தேடு! கண்டுபிடி! கொண்டாடு!

லூக்கா 15:1-10

இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன்.

பரிசுத்த குழந்தையாய் வந்த நாம் வளர வளர பரிசுத்த தன்மையில் இருந்து விலகிவிட்டோம். அதனால் நல்ல பல குணங்கள், செயல்பாடுகள் நம்மை விட்டு விலகி விட்டன. காணாமல் போய்விட்டன. நல்ல குணங்கள் நம்மைவிட்டு காணாமல் போனதால் நாம் பெயரிழந்து நிற்கிறோம். இன்றைய வாசகம் உங்களிடமிருந்து காணமல்போன நல்ல குணங்களை தேடுங்கள்! கண்டுபிடியுங்கள்! கண்டுபிடித்து அதை அனைவரோடும் கொண்டாடுங்கள் என்கிறது. இரண்டு விதங்களில் நாம் அதை செய்யலாம்.

1. கண்டுபிடி
உங்கள் கையில் ஒரு பேப்பரும், பேனாவும் எடுங்கள். எழுத தயாராகுங்கள். நான் வைத்திருந்த நல்ல குணங்கள் என்னென்ன? இப்போது நான் எதையெல்லாம் தொலைத்திருக்கிறேன்? அனைத்தையும் பொறுமையாக இருந்து கண்டுபிடிக்க வேண்டும். சிறுவயதில் என்னுடைய நல்ல குணங்களைக் கண்டு புகழந்தவர்கள் இப்போது என்னை எப்படி பார்க்கிறார்கள். உங்களுக்குள்ளே கேள்விக் கேட்டுக்கொண்டே தொலைத்ததை ஒவ்வொன்றாக கண்டுபிடியுங்கள்.

2. கொண்டாடு
தொலைத்த நல்ல பண்புகளை கண்டுபிடித்த நீங்கள் மீண்டும் அவைகளை உங்களுக்குள்ளே நட வேண்டும். ஒவ்வொன்றாக நட்ட பிறகு உங்கள் நண்பர்களையும், அண்டை வீட்டாரையும், உறவினர்களையும் அழைத்து கொண்டாட வேண்டும். காரணம் காணமல் போன பண்புகள் இப்போது உங்களுக்குள்ளே குடிபுகுந்திருக்கின்றன. ஆகவே மகிழ்வைக் கொண்டாட வேண்டும்.

மனதில் கேட்க…
1. என்னிடமிருந்து காணாமல் போன பண்புகள் என்னென்ன என்பதை என்றைக்காவது சிந்தித்திருக்கிறேனா?
2. காணாமல் போனதை திரும்பவும் என்னிடம் கொண்டு வருவது என் கடமை அல்லவா?

மனதில் பதிக்க…
இதோ புதுச்செயல் ஒன்றை நான் செய்கிறேன். இப்பொழுதே அது தோன்றிவிட்டது (எசா 43:19)

அருட்பணி. பிரான்சிஸ் கிறிஸ்துராஜா

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.