Category: தேவ செய்தி

பேசுங்க.. பேசுங்க.. பேசிக்கிட்டே இருங்க!

மாற்கு 7:31-37 இறையேசுவில் இனியவா்களே! பொதுக்காலம் 23ம் ஞாயிறு வழிபாட்டைக் கொண்டாட வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் ஆண்டவரிடம் மன்றாடுகிறேன். பேசுங்க.. பேசுங்க.. பேசிக்கிட்டே இருங்க! இயேசுவைப் பற்றி பேசுங்க. எங்கும் பேசுங்க.. எதிலும் பேசுங்க.. என்ற சிறப்பான அறிவிப்பு முழக்கத்துடன் வருகிறது பொதுக்காலம் 23ம் ஞாயிறு. நடிகர் குமரிமுத்துவின் பேட்டியை நான் அண்மையிலே பார்த்தேன். பார்த்தவன் பிரமித்து போனேன். அவர் தன் பேட்டியில் சொன்னதாவது, “நான் கிறிஸ்தவ சயமத்திற்குள் 1968ல் நுழைந்தேன். நுழைந்த அந்த தருணத்திலிருந்து மாற்றம் கண்டேன். ஆரம்ப காலத்தில் என் வாழிடம் என்பது பிளாட்பார்ம் தான். போதிய வசதி இல்லை. வறுமையில் வாடினேன். ஆனால் என் ஆண்டவரைக் கண்ட பொழுதிலிருந்து நான் உயர்த்தப்பட்டேன். இப்போது பல நாடுகளுக்கு பயணம் செய்திருக்கிறேன். ஒரு மாதத்திற்கு 24 நாட்கள் பயணம்...

வாழ்க்கையை கோலாகலமாக்கு…

புனித கன்னி மரியாளின் பிறப்பு பெருவிழா மத்தேயு 1:1-16,18-23 இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன். அன்னை மரியாளின் பிறந்த நாள் விழாவினைச் செப்டம்பர் 8 ஆம் தேதி ஒவ்வொரு ஆண்டும் மிக கோலாகலமாக நாம் கொண்டாடுகின்றோம். அன்னை மரியாள் மிகவும் கோலாகலமாக வாழ்ந்தார். ஆகவே அவரின் அன்பு பிள்ளைகளாகிய நாமும் மிகவும் கோலாகலமாக கொண்டாடுகின்றோம். இந்த இனிய நாளில் நம் வாழ்வை கோலாகலமாக மாற்ற வேண்டும். அதற்கு மரியை மாதிரியாக கொண்டு வாழ வேண்டும் என இப்பெருவிழா பெருமகிழ்ச்சியோடு நம்மை அழைக்கின்றது. மரியிடமிருந்து நான்கு மாதிகள் நமக்கு மூலதனமாக உள்ளன. 1. அருள் தெரிகிறது “தாய் வயிற்றில் உன்னை நான் உருவாக்கும் முன்பே அறிந்திருந்தேன் நீ பிறக்கும்...

மகிழ்ச்சியாக இருக்க விடுங்கள்…

லூக்கா 5:33-39 இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன். நாம் மகிழ்ச்சியாக இருப்பதை விரும்பாத ஒருசிலர் எதையாவது, அவசியமில்லாததைச் சொல்லி நம்முடைய மகிழ்ச்சியை தடைசெய்ய அதிக ஆசைப்படுவர். அவர்களைக் காணும் போது எப்படி நடந்துக் கொள்ள வேண்டும் என்பதை இன்றைய நற்செய்தி வாசகம் சொல்லித் தருகிறது. 1. கண்டுக்கவே வேண்டாம் கேட்க வேண்டும். ஆனால் அதற்கு பதில் பேசக் கூடாது. அதை பெரிதாக எண்ணக் கூடாது. பெரிதாக எண்ணினால் அவர்கள் பெரிய ஆளாக மாறிவிடுவார்கள். நம் மகிழ்ச்சி பறிபோகும். இயேசு பரிசேயர்கள், சதுசேயர்கள் பேசும்போது கையாண்ட பாணியை நாம் கையாள வேண்டும். 2. கறைப்படுத்தவே வேண்டாம் நம் மகிழ்ச்சிக்கு தடையாக இருக்கும் மனிதர்களை ஏதாவது செய்ய வேண்டும் என்ற...

ஆச்சரியம் ஆனா அதிசயம்

லூக்கா 5:1-11 இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன். சிறுவயதிலிருந்தே மறைக்கல்வி வகுப்புகளில் அழுத்தம் திருத்தமாக நமக்கு சொல்லித் தரப்படுகிறது. இயேசுவோடு நாம் இருக்கும் போது நம் வாழ்க்கை மாறும். மகிழ்ச்சி மனங்களி்ல் மத்தளமிடும். மங்களகரமான வருங்காலம் உருவாகும். ஆனால் நாம் இயேசுவோடு இருப்பதில்லை. இவைகளை அனுமதிப்பதில்லை. இயேசுவோடு இல்லாமல் அவதிப்படும் நமக்கு இன்றைய நற்செய்தி வாசகம் இயேசுவோடு இருப்பதற்கான அந்த அழைப்பை திரும்ப நினைவூட்டுவதாக அமைகிறது. இயேசுவோடு நாம் இருக்கும் போது பலவிதமான நன்மைகள் நமக்கு கிடைக்கின்றன. அவற்றில் இரண்டு முக்கியமானவைகளை நாம் அவசியம் பார்த்தே ஆக வேண்டும். 1. ஆச்சரியம் நம்முடைய பண்புகளிலே ஆச்சரியம் ஏற்படும். பூவோடு சேர்ந்த நாறும் மணக்கும் என்பதற்கேற்ப நாம் அவரோடு...

கடவுள் செய்யும் நல்லது எதற்கு?

லூக்கா 4:38-44 இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன். நாம் பிறந்த நாளிலிருந்து நம்மோடு இருந்து நம்மை வழிநடத்தும் ஆண்டவர் நமக்கு எந்தக் குறையும் வைப்பதில்லை. சிங்கக்குட்டிகள் பட்டினி இருந்தாலும் ஆண்டவரைத் தேடுவோருக்கு எந்தக் குறையும் இராது என்பது நமக்குத் தெரியும். நாம் இன்பமாக இருக்கும்போது நம்மோடு இணைந்து மகிழ்கிறார். துன்பமாக இருக்கும்போது நமக்கு துணையாக இருக்கிறார். இப்படி உதவி செய்யும் கடவுள், இப்படி நமக்கு நல்லது செய்யும் கடவுள் அவர் நம் நல்வாழ்விற்கு காரணமாக இருப்பது போல நாமும் அடுத்தவர் நல்வாழ்விற்கு காரணமாக இருக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றார். அதுதான் இன்றைய நற்செய்தி வாசகத்தில் பேதுரு மாமியார் வழியாக விளக்கப்படுகிறது. பேதுருவின் மாமியார் இறைவனிடமிருந்து ஆசீர்வாதம் பெற்று...