உடனிருக்கும் தூதர்களாவோம்!
புனித மிக்கேல்,கபிரியேல்,ரபேல்-அதிதூதர்கள் திருவிழா யோவான் 1:47-51 இறையேசுவில் இனியவா்களே! அதிதூதர்கள் திருவிழாவிற்கு ஆனந்தத்தோடும் ஆர்ப்பரிப்போடும் வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன். அதிதூதர்களான மிக்கேல், கபிரியேல், இரபேல் ஆகியோரின் திருநாளைக் இன்று நாம் கொண்டாடுகிறோம். அதிதூதர்களின் சிறப்பு என்ன? கீழே பார்க்கலாம். தீமையிலிருந்து காப்பாற்றும் மிக்கேல், மங்கள வார்த்தை சொல்லும் கபிரியேல், நலம் நல்கும் இரபேல் என மூன்று அதிதூதர்கள் இருக்கின்றனர். நம் கத்தோலிக்க நம்பிக்கை மரபில். தூதர்கள் என்பவர்கள் இசுலாம், யூத, மற்றும் பாரசீக சமயங்களிலும் காணப்படுகின்றனர். இறைவனுக்கும், மனிதருக்கும் இடைப்பட்டவர்கள் இவர்கள். இரண்டு இயல்புகளையும் உடையவர்கள் இவர்கள். கடவுளைப் போல காலத்தையும், இடத்தையும் கடந்து நின்றாலும், மனிதர்களைப் போல காலத்திற்கும், இடத்திற்கும் உட்பட்டவர்கள் இவர்கள். நிறைய நாள்கள் நாம் கடவுளையும், புனிதர்களையும் நினைத்துப்...