Category: தேவ செய்தி

மனிதர் அப்பத்தினால் மட்டுமல்ல, கடவுளின் சொல்லாலும் உயிர் வாழ்வர்

திருப்பாடல் 119: 2, 10, 20, 30, 40, 131 வாழ்க்கை என்பது வெறும் இயக்கம் மட்டுமல்ல. அது தன்னையே முழுமையாக ஈடுபடுத்தி, மற்றவர்களை இயக்க வைப்பது. இந்த உலகத்தில் இருக்கிற எல்லா மனிதர்களும் தங்களது வாழ்வை வாழ்ந்திருக்கிறார்களா? என்றால், அது நிச்சயம் கேள்விக்குறிதான். எல்லாரும் வாழவில்லை. ஆனால், இந்த உலத்தில், குறிப்பிட்ட காலம் “இருந்திருக்கிறார்கள்“. வாழ்க்கை என்பது அதனையும் கடந்த ஓர் அா்ப்பணம். வாழ்க்கையை உண்மையிலேயே வாழ்ந்தவர்களைத்தான் இந்த உலகம் வரலாற்றில் குறித்து வைத்திருக்கிறது. மற்றவர்களை அது நினைவுகூர்வதில்லை. இந்த உலகத்தில் வெறுமனே இருப்பதற்கு, உணவு போதுமானது. ஆனால், இந்த வாழ்க்கையை வாழ வேண்டுமென்றால், நமக்கு கடவுளின் வார்த்தை அவசியமானதாக இருக்கிறது. அது நமது வாழ்வை நாம் வாழ்வதற்கு உந்துசக்தியாக இருந்து, நம்மை இயக்கிக் கொண்டே இருக்கிறது. நாம் சோர்வடைகிற வேளையில், நமக்கு உற்சாகத்தைத் தருகிறது. நம்மையே முழுவதுமாக மற்றவர்களுக்கு அர்ப்பணித்து உழைக்கிறபோது, நமக்கு அது உந்துசக்தியாக இருந்து, நம்மை...

ஆண்டவரே! எனக்கு இரங்கியருளும்

திருப்பாடல் 26: 2 – 3, 9 – 10, 11 – 12 தவறு செய்த ஒரு மனிதன், தான் செய்த தவறை நினைத்து வருந்தி, இனிமேல் இப்படிப்பட்ட தவறை செய்ய மாட்டேன் என்றும், தன்னுடைய உள்ளத்தைப் பார்த்தால் தன்னுடை உண்மையான மனமாற்றம் புரியும் என்பதையும், இந்த திருப்பாடல் நமக்கு விளக்குவதாக அமைந்திருக்கிறது. நிச்சயமாக, தாவீது ஒரு சிறந்த அரசர். மக்களுக்காகவே வாழ்ந்த அரசர். கடவுள் பயத்திலும், பக்தியிலும் சிறந்து விளங்கிய அரசர். ஆனால், அவருடைய போதாத நேரம் தவறு செய்ய நேரிடுகிறது. அதன்பொருட்டு அவர் மிகவும் வருத்தப்படுகிறார். அந்த வருத்தத்தை இந்த பாடலில் பதிவு செய்கிறார். கடவுள் நீதிமானாக இருக்கிறார் என்பது இங்கு வெளிப்படுத்தப்படுகிறது. கடவுள் நிச்சயமாக தவறு செய்தவர்களை தண்டிப்பார் என்பது இங்கே உறுதிப்படுத்தப்படுகிறது. அதேவேளையில், கடவுளின் தண்டனை, தாங்க முடியாததாக இருக்கிறது என்கிற பய உணர்வும் இங்கே வெளிப்படுத்தப்படுகிறது. ஒரு மனிதனை அவனுடைய செயல்களால் மட்டும்...

இறந்தோரைப் பற்றிக் கவலை வேண்டாம் !

தன்னைப் பின்பற்ற விரும்பும் இளைஞனுக்கு இயேசு கொடுக்கும் அறிவுரை, ‘இறந்தோரைப் பற்றிக் கவலை வேண்டாம். அவர்கள் அடக்கம் செய்யப்படுவார்கள்’. உண்மையில், அந்த இளைஞன் இயேசுவிடம் வேண்டுவது, தந்தை இறக்கும் வரையில் அவரைப் பராமரித்துவிட்டு, அதன்பின் இயேசுவைப் பின்தொடர அனுமதி. ஆனால், இயேசுவின் பார்வை வேறாக இருக்கிறது. என் அழைத்தலை ஏற்பதை ஒத்தி வைக்கவேண்டாம். நாள் ஆக ஆக, எண்ணங்கள் மாறலாமே? ஏற்றி வைத்த அழைத்தல் என்னும் அகல் விளக்கு அணைந்துவிடலாமே? எனவேதான், அழைத்தலை உடனே ஏற்க வேண்டும் என்று அறிவுறுத்துகிறார் இயேசு. நமது குடும்பங்களில், பங்குகளில் இளையோர் அழைத்தலில் ஆர்வம் காட்டினால் அவர்களை உடனே ஊக்குவிப்போம். காலம் தாழ்த்தும்போது, அழைத்தலை இழக்க நேரிடலாம். மன்றாடுவோம்: இயேசுவே, அழைத்தலின் நாயகனே, உம்மைப் போற்றுகிறோம். இன்றைய இளையோருக்காக வேண்டுகிறோம். உமது விருப்பத்திற்கேற்ப, அதிக எண்ணிக்கையில் இளையோரைத் தேர்ந்தெடுத்து, அர்ப்பண வாழ்வை அருள்வீராக. உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென். –அருள்தந்தை குமார்ராஜா

