Category: தேவ செய்தி

உங்கள் மூதாதையர் என்னைச் சோதித்தனர்

திருப்பாடல் 95: 1 – 2, 6 – 7, 7b– 9 ”உங்கள் மூதாதையர் என்னைச் சோதித்தனர்” விடுதலைப்பயணம் 17 வது அதிகாரத்தில் இஸ்ரயேல் மக்கள் எகிப்திலிருந்து திரும்பி வந்த பயணத்தைப் பார்க்கிறோம். இஸ்ரயேல் மக்கள் இரபிதீம் என்கிற இடத்தில் பாளையம் இறங்கினர். அங்கே அவர்களுக்கு குடிக்க தண்ணீர் இல்லை. எங்கும் வறண்ட பாலைநிலம். மக்கள் மோசேக்கு எதிராகவும், கடவுளுக்கு எதிராகவும் முணுமுணுக்கத் தொடங்கினர். ஆண்டவர் அந்த பாலைநிலத்திலும் அற்புதமாக அவர்கள் தண்ணீர் பருகச்செய்தார். இந்த நிகழ்ச்சியில், இஸ்ரயேல் மக்களைச் சோதனைக்குள்ளாக்கியதாக நாம் பார்க்கிறோம். அது என்ன சோதனை? கடவுள் இவ்வளவுக்கு இஸ்ரயேல் மக்களுக்கு நன்மைகளைச் செய்திருக்கிறார். ஆனால், இஸ்ரயேல் மக்கள் அதனை கருத்தில் கொள்ளாமல், அற்ப காரணங்களுக்காக கடவுளையே சோதித்தனர். கடலை அற்புதமாக இரண்டாகப் பிளக்கச்செய்த கடவுளுக்கு, எகிப்திய நாட்டையே கதிகலங்க வைத்த இறைவனுக்கு, அவர்களின் தாகத்தைத் தணிப்பது பெரிய காரியமா என்ன? அவர்கள் பொறுமையாக, கடவுளின் வல்லமையை...

எருசலேமே! ஆண்டவரைப் போற்றுவாயாக

திருப்பாடல் 147: 12 – 13, 15 – 16, 19 – 20 ”எருசலேமே! ஆண்டவரைப் போற்றுவாயாக” எருசலேம் என்று சொல்லப்படுகிற வார்த்தை, இஸ்ரயேல் மக்களைக் குறிக்கக்கூடியதாக இருக்கிறது. எருசலேமில் அமைந்துள்ள ஆலயம் தான், கடவுள் வாழும் இல்லமாகக் கருதப்பட்டது. எருசலேமை யாரும் அழித்துவிட முடியாது என்கிற நம்பிக்கை, இஸ்ரயேல் மக்களின் உள்ளங்களில் ஆழமாகப் பதிந்திருந்தது. எருசலேம் படைகளின் ஆண்டவர் வாழும் கூடாரமாக அமைந்திருந்தது. அதுதான் பாதுகாப்பான இடமாக கருதப்பட்டது. எருசலேம் நகரம் வழிபாட்டின் மையமாகவும் விளங்கியது. இப்படி பல சிறப்புக்கள் வாய்ந்த எருசலேம் நகரம், ஆண்டவரைப் போற்ற வேண்டும் என்று திருப்பாடல் ஆசிரியர் வேண்டுகோள் விடுக்கிறார். அதாவது, இஸ்ரயேல் மக்கள் கடவுளைப் போற்ற வேண்டும் என்பதுதான் இதனுடைய மையப்பொருளாக இருக்கிறது. இஸ்ரயேல் மக்கள் கடவுளைப் போற்றுவதற்கு என்ன இருக்கிறது? எதற்காக அவர்கள் கடவுளைப் போற்ற வேண்டும்? கடவுள் இஸ்ரயேல் மக்களை முழுமையாக அன்பு செய்கிறார். மற்ற இனத்தவரை விட,...

