அஞ்சாதீர், நம்பிக்கையை விடாதீர்!
இன்றைய நற்செய்தி வாசகம் (மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 5: 21-43) உணர்ச்சிகளின் குவியலாக இருக்கிறது. துயரம்: யாயிரின் மகள் சாகும் தறுவாயில் இருந்ததால், இயேசுவை நாடி வருகிறார். எவ்வளவு நெருக்கடியான மனநிலையில் இருந்தார் என்றால், இயேசுவின் காலிலேயே விழுந்துவிட்டார். அச்சமும், அவநம்பிக்கையும்: யாயிரின் மகள் இறந்துவிட்ட செய்தியைக் கொண்டுவந்த ஆள்கள் “போதகரை இன்னும் ஏன் தொந்தரவு செய்கிறீர்?” என்று சொல்லி, அவருடைய நம்பிக்கையையும், மனவலிமையையும் குலைக்கிறார்கள். ஊக்கம்: இயேசுவோ “அஞ்சாதீர், நம்பிக்கையை மட்டும் விடாதீர்” என்று சொல்லி அவருக்கு ஊக்கமூட்டி, உடன் செல்கிறார். அழுகை, துயரம்: இறந்த வீட்டில் ஒப்பாரியும், ஓலமும், புலம்பலும் நிலவுகின்றன. துணிவான நம்பிக்கை: “சிறுமி இறக்கவில்லை, உறங்குகிறாள்” என்னும் இயேசுவின துணிச்சலும், நம்பிக்கையும் நிறைந்த சொற்கள். நகைப்பு: மக்களின் நம்பிக்கை இல்லாத நகைப்பு வியப்பும், மலைப்பும்: இயேசு சிறுமியை உயிர்ப்பித்தபோது, அங்கிருந்தோர் யாவரும் “மலைத்துப்போய் மெய்ம்மறந்து நின்றார்கள்”. இத்தனை உணர்வுகளுக்கும் நடுநாயகமாக விளங்குவது இயேசுவின் நம்பிக்கையும்,...