Category: தேவ செய்தி

மழுங்கி போய்விட்டோமா?

மாற்கு 8 :14 -21 இன்றைய நற்செய்தியை 15- ஆம் இறைவார்த்தையை வாசித்துவிட்டு மீண்டும் 14 ஆம் வசனத்தை வாசித்து, தொடர்ந்தால் இன்னும் நேர்த்தியாக இருக்கும். எப்பொழுதுமே இயேசு தனிமையில் தன் சீடர்களோடு இருக்கும் போது அவர்களுக்கு பலவற்றைக் கற்பிப்பார். அப்படித்தான் இன்றைய நற்செய்தியில் ஏற்கனவே அடையாளம் கேட்டு சோதித்த பரிசேயர்களையும் ஏரோதியர்களையும் குறித்து எச்சரிக்கையாய் இருங்கள் என்று தன் பாடத்தை இயேசு கிறிஸ்து கொஞ்சம் கடினமாக ஆரம்பிக்கும் பொழுதே சீடர்கள், சங்கம் முக்கியமா? சாப்பாடு முக்கியமா? என்ற விவாதத்தில் வரும் குழந்தையைப் போல சாப்பாடு தான் முக்கியமென்று தங்களிடம் உள்ள அப்பத்தைப் பற்றி மாறி மாறி கண்களாலும் சாடைகளினாலும் விவாதிக்க ஆரம்பித்த விட்டார்கள். இதைப் பார்த்துக் கொண்டிருந்த ஆண்டவர் இன்னும் அதிகமாக எரிச்சலுற்று தன் இதயக் குமுறலை வெளிப்படுத்துகிறார். தான் ஏற்கனவே செய்த அப்பம் பலுகுதலைச் சொல்லி அவர்களைச் சாடுகிறார். அவர் செய்த அனைத்து அருங்குறிகளையும் உட்பொருளையும் பரிசேயரும் பொதுமக்களும்...

நிபந்தனையில்லா நம்பிக்கை….

மாற்கு 8: 11-13 ஏழு அப்பங்களை நாலாயிரம் பேருக்கு அதுவும் யூதர் அல்லாதவர்களுக்கு பலுகி கொடுத்ததை அறிந்த பரிசேயர்கள் அவநம்பிக்கையோடு இயேசுவிடம் வாதிட வருகின்றனர். அப்பங்கள் என்றவுடன் அவர்களது விவாத அறிவுக்கு எட்டியது பாலைவனத்தில் மன்னா பொழியப்பட்ட நிகழ்வு. இந்த இஸ்ரயேல் இனம் இவ்வாறு இறைவனைச் சோதிப்பதும், நிபந்தனை விதிப்பதும் புதிதல்ல. ( காண்க வி.ப 17 : 7, எண் 14: 11-12) இதனால் அவர் “பெருமூச்சு” விடுகிறார். இந்த பெருமூச்சு என்பது விவிலிய மொழியில் “இறப்பின் மொழி, விரக்தியின் மொழி (டுயபெரயபந ழக னநயவா) (காண்க யோவான் 19: 30) இவர்களைத் திருத்தவே முடியாது என்ற எண்ணத்துடன் உங்களுக்கு அடையாளம் எதுவும் கொடுக்கப்படவே மாட்டாது என்று கூறி அங்கிருந்து விலகிச் செல்கிறார். இவர்களுக்கும் இயேசுவினை பாலைவனத்தில் சோதித்த சாத்தானுக்கு எவ்வித வேறுபாடும் இருப்பதாக தெரியவில்லை. காரணம் அவனும் கூறினான். “கல்லை அப்பமாக்கு, கோபுரத்தினின்று குதி” என்று சோதித்தான். இன்று...

தொழுநோயாளியின் நம்பிக்கை

மத்தேயு 10: 8 ல் இயேசு பன்னிரு திருத்தூதர்களையும் பணிக்காக அனுப்பியபோது, தொழுநோயாளர்களைக் குணப்படுத்துங்கள், என்று பணிக்கிறார்.பொதுவாக, நலம் குன்றியவர்களைக் குணமாக்குங்கள் என்று சொன்ன இயேசு, தொழுநோயாளர்களைக் குறிப்பிட்டுச் சொல்வது இங்கே கவனிக்கத்தக்கது. இயேசுவின் இந்த குறிப்பிட்டு தொழுநோயாளிகளுக்குச் சொல்லும் வார்த்தைகள், யூத சமுதாயத்தில் நிலவிய, தொழுநோயாளிகளுக்கான கொடுமையை அறிவிப்பதாக அமைகிறது. தொழுநோயாளர்கள் உயிரோடு இருந்தும் இறந்தவர்களே, என்று சொன்னால், அது சரியான பார்வையாக இருக்கும். அந்த அளவுக்கு, யூத சமூகம் தொழுநோயாளிகளை நடத்தியது. தொழுநோயாளிகளுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் இருந்தது. அவர்கள் தங்களின் நிலையை நினைத்து, நினைத்து வருந்தக்கூடிய மிகப்பெரிய துயரமாக அவர்களின் வாழ்வு இருந்தது. அப்படி உருக்குலைந்த நிலையில் இருக்கக்கூடிய ஒரு தொழுநோயாளி, இயேசுவிடத்தில் “என்னைக் குணமாக்குங்கள்” என்று சொல்லாமல், ”நீர் விரும்பினால் என்னைக் குணமாக்கும்” என்று சொல்வது உண்மையிலே, அவரின் நம்பிக்கையின் ஆழத்தைக் குறிப்பதாக இருக்கிறது. தனது நிலை அவ்வளவுக்கு துர்பாக்கியமாக இருந்தாலும், கடவுளின் திருவுளம் எதுவாக இருந்தாலும்...

