Category: தேவ செய்தி

தம் மக்களைத் தேடிவந்து விடுவித்த ஆண்டவரைப் போற்றுவோம்

லூக்கா 1: 69 – 70, 71 – 73, 74 – 75 “தேடுதல்“ என்கிற வார்த்தை, காணாமற்போன ஒன்றை நாம் மீட்பதற்கு செய்யக்கூடிய செயலைக்குறிக்கக்கூடிய சொல். கடவுள் தம் மக்களைத் தேடிவருகிறார் என்றால் என்ன? இஸ்ரயேல் மக்களை கடவுள் தன் சொந்த மக்களாகத் தேர்ந்தெடுத்திருந்தார். இதனுடைய பொருள், கடவுள் இஸ்ரயேல் மக்களை மட்டும் மிகுதியாக அன்பு செய்தார் என்பதல்ல. ஏனென்றால், எல்லா மக்களுமே கடவுளின் சாயலைப் பெற்றவர்கள் தான். அவர்களையும் கடவுள் அன்பு செய்கிறார். ஆனால், தான் வாக்களித்திருக்கிற மீட்பை, இந்த உலகத்திற்குக் கொண்டு வர, கடவுள் இஸ்ரயேல் மக்களை கருவியாகப் பயன்படுத்த நினைக்கிறார். எனவே, அவர்களை தன்னுடைய மீட்புத்திட்டத்தில் முழுமையாகப் பயன்படுத்துவதற்கு தயாரித்துக்கொண்டிருக்கிறார். ஆனால், இஸ்ரயேல் மக்கள் அதனை தவறாகப் புரிந்துகொள்கிறார்கள். தாங்கள் என்ன செய்தாலும், கடவுள் தங்களைத் தண்டிக்க மாட்டார் என்று தப்புக்கணக்கு போடுகிறார்கள். தவறுக்கு மேல் தவறு செய்கிறார்கள். இது கடவுளுக்குக் கோபத்தை ஏற்படுத்துகிறது....

ஆண்டவரிடமிருந்தே மீட்பு நேர்மையாளருக்கு வருகின்றது

திருப்பாடல் 37: 3 – 4, 5 – 6, 23 – 24, 39 – 40 நேர்மையாளராக வாழ வேண்டுமா? நேர்மையாளராக இந்த உலகத்தில் வாழ முடியுமா? இந்த உலகம் அப்படிப்பட்டவர்களை விட்டு வைக்குமா? நேர்மையாளர்களாக வாழ்கிறபோது, நமது நண்பர்களை நாம் இழக்க நேரிடும். நமது உறவுகள் நம்மை விட்டுவிட்டுச் சென்று விடும். இவையெல்லாம் நம்மால் எதிர்கொள்ள முடியுமா? – இது போன்ற கேள்விகள் நிச்சயம் நமது உள்ளத்தில் எழும். இத்தனை கேள்விகளுக்கும் இன்று நாம் தியானிக்கும் திருப்பாடல் பொறுமையாக பதில் தருகிறது. நேர்மையாளர்கள் துன்பங்களைச் சந்திக்க மாட்டார்கள் என்று சொல்லவில்லை. ஆனால், அவற்றை எதிர்கொள்வதற்குத் தேவையான ஆற்றலை இறைவன் வழங்குவார். அவர் நேர்மையாளர்களின் கால்களை உறுதிப்படுத்துவார். தாங்கள் நின்றுகொண்டு இருக்கக்கூடிய நேர்மை என்னும் விழுமியத்தை முழுமையாகப் பற்றிப்பிடித்துக் கொள்வதற்கு, ஆண்டவர் உடனிருப்பார். எவ்வளவு சோதனைகள் வந்தாலும், நாம் வீழ்ந்து போக ஆண்டவர் அனுமதிக்க மாட்டார். ஏனென்றால், நேர்மையாளர்களை...

பிற இனத்தார்க்கு ஆண்டவரது மாட்சியை எடுத்துரையுங்கள்

திருப்பாடல் 96: 1 – 2a, 2b – 3, 7 – 8, 10 இந்த திருப்பாடல் 1 குறிப்பேடு 16 வது அதிகாரத்தோடு தொடர்புடையது. கடவுளின் பேழை நகரத்தின் கூடாரத்தில் வைக்கப்படுகிறது. பின்பு எரிபலிகளும், நல்லுறவுப் பலிகளும் செலுத்தப்படுகிறது. கூடியிருந்த மக்கள் கடவுளைப் போற்றிப்புகழவும், மகிமைப்படுத்தவும் செய்தனர். கடவுளின் மகிமையும், மகத்துவமும் இங்கே பாடலாக வெளிப்படுத்தப்படுகிறது. இஸ்ரயேல் மக்கள் வணங்கும் கடவுள் தான், அனைத்துலகத்திற்கும் அரசர் என்கிற செய்தி, அழுத்தம் திருத்தமாக வலியுறுத்தப்படுகிறது. கடவுளை புற இனத்து மக்களுக்கு அறிமுகப்படுத்துகிற மிகப்பெரிய பொறுப்பு இஸ்ரயேல் மக்களுக்கு இருக்கிறது. ஏனென்றால், அவர்கள் தான் கடவுளின் வல்ல செயல்களை முழுமையாக உணர்ந்திருக்கிறார்கள். அவர்கள் கடவுளின் ஆற்றலையும், வல்லமையையும் முழுமையாக அனுபவித்திருக்கிறார்கள். கடவுளைப்பற்றி முழுமையாக அறிந்திருக்கிற இஸ்ரயேல் மக்கள் கண்டிப்பாக, இதனை பிற இனத்து மக்களுக்கு அறிவிக்க வேண்டும். அப்படி அறிவிப்பதன் மூலம் பிற இனத்து மக்களும், உண்மையான இறைவனை முழுமையாகக் கண்டுகொள்ள...

