Category: தேவ செய்தி

திருச்சிலுவை மகிமைப் பெருவிழா

உற்றுப்பாரு… உருமாறு… யோவான் 3:13-17 இறையேசுவில் இனியவா்களே! திருச்சிலுவை மகிமை பெருவிழா திருப்பிலிக்கு நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன். இன்று திருச்சிலுவையின் மகிமைப் பெருவிழாவைக் கொண்டாடுகிறோம். எருசலேமில் கிபி 335ஆம் ஆண்டு செப்டம்பர் 13ஆம் நாள் ஆண்டவரின் உயிர்ப்புக்கென்று ஒரு ஆலயம் எழுப்பப்பட்டது. 13ஆம் நாள் உயிர்ப்பை நினைவுகூர்ந்த மக்கள் 14ஆம் தேதி ஆண்டவரின் சிலுவைச்சாவை நினைவுகூர்ந்து சிலுவையை அடையாளமாக வைத்து வழிபட்டனர். 5ஆம் நூற்றாண்டிலிருந்து திருச்சிலுவை விழா செப்டம்பர் 14ஆம் தேதி கொண்டாடப்பட்டு வருகின்றது. சிலுவை எப்படி திருச்சிலுவையாக மாறியது? சிலுவைச் சாவு என்றால் அது உரோமையர்கள் கொண்டு வந்தது என்பது பலரின் கருத்து. ஆனால் உலகின் பல்வேறு அரசியல் அமைப்பு முறைகளை ஆராய்ந்தால் இந்தியர்கள், கிரேக்கர்கள், எபிரேயர்கள், உரோமையர்கள்...

கட்டாயக் கல்வி: திரும்ப கிடைக்காது

லூக்கா 6:27-38 இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன். திரும்ப கிடைக்கும் என்ற எதிர்பார்ப்புடன் தான் நாம் அனைத்தையும் செய்கிறோம். நாம் செய்கிற உதவி, நாம் காட்டுகிற அன்பு என அனைத்தும் திரும்ப கிடைக்கும் என்ற எதிர்பார்ப்புடன் தான் நாம் செய்கிறோம். திரும்ப கிடைக்காது என்று தெரிந்தால் நாம் திரும்ப திரும்ப பல முறை யோசிப்போம். அப்படி யோசிக்கும் நமக்கு மிகச் சிறந்த கட்டாயக் கல்வியாக வருகிறது இன்றைய நற்செய்தி வாசகம். இந்த கட்டாயக் கல்வி என்னவென்றால் நாம் செய்வது திரும்ப கிடைக்காது என்பதை புரிந்துக்கொள்வது தான். 1. செய்ததை மறந்து விடு பிறருக்கு உதவி செய்ய வாய்ப்புக் கிடைத்தற்காக கடவுளுக்கு நன்றி சொல்வது பெருந்தன்மை. செய்த உதவிக்கு...

பட்டியலைப் பார்த்தீர்களா?

லூக்கா 6:20-26 இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன். இன்றைய நற்செய்தி வாசக்தில் ஆண்டவர் இயேசு கிறிஸ்து ஒரு பட்டியலை வெளியிடுகிறார். என்ன அந்த பட்டியல்? அதுதான் பேற்பெற்றோர் யார் என்பதும் கேடுற்றோர் யார் என்பதும் ஆகும். நமக்கு அந்த பட்டியலில் எந்த இடம் என்பதை கவனமாய் கண்டுபிடிக்க இன்றைய வழிபாடு நம்மை அழைக்கின்றது. 1. பரிசு வரும் ஆண்டவர் இயேசு கிறிஸ்து தம் மலைப்பொழிவில் பேறுபெற்றோருக்கான பரிசுகளை வழங்குகிறார். ஏழைகளுக்கு விண்ணரசு என்ற பரிசு கிடைக்கும். பட்டினியாய் இருப்போருக்கு பசி தீா்ந்து நிறைவு என்ற பரிசு கிடைக்கும். அழுது கொண்டிருப்போர் சிரிப்பு என்ற பரிசை பெறுவர் என ஆண்டவர் இயேசு பேறுபெற்றோருக்கான பரிசுகளை அறிவித்துக்கொண்டே சொல்கிறார். 2....

முழந்தாளிடு முன்னேற்றத்தைப் பாரு…

லூக்கா 6:12-19 இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன். ஜெபிக்கும் போது நாம் கடவுளோடு உறவாடுகிறோம். நம்முடைய ஜெபம் நமக்கு ஜெயத்தை தர வல்லது. ஜெபத்தில் நாம் கடவுளின் அதிசயத்தை கண்டுணர்கிறோம். ஜெபத்தில் நம்முடைய குறைகளைக் கண்டுபிடித்து நிறைவை நோக்கி பயணம் செய்ய முடிகிறது. முழந்தாளிட்டு ஜெபிக்கும் போது நம் வாழ்வில் முன்னேற்றம் முந்திக்கொண்டு வரும் என்பதுதான் இன்றைய நற்செய்தி வாசகத்தின் முக்கிய செய்தி. முழந்தாளிட்டு நன்கு ஜெபிக்கும் போது பல செயல்களை நாம் மிகவும் எளிமையாக செய்ய முடிகிறது. அவற்றுள் இரண்டு இன்று. 1. குறிக்கோளை குறி வைக்கலாம் ஜெபிக்கும் போது நம் வாழ்விற்கான குறிக்கோள் மிகவும் தெளிவாகிறது. பலருக்கு குறிக்கோள் இருக்கிறது. ஆனால் சில காலங்களிலே...

நன்மைக்கு விடுமுறை இல்லை

லூக்கா 6:6-11 இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன். கையை நீட்டி நன்மையை பெறுகின்ற ஒவ்வொரு கிறிஸ்தவா்களும் நன்மை செய்ய வேண்டும் என்ற அழைப்பைப் பெறுகின்றார்கள். நன்மை என்று ஆண்டவரின் உடலை எதற்காக சொல்கிறோம்? நாம் நன்மை செய்பவர்களாக மாற வேண்டும் என்பதற்காகவே. இயேசு நடந்த இடமெல்லாம் நன்மையை மட்டுமே செய்தார். நாமும் அப்படி செய்ய வேண்டும் என்ற அழுத்த திருத்தமான அறிவிப்போடு வருகிறது இன்றைய நற்செய்தி வாசகம். நன்மை செய்யும் போது நாம் இரண்டு காரியங்களை கண்டுக்கொள்ளவே கூடாது. 1. குறைகளைக் கண்டுக் குனியாதே நாம் நன்மைகள் செய்யும் போது பல விதமான விமர்சனங்கள் வரும். அவைகள் நம் நன்மைகளுக்கு தடையாக இல்லாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும். நாம்...