எலிசபெத்தம்மாளின் தாழ்ச்சி
”என் ஆண்டவரின் தாய் என்னிடம் வர நான் யார்?” என்று எலிசபெத்தம்மாள் அன்னை கன்னிமரியாளைப் பற்றி சொல்கிறார். இதே தொணியில் நாம் இயேசுவின் வாழ்வில் செய்த ஒரு புதுமையிலும் பார்க்கிறோம். நூற்றுவர் தலைவன் தன்னுடைய பிள்ளைக்காக மன்றாடுகிறபோது, ”நீர் என் இல்லத்திற்குள் அடியெடுத்து வைக்க நான் தகுதியற்றவன்” என்று சொல்கிறார். இந்த இரண்டு வார்த்தைகளும் கிட்டத்தட்ட ஒரே தொணியில் உதிர்க்கப்பட்ட வார்த்தைகள். இந்த இரண்டு வார்த்தைகளும் நமக்கு ஒரே செய்தியைத்தான் தருகின்றன. எலிசபெத்தம்மாள் அன்னை மரியாளை விட வயதில் மூத்தவர். குழந்தை இல்லாமல் இருந்து, இப்போது குழந்தை பாக்கியத்தைப் பெற்றிருக்கிறார். இதுநாள் வரை இந்த சமூகம் அவரை, “மலடி“ என்ற பட்டப்பெயர் வைத்து அழைத்து வந்திருக்கிறது. தாங்க முடியாத வேதனையை நிச்சயம் எலிசபெத்தம்மாள் அனுபவித்திருப்பார். இவ்வளவு கடினமான சூழ்நிலைகளுக்கு மத்தியிலும், தான் மகிழ்வதற்கு எவ்வளவோ காரியங்கள். காரணங்கள் இருந்தாலும், தாழ்ச்சியோட தன்னை விட வயதில் சிறியவராக இருக்கக்கூடிய அன்னை கன்னிமரியாளை, உள்ளத்தில்...