Category: தேவ செய்தி

இயேசுவின் விண்ணேற்றம்

சீடர்கள் மகிழ்வோடு யெருசலேம் திரும்புகிறார்கள். அந்த மகிழ்ச்சியோடு கடவுளைப்போற்றிப் புகழ்கிறார்கள். சீடர்களின் மகிழ்விற்கு என்ன காரணம்? எது இயேசுவின் பிரிவிலும் சீடர்கள் மகிழ்ச்சியாக இருக்க உதவியது? காரணம், இத்தனை ஆண்டுகளாக அவர்களோடு இருந்த இயேசு, இப்போது அவர்களிடமிருந்து நிரந்தரமாக பிரிகிறார். எனவே அந்த பிரிவு சீடர்களுக்கு வருத்தத்தைத்தான் கொடுத்திருக்க வேண்டும். ”யாரிடம் செல்வோம் இறைவா?” என்று தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருந்த சீடர்களால், எப்படி இயேசுவின் பிரிவை மகிழ்வோடு பார்க்க முடிந்தது? சீடர்களின் உறுதிப்பெற்றிருந்த விசுவாசம் தான் அவர்களுக்கு அந்த மகிழ்ச்சியைத் தந்தது? அது என்ன விசுவாசம்? இயேசு எங்கும் செல்லவில்லை. நம்மில் அவர் கலந்திருக்கிறார். இத்தனை நாட்களாக, அவர் ஒரு இடத்தில் மட்டும் இருந்தார். ஆனால், இப்போது எங்கு சென்றாலும் இருக்கிறார். அந்த எண்ணம் அவர்களை மகிழ்ச்சிப்படுத்தியது. வாழ்க்கையில் எது நடந்தாலும் அவர்களுக்கு கவலையில்லை. ஏனென்றால், உயிர்த்த இயேசு அவர்களோடு இருக்கிறார். அவர்களை வழிநடத்துகிறார். அவர்களை உற்சாகப்படுத்துகிறார். அவர்களுக்கு உந்துசக்தியாக இருக்கிறார்....

நம்முடைய நற்செய்திப்பணி

திருத்தூதர் பணி 18: 23 – 28 அப்போல்லா என்ற பெயருடைய யூதர் ஒருவரைப் பற்றிய செய்தி இன்றைய முதல் வாசகத்தில் நமக்குத் தரப்படுகிறது. அவர் சொல்வன்மை மிக்கவர் என்றும், மறைநூல்களில் புலமை வாய்ந்தவர் என்றும், அவருக்கு அடைமொழிகள் தரப்படுகிறது. இவற்றிற்கும் மேலான ஒரு பண்பும் அவருக்குத் தரப்படுகிறது. அதுதான் அவருடைய பணிவாழ்க்கையில், மிகச்சிறந்த பண்பாக இருக்க முடியும் என்று நினைக்கிறேன். அவர் ஆர்வமிக்க உள்ளம் கொண்டிருந்தார். ”ஆர்வமிக்க உள்ளத்தோடு இயேசுவைப் பற்றிய செய்தியைப்பிழையற அறிவித்தும் கற்பித்தும் வந்தார். இறைவனுடைய பணியைச் செய்வதற்கு நமக்கு முதலாவதாக ஆர்வம் இருக்க வேண்டும். எந்த ஒரு செயலையும் இரண்டு விதத்தில் நாம் செய்ய முடியும். ஏனோதானோவென்று வெறும் கடமைக்காக செய்வது முதல் வகை. செய்வதில் நிறைவோடு, ஆர்வத்தோடு செய்வது இரண்டாவது வகை. அப்போல்லோ இரண்டாவது வகையான மனிதராக இருக்கிறார். அந்த ஆர்வம் பல உதவி செய்யக்கூடிய நண்பர்களையும், கேட்கிறவர்களை கிறிஸ்துவின்பால் ஈர்க்கக்கூடியதாகவும் இருக்கிறது. திருப்பாடல்...

