நிபந்தனையில்லா நம்பிக்கை….

மாற்கு 8: 11-13

ஏழு அப்பங்களை நாலாயிரம் பேருக்கு அதுவும் யூதர் அல்லாதவர்களுக்கு பலுகி கொடுத்ததை அறிந்த பரிசேயர்கள் அவநம்பிக்கையோடு இயேசுவிடம் வாதிட வருகின்றனர். அப்பங்கள் என்றவுடன் அவர்களது விவாத அறிவுக்கு எட்டியது பாலைவனத்தில் மன்னா பொழியப்பட்ட நிகழ்வு. இந்த இஸ்ரயேல் இனம் இவ்வாறு இறைவனைச் சோதிப்பதும், நிபந்தனை விதிப்பதும் புதிதல்ல. ( காண்க வி.ப 17 : 7, எண் 14: 11-12) இதனால் அவர் “பெருமூச்சு” விடுகிறார். இந்த பெருமூச்சு என்பது விவிலிய மொழியில் “இறப்பின் மொழி, விரக்தியின் மொழி (டுயபெரயபந ழக னநயவா) (காண்க யோவான் 19: 30) இவர்களைத் திருத்தவே முடியாது என்ற எண்ணத்துடன் உங்களுக்கு அடையாளம் எதுவும் கொடுக்கப்படவே மாட்டாது என்று கூறி அங்கிருந்து விலகிச் செல்கிறார். இவர்களுக்கும் இயேசுவினை பாலைவனத்தில் சோதித்த சாத்தானுக்கு எவ்வித வேறுபாடும் இருப்பதாக தெரியவில்லை. காரணம் அவனும் கூறினான். “கல்லை அப்பமாக்கு, கோபுரத்தினின்று குதி” என்று சோதித்தான்.

இன்று நம்மில் பலர் குறிப்பாக பிறர் சபைக்கு செல்லும் கிறித்தவர்கள் அங்கு புதுமைகள் நடக்குது, அதிசயங்கள் நடக்குது என்று தான் அங்குமிங்காக ஓடிக் கொண்டிருக்கிறார்கள். அதிசயங்களையும் அற்புதங்களையும் பார்த்து தான் நான் கிறித்துவை, அவரின் வார்த்தைகளைக் கடைபிடிப்பேன் என்றால் நமக்கும் அன்றைய பரிசேயர்களுக்கும் எவ்வித வேறுபாடுமில்லை. இப்படிபட்ட நாம் அவருக்கு தேவையுமில்லை. நம்மைவிட்டு அவர் வலகி சென்று விடுவார்.

– திருத்தொண்டர்.வளன் அரசு

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.