Category: தேவ செய்தி

எலிசபெத்தம்மாளின் தாழ்ச்சி

”என் ஆண்டவரின் தாய் என்னிடம் வர நான் யார்?” என்று எலிசபெத்தம்மாள் அன்னை கன்னிமரியாளைப் பற்றி சொல்கிறார். இதே தொணியில் நாம் இயேசுவின் வாழ்வில் செய்த ஒரு புதுமையிலும் பார்க்கிறோம். நூற்றுவர் தலைவன் தன்னுடைய பிள்ளைக்காக மன்றாடுகிறபோது, ”நீர் என் இல்லத்திற்குள் அடியெடுத்து வைக்க நான் தகுதியற்றவன்” என்று சொல்கிறார். இந்த இரண்டு வார்த்தைகளும் கிட்டத்தட்ட ஒரே தொணியில் உதிர்க்கப்பட்ட வார்த்தைகள். இந்த இரண்டு வார்த்தைகளும் நமக்கு ஒரே செய்தியைத்தான் தருகின்றன. எலிசபெத்தம்மாள் அன்னை மரியாளை விட வயதில் மூத்தவர். குழந்தை இல்லாமல் இருந்து, இப்போது குழந்தை பாக்கியத்தைப் பெற்றிருக்கிறார். இதுநாள் வரை இந்த சமூகம் அவரை, “மலடி“ என்ற பட்டப்பெயர் வைத்து அழைத்து வந்திருக்கிறது. தாங்க முடியாத வேதனையை நிச்சயம் எலிசபெத்தம்மாள் அனுபவித்திருப்பார். இவ்வளவு கடினமான சூழ்நிலைகளுக்கு மத்தியிலும், தான் மகிழ்வதற்கு எவ்வளவோ காரியங்கள். காரணங்கள் இருந்தாலும், தாழ்ச்சியோட தன்னை விட வயதில் சிறியவராக இருக்கக்கூடிய அன்னை கன்னிமரியாளை, உள்ளத்தில்...

அனைத்தும் அவருக்கே சொந்தம்

திருப்பாடல் 24: 1 – 2, 3 – 4, 5 – 6 மனிதன் தன்னுடைய வாழ்நாளில் செல்வம், சொத்து சேர்க்க ஆசைப்படுகிறான். தனக்கானது என்று அவன் சேர்த்து வைக்கிறான். அதற்கு உரிமையும் கொண்டாடுகிறான். இந்த உலகத்தில் இருக்கிற எல்லாரும் இன்புற்றிருக்க வேண்டும் என்கிற எண்ணம் மனிதனிடத்தில் இல்லை. தான் மட்டும் நன்றாக வாழ்ந்தால் போதும் என்று நினைக்கிறான். அதற்கு ஏற்றாற்போல, தன்னுடைய வாழ்வை அவன் நகர்த்துகிறான். இன்றைய திருப்பாடல், இப்படிப்பட்ட வாழ்க்கையை வாழ்கிற மனிதர்களுக்கு ஓர் ஆழமான உண்மையை எடுத்துரைக்கிறது. இந்த உலகத்தில் இருக்கிற அனைத்துமே இறைவனுக்கு சொந்தம் என்கிற உண்மை தான் அது. இந்த உலகம் இறைவனால் படைக்கப்பட்டது. இந்த உலகத்தில் வாழ்கிற மனிதர்களும், இறைவனால் படைக்கப்பட்டவர்கள் தான். இறைவன் தான், அனைத்திற்கும் தொடக்கமும், முடிவுமாக இருக்கிறார். இந்த பூமியில் இருப்பது மட்டுமல்ல, இந்த மிகப்பெரிய வான்வெளியின் தொடக்கம் அவரே. நாம் அனைவரும் இறைவனுக்குச் சொந்தமானவர்கள் என்கிற...

