அவருக்குரிய ‘ஒன்று’
லூக் 6 : 36 -38 இத்தவக்காலத்தில் மட்டுமல்லாது நம் ஒவ்வொரு ஆன்மீக முயற்சியும் பயிற்சியும் நம்மை புனித நிலைக்கு அழைத்துச் செல்வதே குறியாக இருக்கின்றது. கடவுள் நிலையிலிருந்து மனித நிலைக்கு தன்னை தாழ்த்தி இவ்வுலகிற்கு வந்த இறைமகனின் நோக்கமே, மனித நிலையிலிருந்த நம்மை அவருடைய மாண்புமிக்க, மாட்சிமிகுநிலைக்கு உயர்த்துவதே. புனித அத்தனாசியூஸ், “நாம் அனைவரும் அவரின் தெய்வீகத்தில் பங்கு பெறவே அவர் மனிதரானார்.” ;என்கிறார். பாவத்தைத்தவிர அனைத்திலும் அவர் நம்மைப்போலவே சோதிக்கப்பட்டார் (எபி 4:15) என்று இறைவார்த்தையும் கூறுகின்றது. திருப்பலியில் திருத்தொண்டர் சொல்லக்கூடிய முக்கியமான செபங்களில் ஒன்று இயேசு மனிதனாக வந்த நோக்கத்தை எடுத்துக்கூறுவதாக அமைக்கின்றது. காணிக்கைப் பொருட்களை திருப்பலியில் படைக்கும் பொழுது இரசத்தோடு ஒரு சொட்டு நீரினை சேர்க்கும் பொழுது திருத்தொண்டர் பின்வருமாறு கூறுவார், “கிறிஸ்து நமது மனித இயல்பில் பங்கு கொள்ள திருவுளம் ஆனார். இத்தண்ணீர், இரசம் இவற்றின் மறைபொருள் வழியாக நாமும் அவருடைய இறையியல்பில் பங்கு...