபித்திருப்போம். சில புதுமைகளை அடையாளங்களைக் கேட்டிருப்போம். சிலருக்கு அடையாளங்கள் அரங்கேறியிருக்கும், சிலருக்கு ஏதும் நிகழாமல் இருந்திருக்கும். இன்று நம்மில் பலபேர் அடையாளங்களைத் தேடியும் புதுமைகளுக்காக அங்குமிங்கும் ஓடிக்கொண்டும் தான் இருக்கின்றோம். இயேசுவைக் காட்டிலும், போதகரின் மீது நம்பிக்கை வைத்து அலைந்தோடும் கூட்டம் தான் இன்றைய மிகப்பெரிய அவலநிலை. இப்படிப்பட்ட நமக்கு இன்றைய நற்செய்தி நல்லதொரு செய்தி. முதலில் அடையாளம் என்பது என்ன என்பதை நுட்பமாக கவனிக்க வேண்டும். அடையாளம் என்பது கண்ணுக்கு தெரிகின்ற ஒன்றின் மூலம் கண்ணுக்கு தெரியாத ஒன்றைச் சுட்டிக்காட்டுவது. எ.கா:- 1. நாம் நம் திருப்பலியில் பயன்படுத்துகின்ற தூபம், நம் செபங்களும் இத்தூபத்தைப்போல ஆண்டவரை நோக்கி எழுப்பவேண்டும் என்பதன் அடையாளமே. 2. நற்கருணைப்பேழைக்கு அருகிலிருக்கும் அணையாத விளக்கு ஆண்டவர்...