இறைவன் நம்மோடு இருக்கிறார்

திருத்தூதர் பணி 18: 9 – 18 கடவுளுடைய பணியை நாம் செய்கிறபோது, எதற்கும் அஞ்சத்தேவையில்லை. இறைவன் நம்மோடு இருக்கிறார் என்கிற ஆழமான செய்தியை, இன்றைய வாசகம் நமக்குத் தருகிறது. கடவுளின் பணி என்ன? நன்மை செய்வது கடவுளின் பணி. ஏனென்றால், கடவுள் நன்மையே உருவானவர். அப்படி நன்மை செய்கிறபோது, நிச்சயம் தீமையின் மொத்த உருவமாக இருக்கிற அலகை, நமக்கு பல சோதனைகளைத் தருவதற்கு தனக்கு சாதகமாக இருக்கிறவர்களை வைத்து, நம்மை பயமுறுத்தும். அப்படிப்பட்ட தருணத்தில், ஆண்டவர் நம்மோடு இருப்பதாக நமக்கு வாக்குறுதி கொடுக்கிறார். பவுல் கொரிந்து நகரில் ஆண்டவருடைய வார்த்தையை அறிவித்தபோது, அவருக்கு பலவிதமான நெருக்கடிகள் யூதர்களிடமிருந்து வரத் தொடங்கியது. அதற்கு முன்னரே, ஆண்டவர் காட்சியில் பவுலுக்கு தோன்றி, உறுதியாகவும், துணிவோடும் இருக்குமாறு பணிக்கிறார். கடவுளைப் பணியைச் செய்வது என்பது சாதாரண காரியம் அல்ல. பலவிதமான போராட்டங்களும், நெருக்கடிகளும் நிறைந்த வாழ்வுதான், கிறிஸ்துவுக்காக வாழும் வாழ்வு. இயேசு இந்த உலகத்தில்...

தன்னலமில்லாத வாழ்க்கை

திருத்தூதர் பணி 18: 1 – 8 ”உங்கள் அழிவுக்கு நீங்களே பொறுப்பு. இனிமேல் நான் பிற இனத்தாரிடம் செல்கிறேன்” என்று, பிற இனத்து மக்கள் நடுவில் தூய பவுல் கடவுளுடைய வார்த்தையை அறிவிக்கச் செல்கிறார். இதற்கு முந்தைய பகுதியில் பவுல் ஏதேன்ஸ் நகரில் நற்செய்தி அறிவித்ததைப் பார்த்தோம். ஏதேன்ஸ் நகரில் பவுல் துன்புறுத்தப்பட்டாரா? என்பது தெரியவில்லை. ஆனால், அங்கு அவர் சரியான முறையில் ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்பது உறுதி. அங்கிருந்து புறப்பட்டு கொரிந்து நகருக்கு வருகை தருகிறார். கொரிந்து நகரம் செல்வமிக்கதும், பிரமாண்டமானதுமாகும். பவுல் மிகச்சிறந்த கல்விமானாக இருந்தாலும், கூடாரம் செய்வது அவரது தொழில். அதனை அவர் ஏளனமாக நினைக்கவில்லை. தான் இவ்வளவு படித்திருக்கிறேன், கிறிஸ்துவால் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறேன், கடவுள் கொடுத்த வல்லமையைப் பயன்படுத்தி புதுமைகளைச் செய்கிறேன். எனவே, என்னோடு இருக்கிறவர்கள் எனக்கு செய்ய வேண்டிய காரியங்களைச் செய்ய வேண்டும் என்று, அவர் சோம்பேறித்தனம் படவோ, அடுத்தவரின் பணத்தில் தன்னுடைய வாழ்க்கையை நடத்தவோ...

அர்ப்பண வாழ்வு

திருத்தூதர் பணி 17: 15, 22 – 18: 1 திருத்தூதர் பவுல் முதன்முறையாக ஏதேன்ஸ் நகருக்குள் நுழைகிறார். கிறிஸ்தவ மறைப்பரப்பு பணியாளர்களிலேயே இவர் தான், முதலாவதாக இந்த நகரத்திற்குள் நுழைகிறார் என்று கூட சொல்லலாம். இந்த முதல் பயணம் அவருக்கு மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்தது என்று நாம் சொல்லிவிட முடியாது. ஆனால், ஒரு சிலர் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டதை நாம்பார்க்கிறோம். ”சிலர் நம்பிக்கை கொண்டு அவர்களுடன் சேர்ந்து கொண்டனர்” (17: 34). ஏதேன்ஸ் மிகப் பிரபலமான நகரம் என்பது நாம் அறிந்ததே. பலத்திற்கும், அறிவாற்றலுக்கும் பெயர் போனது. மிகப்பெரிய அறிவாளிகளும், அரசர்களும் இங்கிருந்து வந்திருக்க வேண்டும். அல்லது ஏதேன்ஸ் தொடர்புடையவர்களாக இருந்திருக்க வேண்டும். கிறிஸ்து பிறப்பிற்கு பல ஆண்டுகளுக்கு முன்னர், எகிப்திய காலனியாக இருந்து வந்தது. “மினர்வா“ என்கிற கிரேக்க கடவுளின் பெயரால், இது ஏதேன்ஸ் என்கிற பெயர் பெற்றது. பவுல் இயேசுவைப் பற்றிய நற்செய்தியை அவர்களுக்கு, அவர்களுடைய பிண்ணனியிலே அறிவிக்கிறார்....