சீர்ப்படுத்தும் சீர்திருத்தவாதி நீங்கள்!
மத்தேயு 17:9, 10-13 இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன். திருமுழுக்கு யோவானை ஒரு சீர்திருத்தவாதி என்று சொன்னால் அது மிகையாகாது. ஏனெனில் அவர்தான் மெசியாவின் வருகைக்காக அனைத்தையும் சீர்ப்படுத்தினார். உள்ளங்களை தயாரித்தார். மக்கள் மனமாற மணிக்கணக்கில் போதித்தார். மாற்றத்தை விளைவித்தார். அவரைப்போன்று நாமும் ஒரு சீர்ப்படுத்தும் சீர்திருத்தவாதியாக மாற அழைக்கப்படுகிறோம். இரண்டு சீர்திருத்தங்கள் அவசியமாக செய்ய வேண்டும். 1. கற்பதில் சீர்திருத்தம் நாம் எதை கற்கிறோமோ அதற்கேற்றாற்போல் தான் நம் வாழ்வு அமையும். திருமுழுக்கு யோவான் நல்லதை தன்னுடைய குடும்பத்திலிருந்து கற்றுக்கொண்டார். தீமையானவற்றை வெறுத்து ஒதுக்கினார். ஆகவே அவரால் சீர்திருத்தங்களை கொண்டு வர முடிந்தது. தீமையை கற்பவரால் நன்மையை கொண்டு வர முடியாது. ஆகவே தீமையை வெறுத்து...