நம்பிக்கையுள்ள செபம்
கடவுள் நம் அனைவரையும் அவருடைய வாரிசுகளாகத் தேர்ந்தெடுத்திருக்கிறார். தந்தையின் பெயரால் நாம் கேட்கும் அனைத்தையும் பெற்றுக்கொள்ள முடியும் என்ற சிறப்பு சலுகையை நமக்குத் தந்திருக்கிறார். செபத்தைப்பற்றிய ஆழமான செய்தி இங்கே நமக்குத்தரப்படுகிறது. செபம் என்பது நம்பிக்கையின் வடிவமாக இருக்க வேண்டும். யாக்கோபு 5: 15 ”நம்பிக்கையோடு இறைவனிடம் வேண்டும்போது நோயுற்றவர் குணமாவார்”. நம்பிக்கையிழந்த செபம் வலுவுள்ளதாக இருக்க முடியாது. வலிமையோடு நாம் செபிக்க வேண்டுமென்றால், கடவுளின் வல்லமையில் நம்பிக்கை வைத்து நாம் செபிக்க வேண்டும். செபிக்கிறபோது இயேசுவின் பெயரால் செபிக்க வேண்டும். இயேசுவின் பெயரால் செபித்தல் என்பது, இயேசு விரும்பாததை நாம் செபிக்கக்கூடாது என்று அர்த்தம் கொள்ளலாம். விலக்கப்பட வேண்டியதற்காக, தவிர்க்கப்பட வேண்டியதற்காக நாம் செபிக்கக்கூடாது. நமது சுய விருப்பங்களை நிறைவேற்றிக்கொள்வதற்காக செபிக்கக்கூடாது. நமது சுயவிருப்பம் மற்றவர்களுக்குத்தீங்கிழைத்தால் அது செபமாக இருக்க முடியாது. அந்த செபம் ஏற்கப்பட மாட்டாது. அதனால் தான் எல்லா செபத்தின் முடிவிலும், தந்தையின் திருவுளத்திற்கு ஏற்ப நடக்க...