Category: தேவ செய்தி

பகிர்வோம், இறையரசில் பங்குபெறுவோம்

பணக்கார இளைஞர் தன்னுடைய வாழ்க்கயைிலே சட்டத்தின் அடிப்படையில் அனைத்தையும் கடைப்பிடித்திருக்கிறார். ஆனால், ஆன்மீக அடிப்படையில் பார்த்தால், அதன் உள்ளர்தத்தையும் மறந்தவராக இருக்கிறார். பத்துக்கட்டளைகளை கடைப்பிடித்தவர், அதன் உள்ளர்த்தத்தையும் மறந்தவராக இருக்கிறார். தன்னை அன்பு செய்வது போல, கடவுளை அன்பு செய்வதையும் தன்னை அன்பு செய்வதைப்போல, சக மனிதர்களை அன்பு செய்வதையும் இணைத்துப்பார்க்கத் தவறிவிடுகிறார். அவருடைய தவறு, அவர் மனிதர்களை அன்பு செய்ததை விட செல்வத்தை அதிகமான அன்பு செய்கிறார். மற்றவர்களை அன்பு செய்வதைவிட தன்னை அதிகமாக அன்பு செய்கிறார். இறையாட்சிக்கு தகுதிபெறுவதற்கு தடையாக இருப்பது இவைகள்தான். இந்த உலகத்தின் மீது பற்று இருந்தால், மறுஉலகில் செல்வம் சேர்க்க முடியாது என்பதுதான் இயேசு தருகிற செய்தி. தங்களையும், தங்கள் பொருட்களையும் முன்னிறுத்துகிறவர்கள், கடவுளை புறந்தள்ளுகிறார்கள். அதற்கு உதாரணம் இந்த இளைஞர். கடவுளை முன்னிறுத்துவோம். ~ அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

உறுதியான எண்ணம்

நம்பிக்கை என்கிற வார்த்தையே ஒரு நேர்மறையான வார்த்தையாக இருக்கிறது. அந்த வார்த்தையே ஒருவரைப் புகழ்ந்து சொல்வதற்கு போதுமானது. ஆனால், இயேசு அதனைவிட பெரிய வார்த்தையைப் பயன்படுத்துகிறார். ”உமது நம்பிக்கை பெரிது” என்று சொல்கிறார். இதனுடைய பொருள் என்ன? இதனை நாம் எப்படி புரிந்து கொள்ளலாம்? இங்கே ”பெரிது” என்கிற வார்த்தையை ”உறுதி” என்கிற அர்த்தத்தோடு பொருத்திப்பார்த்தால், சரியானதாக தோன்றுகிறது. அந்த பெண்ணின் நம்பிக்கைக்கு பல சோதனைகள் வருகிறது. இயேசுவின் வார்த்தைகளை சற்று எதிர்மறையாக எடுத்தாலும், நிச்சயம் நம்பிக்கையை அசைத்துப் பார்ப்பதாக அமைந்துவிடும். ஆனால், அந்த பெண் உறுதியாக இருக்கிறார். விடாப்பிடியாக இருக்கிறார். எதற்கும் சாயாது, துணிவோடு இருக்கிறார். காரணம், எதை அடைய வேண்டுமோ, அந்த இலக்கில் அவள் உறுதியாக இருக்கிறாள். இப்போதைக்கு அவளது மகள் குணமடைய வேண்டும். அதற்காக எதனையும் செய்வதற்கு தயாராக இருக்கிறார். கொண்ட எண்ணத்தில் பற்றுறிதியாய் இருக்கிறாள். அந்த எண்ணம் தான், இயேசுவுக்கு ஆச்சரியத்தைக் கொடுக்கிறது. அதற்கான பலனையும்...