ஆண்டவர் பாவிகளுக்கு நல்வழியைக் கற்பிக்கின்றார்

திருப்பாடல் 25: 4 – 5, 6 – 7, 8 – 9 ”ஆண்டவர் பாவிகளுக்கு நல்வழியைக் கற்பிக்கின்றார்” கடவுள் எப்படிப்பட்டவர்? என்பது பற்றி யூதர்கள் பலவிதமான எண்ணங்களைக் கொண்டிருந்தனர். கடவுளை நீதிபதியாக, தண்டிக்கிறவராக, கடுமையானவராக அவர்கள் எண்ணிக் கொண்டிருந்தார்கள். பாவம் செய்தவர்கள் நிச்சயம் தண்டனையைப் பெறுவார்கள் என்று நினைத்துக்கொண்டிருந்தார்கள். இப்படிப்பட்ட பார்வையைக் கொண்டிருந்த யூதர்கள், கடவுளின் மற்றொரு பக்கத்தை சரியாக கணிக்கத் தவறிவிட்டனர் என்றே சொல்லலாம். கடவுளைப் பற்றிய பார்வையின் மறுபக்கத்தை, இன்றைய திருப்பாடல் வரிகள் நமக்கு எடுத்துக்காட்டுகிறது. கடவுள் பாவிகளுக்கு நல்வழி காட்டுகிறவராக சித்தரிக்கப்படுகிறார். கடவுள் பாவிகள் தண்டனை பெற வேண்டும் என்று நினைப்பவரல்ல, மாறாக, அவர்கள் திருந்தி நல்வாழ்க்கை வாழ வேண்டும் என்று விரும்புகிறவர். நாம் செய்கிற பாவங்களுக்கு நிச்சயம் தண்டனை உண்டு. ஆனால், அந்த பாவங்களுக்காக மனம் வருந்துகிறபோது, மன்னிப்பும் உண்டு என்பதை, இந்த வரிகள் நமக்கு எடுத்துரைக்கின்றன. ஆக, பாவம் என்பதற்கு மாற்றாக,...

யார்தான் மீட்புப்பெற முடியும்?

இயேசு தான் வளர்ந்த ஊராகிய நாசரேத்தில் போதிக்கிறார். நாசரேத் என்பது ஒரு கிராமம் அல்ல. அது ஒரு பட்டணம் அல்லது நகரம். ஏறக்குறைய இருபதாயிரம் பேர் அங்கே வசித்து வந்தனர். இயேசுவின் போதனையைக்கேட்டு அவருடைய சொந்தமக்கள் இயேசுவிடத்தில் கோபப்படுகிறார்கள். இயேசு அப்படி என்ன தவறு செய்தார்? அவருடைய போதனையில் மக்களைக் கோபப்படுத்துகின்ற அளவுக்கு கூறப்பட்ட செய்தி என்ன? சீதோனும், சிரியாவும் புற இனத்துப்பகுதிகள். இயேசு பிறஇனத்தவரை உயர்த்திப்பேசுவதுதான் மக்களுக்குப் பிடிக்கவில்லை. ஏனெனில், யூதர்கள் தாங்கள் தான் கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்ட இனம், கடவுள் பார்வையில் தாங்கள்தான் உயர்ந்தவர்கள் என்ற எண்ணத்தில் வாழ்ந்து வந்தனர். எனவே, யூதர் அல்லாத மற்றவர்களை அவர்கள் இழிவாகக்கருதினர். இப்படித்தாங்கள் இழிவாகக்கருதும் பிறஇனத்தவரை, யூதரான இயேசு, புகழ்ந்துகூறியதை அவர்களால் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை. எனவே, அவரை வெளியே துரத்தி, மலைஉச்சியிலிருந்து கீழே தள்ளிவிட முயன்றனர். இயேசு அவர்களிடம் இருந்து தப்பி, அங்கிருந்து போய்விடுகிறார். இயேசு எதற்காகப் பிற இனத்தவரை உயர்த்திப்பேச வேண்டும்? எதற்காக...

உண்மையான வழிபாடு

உண்மையான வழிபாடு என்றால் என்ன? என்பதற்கு, இயேசு சமாரியப்பெண் உடனான இந்த உரையாடலில் நமக்குப் புரிய வைக்கிறார். சமாரியர்கள் முதல் ஐந்து புத்தகங்களை ஏற்றுக்கொண்டார்கள். ஆனால், இறைவாக்கினர் நூல்களையோ, திருப்பாடலையோ ஏற்றுக்கொள்ளவில்லை. யூதப்போதகரின் கருத்துப்படி, சமாரியர்கள் மூடநம்பிக்கைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தனர். அவர்களின் வழிபாடு பயத்தின் அடிப்படையில் அமைந்திருந்தது. அன்பின் அடிப்படையில் அல்ல. அவர்கள் வணங்கிய பல தெய்வங்களில் யாவே இறைவனும் இடம்பெற்றிருந்தார். அதுவும் பயத்தின் அடிப்படையில் தான். கடவுளை நாம் பயத்தின் அடிப்படையில் வணங்குவது சரியான வழிபாடாக இருக்க முடியாது. கடவுள் அன்புமிக்கவர். கடவுள் இரக்கமிக்கவர். கடவுள் நம்மை பயமுறுத்துகிறவர் கிடையாது. மாறாக, நாம் தவறு செய்தாலும், நம்மை தொடர்ந்து அன்பு செய்கிறவர். நம்மை வழிநடத்துகிறவர். கடவுள் அன்பானவர் என்ற நம்பிக்கை நமக்கு இருந்தால்தான், நாம் அவரை சுதந்திரமாக வழிபட முடியும். இறுக்கம் தளர்ந்து, உண்மையான மனத்தோடு. முழு ஆன்மாவோடு அவரை நாம் வழிபடுவோம். பயத்தின் அடிப்படையில் வழிபடுவது உண்மையான...