Category: தேவ செய்தி

ஆண்டவர் இப்பொழுதும் எப்பொழுதும் வாழ்த்தப்பெறுவாராக

திருப்பாடல் 113: 1 – 2, 3 – 4, 5 – 7 இன்றைய திருப்பாடல் வரிகள் அற்புதமான சிந்தனையைத் தூண்டக்கூடிய வரிகள். கடவுள் மீது நாம் வைத்திருக்கிற நம்பிக்கையை ஆழப்படுத்துகிற வார்த்தைகள். ஆண்டவரின் ஊழியர்களை கடவுளைப் புகழ்ந்து பாடுவதற்கு ஆசிரியர் அழைப்புவிடுக்கிறார். ஆண்டவரின் ஊழியா்கள் யார்? கடவுள் பணிக்காக தங்களது வாழ்வை அர்ப்பணித்தவர்களே கடவுளின் ஊழியா்கள். அந்த கடவுளின் ஊழியர்கள் சுயநலம் இல்லாதவர்கள். ஆண்டவருக்காகவே வாழ்கிறவர்கள். கடவுளின் ஊழியர்கள் இப்போது போற்றிக்கொண்டிருக்கிறார்கள். எதிர்காலத்திலும் இதே போற்றுதலை கடவுளுக்கு கொடுப்பார்களா? தெரியாது. சூழ்நிலைகள் அவர்களுடைய விசுவாசத்தை ஆட்டம் காணச் செய்யலாம். ஆனாலும், அவர்கள் எல்லா காலத்திலும் கடவுளைப் போற்ற வேண்டும் என்பதுதான் ஆசிரியரின் வேண்டுகோள். இப்போது மட்டுமல்ல, எல்லா காலத்திலும், வேளையிலும் கடவுளைப் போற்ற வேண்டும் என்கிற கோரிக்கையை ஆசிரியர் வைக்கிறார். நம்முடைய விசுவாசத்தை சூழ்நிலைகள் மாற்ற விடக்கூடாது. நாம் சூழ்நிலைக் கைதிகளாகவே இருக்கக்கூடாது என்பதுதான் இங்கே நமக்கு விடுக்கப்படுகிற...

கடமையே கண் !

இன்றைய முதல் வாசகத்தில் (திருத்தூதர் பவுல் திமொத்தேயுவுக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 1: 1-2,12-14) நற்செய்தி அறிவிக்க வேண்டிய தன் கடமையைப் பற்றிப் பேசும்போது, பவுலடியார் நம் இதயத்தைத் தொடுகின்றார். நற்;செய்தி அறிவிப்பைப் பற்றிப் பேசும்போது, அவர் மூன்று செய்திகளைத் தருகின்றார்: நற்செய்தி அறிவிப்பது அவர்மேல் சுமத்தப்பட்ட கடமை. அதை அவர் நிறைவேற்றியே தீர வேண்டும். அது தன்னார்வத் தொண்டு அல்ல, மாறாக சுமத்தப்பட்ட கடமை. நற்செய்தி அறிவிப்பு என்பது ஓட்டப்பந்தயம் போன்றது. அதில் பங்கேற்பவர் வெற்றி ஒன்றையே இலக்காகக் கொண்டு ஓட வேண்டும். நற்செய்தி அறிவிப்பு என்பது குத்துச் சண்டை போன்றது. அதில் பங்கேற்போர் பலவிதமான பயிற்சிகளைச் செய்து தங்களைத் தகுதிப்படுத்திக்கொள்ளவேண்டும். பவுலடியார் தன்னைப் பற்றிப் பேசியது திருமுழுக்கு பெற்ற நம் அனைவருக்கும் பொருந்தும். நற்செய்தி அறிவிக்கும் கடமை நம் அனைவருக்கும் உரியது. அதை நாம் சுமக்க வேண்டும். வெற்றி ஒன்றையே இலக்காகக் கொண்டு ஓடவேண்டும். அதற்கான பல்வேறு...

