உண்மை உரக்க ஒலிக்கட்டும்
30.06.2018 – மத்தேயு 8: 5 – 17 புலம்பல் நூல் 2: 2, 10 – 14, 18 – 19 “உன் இறைவாக்கினர் உனக்காகப் பொய்யும் புரட்டுமான காட்சிகளைக் கண்டனர். நீ நாடு கடத்தப்பட இருப்பதைத் தவிர்க்குமாறு, உன் நெறிகேடுகளை அவர்கள் உனக்கு எடுத்துச் செல்லவில்லை” என்று, எரேமியா இறைவாக்கினர் கூறுகிறார். இது யூதர்கள் பாபிலோனியர்களால் சிறைப்பிடிக்கப்பட்ட நிகழ்வையும், அதனால் ஏற்பட்ட விளைவுகளையும் படம்பிடித்துக் காட்டுகிறது. அந்த தருணத்தில், இறைவாக்கினர் எரேமியா அரசனிடம், பாபிலோனியர்களிடம் சரணடைந்து விடுவதுதான், நாட்டிற்கு நல்லது என்றும், அதுதான் கடவுளின் வார்த்தை என்றும் அரசனுக்கு அறிவித்தார். ஆனால், அரசர் பொய்யான இறைவாக்கினர்களின் பேச்சைக் கேட்டு அதனை நம்பி மறுத்து, இத்தகையை இழிநிலையை, மக்களுக்கு கொண்டு வந்துவிட்டான் என்று வருத்தப்படுகிறார். யூதாவின் கடைசி காலத்தில் ஏராளமான போலி இறைவாக்கினர்கள் வாழ்ந்து வந்தனர். இதனை இறைவாக்கினர் எரேமியாவும், எசேக்கியாவும் எடுத்துரைத்தனர். போலி இறைவாக்கினர்கள் கடவுள் என்ன சொல்கிறார்?...