ஆண்டவர் திருச்சட்டப்படி நடப்போர் பேறுபெற்றோர்
திருப்பாடல் 119: 23 – 24, 26 – 27, 29 – 30 ”ஆண்டவர் திருச்சட்டப்படி நடப்போர் பேறுபெற்றோர்” இறைவன் மோசே வழியாக இஸ்ரயேல் மக்களை தான் வாக்களித்த நாட்டிற்கு வழிநடத்தினார் என்பதை, மீட்பின் வரலாறு நமக்கு தெளிவாக உணர்த்துகிறது. இந்த மீட்பின் வரலாற்றில் பல இலட்சக்கணக்கான மக்களை வழிநடத்துவது என்பது எளிதான காரியமல்ல. அவர்களைக் கட்டுக்கோப்பாக வன்முறையில்லாமல், பாதுகாப்பாக வழிநடத்த வேண்டுமென்றால், இறைவனின் துணையும், அவர் கொடுத்திருந்த வழிமுறைகளையும் கடைப்பிடிப்பது அவசியமாகிறது. இத்தகைய எண்ணத்தை வலியுறுத்தக்கூடிய வகையில் அமைந்ததுதான், இந்த திருப்பாடல். கடவுளின் திருச்சட்டத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று திருப்பாடல் ஆசிரியர் வலியுறுத்துகிறார். கடவுளின் சட்டப்படி நாம் நடக்கிறபோது, நமது வாழ்க்கையில் நாம் இடறி விழமாட்டோம். கடவுளின் சட்டங்களைக் கடைப்பிடிப்பது எளிதானது அல்ல. ஆனால், நமது வாழ்க்கையில், நாம் துணிவோடு நடப்பதற்கு, அது வழிசெய்யக்கூடியதாக இருக்கிறது. நம்மை அரவணைத்துச்செல்லக்கூடியதாக இருக்கிறது. சிதறிக்கிடந்த இஸ்ரயேல் மக்களை ஒன்றுசேர்ப்பதற்கு உதவியாக இருந்தது...