பகைவரை அன்பு செய்வோம்

பகைவர்களை அன்பு செய்வது என்கிற சிந்தனையின் பொருள் பற்றி பல்வேறு விவாதங்கள், சந்தேகங்கள் அனைவரின் உள்ளத்திலும் எழுவது இயல்பு. அன்பு என்பதற்கு கிரேக்க மொழியில் பல அர்த்தங்கள் தரப்படுகிறது. பகைவருக்கு அன்பு என்பதன் பொருள், உள்ளத்திலிருந்து சுரக்கின்ற இரக்கம், நன்மைத்தனம். அதாவது, அடுத்தவர் எனக்கு என்ன தீங்கு இழைத்தாலும் பரவாயில்லை, நான் அவர்களின் நலம் மட்டுமே நாடுவேன் என்கிற உணர்வுதான் பகைவருக்கு காட்டுகின்ற அன்பு. நமது பெற்றோரை அன்பு செய்வது போலவோ, நமது உடன்பிறந்தவர்களை அன்பு செய்வது போலவோ, நமது உறவினர்களை அன்பு செய்வதுபோலவோ நாம் நமது பகைவரை அன்பு செய்ய முடியாது. இதுதான் உண்மை. நமது பெற்றோரை அன்பு செய்வதைப்போல நான் எனது பகைவரை அன்பு செய்யவே முடியாது. இது இயல்பானது. ஆனால், நமது பகைவரின் நலனை நாம் எப்போதும் நாட முடியும். நம்மை மற்றவர்கள் அவமானப்படுத்தலாம், நமக்கு தீங்கு செய்யலாம், நமது பெயரைக்கெடுக்கலாம். அதைப்பற்றியெல்லாம் கவலைப்படாது, அவர்களின் நலன்...

தூய கன்னி மரியாவின் பிறப்பு (ஆரோக்கிய அன்னை) விழா

புனித கன்னி மரியாளின் பிறப்பு பெருவிழா வாழ்க்கையை கோலாகலமாக்கு… மத்தேயு 1:1-16,18-23 இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன். அன்னை மரியாளின் பிறந்த நாள் விழாவினைச் செப்டம்பர் 8 ஆம் தேதி ஒவ்வொரு ஆண்டும் மிக கோலாகலமாக நாம் கொண்டாடுகின்றோம். அன்னை மரியாள் மிகவும் கோலாகலமாக வாழ்ந்தார். ஆகவே அவரின் அன்பு பிள்ளைகளாகிய நாமும் மிகவும் கோலாகலமாக கொண்டாடுகின்றோம். இந்த இனிய நாளில் நம் வாழ்வை கோலாகலமாக மாற்ற வேண்டும். அதற்கு மரியை மாதிரியாக கொண்டு வாழ வேண்டும் என இப்பெருவிழா பெருமகிழ்ச்சியோடு நம்மை அழைக்கின்றது. மரியிடமிருந்து நான்கு மாதிகள் நமக்கு மூலதனமாக உள்ளன. 1. அருள் தெரிகிறது “தாய் வயிற்றில் உன்னை நான் உருவாக்கும் முன்பே அறிந்திருந்தேன்...

ஆண்டவர் எல்லாருக்கும் நன்மை செய்வார்

திருப்படல் 145: 1 – 2, 8 – 9, 10 – 11 ”அனுபவமே சிறந்த ஆசான்” என்று பொதுவாகச் சொல்வார்கள். திருப்பாடல் ஆசிரியரின் இந்த வரிகள், அவருடைய அனுபவத்தை வெளிப்படுத்துவதாக இருக்கிறது. அறியாததை, தெரியாததை கற்றுக்கொடுப்பது தான் அனுபவம். இப்படி இருக்குமோ? அப்படி இருக்குமோ? என்று அனுமானத்தின் அடிப்படையில் பல நிகழ்வுகள் நம்முடைய வாழ்க்கையில் பார்த்துக்கொண்டிருக்கிறோம். அந்த அனுமானத்தை உறுதிப்படுத்துவதுதான் அனுபவம். திருப்பாடல் ஆசிரியருடைய அனுபவம் என்ன? அவருடைய அனுபவத்திற்கும், இன்றைய திருப்பாடலுக்கும் என்ன தொடர்பு? ”ஆண்டவர் எல்லாருக்கும் நன்மை செய்வார்” என்பதுதான் திருப்பாடல் ஆசிரியரின் அனுபவம். அவருடைய அனுமானம் இதுவரை, கடவுள் இஸ்ரயேல் மக்களுக்கு மட்டுமே என்பதாக இருந்திருக்கிறது. அந்த அனுமானத்தின் அடிப்படையில் தான், அவரும் வாழ்ந்திருக்கிறார். ஏனென்றால், இஸ்ரயேல் கடவுளின் விலைமதிப்பில்லாத பொக்கிஷம் என்று அவருடைய முன்னோர்கள் வழியாக கேள்விப்பட்டிருக்கிறார். அந்த நம்பிக்கையோடு தான், அவர் வாழ்ந்து கொண்டிருந்தார். ஆனால், இப்போது அவருடைய அனுமானம் சரியானதல்ல...