சகிப்புத்தன்மை

சகிப்புத்தன்மை இல்லாத உலகமடா – என்று ஒரு பாடல் வரிகளில் வார்த்தைகள் வரும். இந்த உலகத்தில் நாம் இழந்துவிட்ட முக்கியமான மதிப்பீடு இந்த சகிப்புத்தன்மை. நமது முன்னோர்கள் கூட்டுக்குடும்பமாக வாழ்ந்தனர். கூட்டுக்குடும்பமாக வாழ்வது என்பது எளிதான காரியம். இன்றைய நடைமுறையில் அது சாத்தியப்படாத ஒன்று. ஆனால், வாழமுடியாத ஒன்றல்ல. குடும்பங்கள் சேர்ந்திருப்பது மிகப்பெரிய பலம். அதில் கிடைக்கக்கூடிய நிறைவும் பெரிது. கூட்டுக்குடும்பம் வெற்றிபெற, சகிப்புத்தன்மை மிக, மிக அவசியம். அந்த சகிப்புத்தன்மை தான், வெற்றியின் திறவுகோலாக இருந்தது. இயேசுவை ஏற்றுக்கொள்ளாததால், சீடர்கள் அந்த நகரங்களை அழித்துவிடக்கூடிய அளவுக்கு கோபமாக இருந்தனர். ஆனால், இயேசு அவர்களுக்கு சகிப்புத்தன்மையை கற்றுக்கொடுக்கிறார். வாழ்வின் பலகட்டங்களில் நாம் பொறுமையோடு வாழ்கிறபோதுதான், சகிப்புத்தன்மையோடு வாழ்கிறபோதுதான், நாம் வெற்றிபெற முடியும் என்பதை, இயேசு தனது வாழ்வால் சீடர்களுக்கு புரியவைக்கிறார். இன்றைய காலகட்டத்தில், சகிப்புத்தன்மை தவறான வழியில் புரிந்து கொள்ளப்படுகிறது. சகிப்புத்தன்மை என்பது அடிமைத்தனம் அல்ல. மாறாக, சங்கடங்களை அனுசரித்து வாழப்பழகிக்கொள்வது....

அதிகாரவர்க்கத்தின் போலித்தனம்

திருத்தூதர் பணி 12: 1 – 11 திருத்தூதர்கள் காலத்தில், அரசருக்கு வணக்கம் செலுத்துவது, அரசருடைய உருவங்களுக்கு ஆராதனை செலுத்துவது வெறும் கடமை மட்டுமல்ல, அது அவர்களின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தியது. அவர்கள் அதனைச் செய்ய தவறினால், கடுமையான கொடுமைகளுக்கும், சித்ரவதைகளுக்கும் உள்ளாகினர். ஆனால், இயேசுகிறிஸ்துவை நம்பிய கிறிஸ்தவர்கள் இதனை ஏற்றுக்கொள்ள மறுத்தனர். ஏனென்றால், அவர்களைப் பொறுத்தவரையில், இயேசு ஒருவரே ஆண்டவர். அவரைத் தவிர வேறு யாருக்கும், அடிபணிய மறுத்தனர். இது நிச்சயமாக, ஏரோது அரசனுக்கு கோபத்தை வருவித்திருக்கும். இன்றைய வாசகத்தில், ஏரோது அரசன், திருச்சபையைச் சார்ந்த மக்கள் சிலரைப் பிடித்துக் கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது. “திருச்சபையைச் சார்ந்த மக்கள்” என்கிற வார்த்தைகள், திருத்தூதர்களைக் குறிக்கிற வார்த்தைகளோ, அல்லது, மேல் மட்ட கிறிஸ்தவ திருச்சபையின் தலைவர்களையோ குறிக்கலாம். ஏரோதுவின் இந்த செயல், கிறிஸ்தவர்கள் தனக்கு எதிராக கலகம் செய்யலாம் என்று அஞ்சியோ, அல்லது பரிசேயர்கள் மற்றும் சதுசேயர்களின் தூண்டுதலினாலோ எழுந்திருக்கலாம். ஒட்டுமொத்தமாக, அவர்களை சட்டத்திற்கு...