அர்ப்பணத்தின் நிறைவாக வாழ்ந்த செக்கரியா

குற்றமற்றவர்களின் வாழ்வில் எதற்காக சோதனை? ஒழுக்கத்தோடு, ஒழுங்குகளுக்குக் கட்டுப்பட்டு வாழக்கூடியவர்களுக்கு எதற்காக கடினமான தருணங்கள்? இதுபோன்ற கேள்விகள் நாம் நேர்மையாக வாழ்கிறபோது, நமது உள்ளத்தில் எழக்கூடியவை. இந்த சோதனைகள் நமக்கு மட்டும்தானா? இல்லை. நம்மைப்போன்று வாழக்கூடிய எண்ணற்ற மனிதர்களுக்கும் நடந்திருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு மனிதர் தான் இன்றைய நற்செய்தியில் நாம் காணும் செக்கரியா. செக்கரியா கடவுள் முன்னிலையில் குற்றமற்றவராய் வாழ்ந்தார் என்று சொல்லப்படுகிறது. கடவுளுக்கு அஞ்சி வாழ்ந்தவர். ஒழுங்களுக்கு ஏற்ப தனது வாழ்வை அமைத்துக்கொண்டவர். அப்படிப்பட்டவருக்கு குழந்தை இல்லை. எத்தனை ஆண்டுகள் நம்பிக்கையோடு வாழ்ந்திருப்பார். அந்த நம்பிக்கை வீண்போய் விட்டது. இருவரும் குழந்தை பெறக்கூடிய வயதை தாண்டியிருந்தார்கள். ஆனாலும், செக்கரியா கடவுள் முன் பணி செய்வதை பாக்கியமாக எண்ணி, தொடர்ந்து அர்ப்பண உணர்வோடு தன் வாழ்வை வாழ்ந்து கொண்டிருக்கிறார். செக்கரியாவின் பொறுமை நமக்கு வியப்பைக் கொடுத்தாலும், கடவுளின் வல்லமை வெளிப்படுதவற்கு கூட, இப்படிப்பட்ட தருணங்கள் தேவையிருக்கிறது என்பதுதான் இங்கே புலப்படுகிறது. ஆக,...

பேறுபெற்ற கணவர்

அருமையான ஆனந்தம் நிறைந்த குடும்ப வாழ்வை, ஆட்கள் பலர் குறுக்கிட்டு கெடுத்து குட்டிட் சுவராக்கிவிடுவர். சில விரும்பத்தகாத நிகழ்ச்சிகள் சம்பவங்கள், கலையிழந்த மாளிகையாக்கிவிடும். சில ஆசைகள், கொள்கைகள் வண்ணம் காட்டி கண்ணை மறைத்து, குடும்பத்தை காரிருளில் தடுமாற வைத்துவிடும். ஆண்டவனும் கூட சில நேரங்களில் விழையாடலாம். இது போன்ற நேரங்களில் கட்டப்பஞ்சாயத்து, காவல்துறை, கோர்ட், விவாகரத்து என்ற விபரீதங்களில் சிக்கி, பெருமைமிக்க குடும்பங்களும் சிறுமையடைகின்றன. யோசேப்பு, மரியாவின் குடும்பமும் அதற்கு விதி விலக்கல்ல. இறைவனின் திட்டத்தை புறியாதவரையில் புனிதனின் குடும்பமும் தப்பமுடியாது.மனைவியை விலக்கிவிடலாமா என்று சிந்திக்கிறார் யோசேப்பு. நேர்மையாளர். கடவுள் பக்தர். தன் குழப்பத்திற்குத் தீர்வு காண இறை உதவியைத் தேடுகிறார். அமைதியில், தூக்கத்தில், தியானத்தில் இறை உதவி, வெளிப்பாடு, தெளிவு அவருக்கு கிடைக்கிறது. இறை திட்டத்தை தெறிந்து கொள்கிறார். சமுதாயத்தில் தன் பங்கினை உணர்கிறார். தன் குடும்பச் சுமை இப்பொழுது சுவையாகத் தோன்றுகிறது. குடும்பச் சுமைகள் நம்மை அழுத்தும் வேளைகளில்...

எல்லாத்தலைமுறையினரும் என்னைப் பேறுபெற்றவர் என்பர்

  அன்னை மரியாள் உள்ளப்பூரிப்போடு இந்த பாடலை பாடுகிறார் (லூக்கா 1: 47 – 48, 49 – 50, 53 – 54). இந்த பாடல் பழைய ஏற்பாட்டில், எல்கானாவின் மனைவி அன்னா பாடிய பாடல். அந்த பாடலை, அன்னை மரியாளுக்கு ஏற்ற வகையில், லூக்கா நற்செய்தியாளர் பொருத்துகிறார். கடவுளின் மகளை கருத்தாங்கப் போகிற பூரிப்பு, அன்னை மரியாளின் உள்ளத்தில் நிரம்பியிருக்கிறது. அன்னை மரியாள் கலக்கத்திலிருந்து விடுதலைப் பெற்ற மகிழ்ச்சியில் பாடுகிறார். ”நான் கன்னி ஆயிற்றே? இது எங்ஙனம் நிகழும்” என்கிற சந்தேகம், வானதூதரால் நிவர்த்தி செய்யப்பட்டவுடன், கடவுளின் மகனைத் தாங்குவதற்கு இறைவன் தனக்கு தந்திருக்கிற, இந்த வாய்ப்பை எண்ணிப் பார்த்து, அவர் மகிழ்ச்சியோடு பாடுகிறார். இனி வரக்கூடிய எல்லா தலைமுறையினரும், அன்னை மரியாளைப் போற்றுவர் என்று, எதற்காக அன்னை பாடுகிறார்? அன்னை மரியாள் தன்னை தகுதியற்ற நிலைக்கு ஒப்பிட்டுப் பேசுகிறார். ஒரு பெண்ணாக, சமூகத்தின் பொருளாதாரப் பார்வையிலும் சாதாரணமானவராக...