வாழ்க்கையைப் பற்றிய தெளிவு
இந்த உலகத்தில் நடக்கும் மரணங்களை இயற்கை மரணம், எதிர்பாராத மரணம், தற்கொலை மரணம் என்று மூன்று வகையாகப் பிரிக்கலாம். மரணம் எப்படி வந்தாலும், நமக்கு அது பயங்கரமான அனுபவத்தைத் தருகிறது. நன்றாக வாழ்ந்து, வயதாகி நேரக்கூடிய மரணமே நமக்கு கசப்பான அனுபவத்தைத் தருகிறபோது, மற்ற வகையான மரணங்களை நாம் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. ஒவ்வொரு மரணமும், நாம் எந்த வேளையிலும் தயாராக இருக்க வேண்டும் என்ற செய்தியைத் தந்தாலும், மனித மனம் அந்த செய்தியை உள்வாங்குவது கிடையாது. வெகு விரைவாகவே, அதனை மறந்துவிடும். இந்த விழிப்புணர்வு மரணத்தைப் பற்றி நாம் பயப்படுவதற்காக அல்ல, மாறாக, நமது நிலையை நாம் எப்போதும் உணர வேண்டும் என்பதற்காகவே என்று, இன்றைய நற்செய்தி வாசகம் கூறுகிறது. வாழ்வைப் பற்றிய விழிப்புணர்வு, புரிதல், தெளிவு மக்களிடையே காண்பது அரிதிலும் அரிதாகவே காணப்படுகிறது. எதற்காக வாழ்கிறோம்? என்கிற சிந்தனையே அற்றவர்களாகத்தான், பலபேர் இருக்கிறோம். இந்த தெளிவு இருந்தால், நாம்...