என் தலைவரே! தலைமுறைதோறும் நீரே எங்கள் புகலிடம்

திருப்பாடல் 90: 2, 3 – 4, 5 – 6, 12 – 13 ஒருவரின் துன்பநேரத்தில் தான், கடவுள் செய்திருக்கிற அளவற்ற நன்மைகள் நமக்கு நினைவுக்குள் வரும். அந்த நிலையைத்தான் தாவீது அரசர் வெளிப்படுத்துகிறார். இஸ்ரயேல் மக்களுக்கு கடவுள் எவ்வளவோ நன்மைகளைச் செய்திருக்கிறார். கடவுளின் பலத்தையும், வல்லமைமிக்க செயல்களையும் முழுமையாக அறிந்தவர்கள் இஸ்ரயேல் மக்கள். கடவுளின் வல்லமையை அவர்கள் மட்டும் தான், முழுமையாக வெளிப்படுத்த முடியும். அந்த அளவுக்கு கடவுள் அவர்களுக்கு நன்மைகளைச் செய்திருக்கிறார். இஸ்ரயேல் மக்களின் நன்றிகெட்டத்தனம் அவர்களுக்கு தாங்க முடியாத துன்பத்தைக்கொடுத்திருக்கிறது. அந்த தருணத்தில் தான், இந்த திருப்பாடல் எழுதப்படுகிறது. கடவுள் மீது இஸ்ரயேல் மக்கள் வைக்க வேண்டிய நம்பிக்கையை இது வெளிப்படுத்துகிறது. கடவுளை தலைமுறைதோறும் புகலிடமாக இருக்க இந்த பாடல் பணிக்கிறது. நம்பி வந்தவர்களுக்கு ஆதரவு தரக்கூடிய இடம் தான் புகலிடம். இஸ்ரயேல் மக்கள் கடவுளை நம்பிவந்தால், அந்த நம்பிக்கைக்கு பாத்திரமாக இருந்தால், கடவுள்...

எவரது குற்றம் மன்னிக்கப்பட்டதோ அவர் பேறுபெற்றோர்

திருப்பாடல் 32: 1 – 2, 5, 6, 7 கடவுளின் இரக்கத்தையும், மன்னிப்பையும் முழுமையாகப் பெற்றவர் தாவீது அரசர். உரியாவின் மனைவி பத்சேபாவுக்கு எதிராக பாவம் செய்தபோது, தாவீது கடவுளால் தண்டிக்கப்பட்டார். அவரது குழந்தை இறந்துபோனது. ஆனால், தாவீது தான் செய்த மிகப்பெரிய தவறை உணர்ந்து, அழுது கடவுளிடம் மன்றாடினார். தனது தவறை அவர் ஒப்புக்கொண்டார். கடவுளிடம் அவர் மன்றாடினார். அவரது மனவருத்தம் மற்றும் மனமாற்றம் கடவுளின் மன்னிப்பை அவருக்கு வழங்கியது. கடவுளின் ஆசீரையும் பெற்றுக்கொண்டார். இந்த அனுபவம் தான் தாவீதை, இந்த திருப்பாடலை எழுதத்தூண்டியிருக்க வேண்டும். வழக்கமாக, நாம் தவறு செய்கிறபோது, மற்றவர்களின் மன்னிப்பைப் பெறலாம். ஆனால், தாவீது அரசர், ஆசீர்வாதத்தையும் பெற்றுக்கொள்ளலாம் என்று சொல்கிறார். அதாவது, உண்மையான மனமாற்றம், கடவுளின் மன்னிப்பை மட்டுமல்ல, கடவுளின் அருளையும், ஆசீரையும் நிரம்பப்பெற்றுக்கொடுக்கும். இன்றைய நற்செய்தியிலும் கூட, திக்கிப்பேசுபவரை இயேசுவிடம் கொண்டுவருகின்றனர். நோய்க்கு காரணம், ஒருவர் செய்த பாவம் என்பது இஸ்ரயேல்...