உண்மையான விசுவாசம்
லூக்கா நற்செய்தியாளரைப் பொறுத்தவரையில், இயேசு சதுசேயர்களோடு வாக்குவாதத்தில் ஈடுபடக்கூடிய ஒரே இடமாக, இந்த வாக்குவாதம் அமைகிறது. சதுசேயர்கள் தாங்கள் என்ன செய்தோம், எதை நம்புகிறோம்? என்று அறியப்படுவதைவிட, எதை நம்பவில்லை என்பதன் அடிப்படையில், இந்த நற்செய்தியில் அறியப்படுகிறார்கள். சதுசேயர்கள் எதற்காக உயிர்த்தெழுதலை நம்பவில்லை? எதனால் அவர்கள் உயிர்த்தெழுதலை நம்பாதவர்களாக இருந்தனர்? இந்த கேள்விகளுக்கு பதில் கண்டுபிடித்தபின், இந்த வாசகம் நமக்குத்தரும் செய்தியைப் பார்ப்போம். அடிப்படையில் சதுசேயர்கள் “தோரா” என்று சொல்லப்படுகின்ற, முதல் ஐந்து புத்தகங்களை மட்டுமே நம்பினார்கள். ஆனால், பரிசேயர்கள் மற்ற புத்தகங்களையும் கடவுளால் ஏவப்பட்ட நூல்களாக நம்பினார்கள். முதல் ஐந்து புத்தகங்களில் உயிர்த்தெழுதல் பற்றிய வார்த்தைகள் இல்லை. இந்த உயிர்த்தெழுதல் பற்றிய எண்ணங்கள், சிந்தனைகள் தாமதமாகத் தோன்றியவை. எனவே, அவைகளைப் பற்றிய குறிப்பை நாம், தொடக்க புத்தகங்களில் பார்க்க முடியாது. இந்த வேறுபாடு தான், சதுசேயர்களையும், பரிசேயர்களையும் பிரிப்பதாக அமைந்தது. இதுதான் இவர்களை, ஒருவர் மற்றவர்க்கு எதிராக வேறுபடுத்திக் காட்டுவதாக...