மனிதம் மலர நம்மால் இயன்றதைச்செய்வோம்

யூத இனம் ஆண் ஆதிக்க சமுதாயச்சிந்தனை கொண்டது. பெண்களும், குழந்தைகளும் வெறும் பொருட்களாகவே கருதப்பட்டனர். அவர்களுக்கென்று எந்தவித உரிமையும் கிடையாது. அப்படிப்பட்ட ஆணாதிக்க சமுதாயத்தில் பிறந்த இயேசு நமக்கு புதிய படிப்பினையைத்தருகிறார். தான் ஆணாதி்க்கச்சமுதாயத்தில் பிறந்திருந்தாலும், அந்த ஆணாதிக்கச்சிந்தனைகள் தன்னை நெருங்குவதற்கு, இயேசு ஒருபோதும் அனுமதித்தது இல்லை. மனிதர்கள் ஒவ்வொருவரும் மதிக்கப்படக்கூடியவர்கள் என்பதுதான் அது. நிச்சயமாக குழந்தைகளை இயேசுவிடத்திலே கொண்டுவந்தவர்கள் குழந்தைகளின் தாய்மார்களாகத்தான் இருக்க வேண்டும். இயேசு அவர்களை அன்போடு வரவேற்கிறார். அவர்களுக்கு மதிப்பு கொடுக்கிறார். அவர்களுக்கு ஆசீர் வழங்குகிறார். இந்த உலகத்தில் பிறந்திருக்கிற ஒவ்வொருவரும் கடவுளின் பிள்ளைகள். நம் அனைவருக்கும் அவர்தான் தந்தை. அப்படியிருக்க இந்த சமுதாயப்பாகுபாடுகளில் எப்படி உண்மை இருக்க முடியும்? அதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? சீடர்கள் ஆணாதிக்கச்சிந்தனையை வெளிப்படுத்துகிறவர்களாக இருக்கிறார்கள். ஆனால், இயேசு அந்த சிந்தனையை முற்றிலுமாக எதிக்கிறவராக இருக்கிறார். மற்றவர்களை அடிமைப்படுத்துகிற எந்தவொரு வேறுபாடும், நொறுக்கப்பட வேண்டும். நாமும், இயேசுவைப்பின்பற்றி வேறுபாடுகளைக்களைவோம். மனிதத்தை உயர்த்திப்பிடிப்போம்....

மேன்மை

குருத்துவத்தின் மேன்மை குருத்துவத்தின் மாண்பு இந்த நற்செய்தி (மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 19: 3-12) வெளிப்படுகிறது. குருத்துவம் என்பது தேர்ந்து கொள்வது அல்ல. அது கொடுக்கப்படக்கூடிய கொடை. கடவுளின் அருள் இல்லாமல் யாரும் குருத்துவத்தைப் பெற்று, வாழ்ந்துவிட முடியாது. அது ஒரு பெறுதற்கரிய பேறு. இந்த மகிமையை இயேசு நமக்கு தருகிறார். திருமணத்தின் மகிமையை, ஆண், பெண் திருமண உறவு, எந்த அளவுக்கு புனிதமானது என்பதை வலியுறுத்தும் இயேசு, அதோடு கூட, குருத்துவத்தின் புனிதத்தன்மையையும் சொல்வது அற்புதமானது. குருத்துவம் என்பது கடவுளுக்கான முழுமையான அர்ப்பணம். கடவுள் பணிக்காக, கடவுளின் மக்களுக்காக தன்னையே முழுமையாக அர்ப்பணித்து, அதற்காக தன் முழு ஆற்றலையும் கொடுப்பது. அந்த குருத்துவப் பணியில் கடவுளின் அளவுகடந்த, அன்பும், அருளும் நிறைவாகக் கிடைக்கிறது. குருத்துவம் என்பது எளிதான பணி அல்ல. அதனை கடவுள் அருளின்றி யாரும் வாழ்ந்துவிடவும் முடியாது. அதன் மகிமை போற்றப்பட வேண்டும். அந்த பணியை ஏற்றிருக்கிறவர்களுக்கு,...

மன்னிப்பின் அர்த்தம்

மன்னிப்பு என்பது பொதுவான சூழ்நிலைகளில் புரிந்து கொள்வதற்கு கடினமான வார்த்தை. இன்றைக்கு செய்யக்கூடாது எல்லாச்செயல்களையும் செய்துவிட்டு, ”இயேசு மன்னிக்கச் சொல்லியிருக்கிறார், நீங்கள் மன்னியுங்கள்” என்று சொல்கிற, தவறான போக்கு தான், மக்கள் மத்தியில் இருந்து கொண்டிருக்கிறது. இது இயேசு சொல்கிற மன்னிப்பை, களங்கப்படுத்தக்கூடிய வார்த்தைகளாக இருக்கிறது. மன்னிப்பு என்கிற வார்த்தையைப் பேசுவதற்கு முன்னால், “மனமாற்றம்“ என்கிற வார்த்தை, அதிகமாகப் போதிக்கப்பட வேண்டும். மன்னிப்பு என்பது ஏதோ மானியம் அல்ல. அது ஒரு கொடை. பெறுதற்கரிய கொடை. மன்னிப்பு என்பது மலிவுச்சரக்காகப் பெறக்கூடிய அல்ல. அதனை அடைவதற்கு, முழுமையான மனமாற்றம் தேவை. மன்னிப்பை வெகுசொற்பமாக வாங்கிவிடலாம், என்கிற மனநிலை மக்கள் மத்தியில் அதிகமாக இருக்கிறது. அந்த நினைப்பு தான், மக்கள் மன்னிப்பு பற்றிய தவறான சிந்தனைகள் உருவாவதற்கு காரணமாக அமைந்துவிடுகிறது. உண்மையான மனமாற்றம் தான், மன்னிப்பைப் பெறுவதற்கான சரியான தகுதியை நமக்குக் கொடுக்கும். அந்த மனமாற்றத்தைத்தான் கடவுள் நம்மிடமிருந்து எதிர்பார்க்கிறார். நாம் கடவுளிடமிருந்து...