இயேசுவின் போதனை

இயேசுவின் போதனை மக்களுக்கு ஏற்ற எளிய போதனையாக இருந்தது என்பது நமக்குத் தெரியும். இதுவரை தொழுகைக்கூடத்தில் போதித்துக்கொண்டிருந்தவர், இப்போது ஏரிக்கரைக்கு மாற்றியிருக்கிறார். அதற்கேற்ப, தனது போதனையின் வழிமுறைகளையும் மாற்றுகிறார். தொழுகைக்கூடத்தில் போதிப்பது எளிதானது. ஏனெ்றால், எப்படியும் மக்கள் கண்டிப்பாக வருவார்கள். நாம் சொல்வதைக் கேட்பார்கள். வழிபாடு முடியும் வரை, பிடிக்கிறதோ, இல்லையோ, புரிகிறதோ, இல்லையோ, அங்கே கடைசிவரை அமர்ந்திருப்பார்கள். ஆனால், தொழுகைக்கூடத்திற்கு வெளியே போதிப்பது என்பது சவாலானது. தொழுகைக்கூடத்திற்கு வரும் மக்கள்கூட்டம் கட்டாயத்தின் பேரில் வரக்கூடியது. இங்கே கட்டாயம் கிடையாது. அப்படியே ஆசையில் வந்தாலும், கடைசிவரை அமர்ந்திருக்க வேண்டும் என்ற கட்டுப்பாடு கிடையாது. பிடித்திருந்தால் அமர்ந்திருக்கலாம். அல்லது சென்றுவிடலாம். இப்படிப்பட்ட சவாலான பணிதான், தொழுகைக்கூடத்திற்கு வெளியே போதிப்பது. எனவே, இயேசு தனது வழிமுறைகளிலும் மாற்றம் கொண்டுவருகிறார். மக்களின் வாழ்வில் தொடர்புடையவற்றை வைத்து, கடினமான இறையாட்சி தத்துவங்களை விளக்க முயல்கிறார். அதில் வெற்றியும் பெறுகிறார். இன்றைய மறையுரைகள் எப்படி அமைய வேண்டும் என்பதற்கு...

உமது திருவுளம் நிறைவேற்ற கடவுளே இதோ வருகின்றேன்

திருப்பாடல் 40: 1 – 3, 6 – 7, 9 – 10 விருப்பம் என்பது எல்லோருக்கும் பொதுவானது. நமது விருப்பத்தை நிறைவேற்ற நாம் முயற்சி எடுக்கிறோம். எல்லா விருப்பங்களையும் நிறைவேற்ற முடியுமா? எல்லா விருப்பங்களும் நிறைவேற்றுவதற்கு தகுதியானதா? நிச்சயம் இல்லை. மனம் ஒரு குரங்கு என்று சொல்வார்கள். மனம் நினைப்பதையெல்லாம் நாம் நிச்சயம் நிறைவேற்ற முடியாது. அப்படி நிறைவேற்றினால் அதில் 90 விழுக்காடு தவறான காரியமாகத்தான் இருக்கும். ஏனென்றால், நாம் நமது மனதைக் கட்டுப்படுத்தவில்லையென்றால், அது தன்போக்கில் சென்று, பல தவறுகளுக்கு வழிவகுத்துவிடும். இந்த நிலையை தாவீது அரசர் அறியாதவரல்ல. அவர் ஏற்கெனவே பத்சேபா விஷயத்தில் அனுபவப்பட்டிருக்கிறார். இந்த திருப்பாடல், உள்ளத்தில் எழுந்திருக்கிற ஒருவிதமான சோதனையை வென்று, மகிழ்ச்சியின் நிறைவில் வெளிப்படக்கூடிய திருப்பாடல். தாவீது அரசருக்கு ஒருவிதமான சோதனை. தன்னுடைய விருப்பத்தை நிறைவேற்ற வேண்டும் என்கிற நெருடல் மனதிற்குள்ளே அரித்துக்கொண்டிருக்கிறது. ஆனால், அது தவறானது என்பதை, அவரது அறிவு...