Category: Daily Manna

வானதூதரே! வாழ்த்த வருவாரே…

லூக்கா 1:26-38 இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன். அன்னை மரியாள் வாழ்க்கை பரிசுத்தமானது. அவர் வாழ்ந்த குடும்பத்தில் மிகச் சிறந்த பயிற்சி பெற்றார். ஆகவே உலகில் உள்ள இருளின் வசம் தன் வாழ்வை ஒப்படைக்காமல் ஒளியின் மகளாக பிரகாசித்து வந்தார். சுடர்ஒளியாய் வாழ்ந்து வந்தார். அவர் தன் மிகச் சிறப்பான வாழ்வால் வானதூதரை மண்ணகம் இறங்க வைத்தார். வானதூதரே அவருடைய வாழ்வால் அவரை இம்மானுவேலின் தாயாக மாறும் பாக்கியத்திற்காக தோ்ந்தெடுத்தார். இவையனைத்தும் கடவுளின் திட்டமே!. இது கிடைத்தது மரியாள் செய்த பாக்கியமே! நாமும் வானதூதரை சந்திக்க இரு செயல்களை செய்தால் போதும். 1. அமைதி மிகவும் அமைதியாக வாழ்க்கை நடத்த வேண்டும். அதிகமாக குதிக்க கூடாது. பெருமை...

மேன்மையை வழங்கும் இறைவன்

மீக்கா 5: 2 – 5 இறைவன் எப்போதும் உயர்வானதையோ, மேன்மையானதையோ தேடுவபவரல்ல. மாறாக, தாழ்நிலையில் இருக்கிறவர்களை உயர்நிலைக்கு உயர்த்துகிறவர். அவர்களுக்கு மேன்மையை வழங்கி அழகுபார்க்கிறவர் என்பதை, இன்றைய முதல் வாசகத்தில் நாம் பார்க்கிறோம். இஸ்ரயேல் மக்கள் பல வருடங்களாக காத்துக்கொண்டிருந்த மீட்புச்செய்தி அவர்களுக்கு வழங்கப்படுகிறது. இஸ்ரயேல் மக்களின் எண்ணமெல்லாம், கண்டிப்பாக, அவர்களை வழிநடத்துகிற இறைவன், உயர்ந்த குடியிலிருந்து பிறப்பார், சிறப்பான நகரத்தில் தோன்றுவார் என்பதாகத்தான் இருந்திருக்கும். ஆனால், கடவுளின் பார்வை வேறு. கடவுளின் அளவுகோல் வேறு. இறைவன் ஒடுக்கப்பட்டோரின் கடவுள். தாழ்நிலையில் இருக்கிறவர்களை உயர்த்துகிற கடவுள். இறைவன் வாக்குறுதி வழங்கிய மீட்பை நிறைவேற்றுகிறவர், சாதாரண இடத்திலிருந்து பிறப்பார் என்று அறிவிக்கப்படுகிறது. ”ஆண்டவர் கூறுவது இதுவே: நீயோ, எப்ராத்தா எனப்படும் பெத்லகேமே! யூதாவின் குடும்பங்களுள் மிகச்சிறியதாய் இருக்கின்றாய்! ஆயினும் இஸ்ரயேலை என் சார்பாக ஆளப்போகின்றவர் உன்னிடமிருந்தே தோன்றுவார்”. எத்தனையோ மிகப்பெரிய நகரங்கள், உயர்குலத்தாரின் எதிர்பார்ப்பிற்கு நேர்மாறாக, இறைவன் தன்னுடைய ஊழியரை, மீட்பரை,...

தவறுகளை தனியே திருத்து…

மத்தேயு 1:18-24 இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன். சிலர் தவறுகள் செய்யும்போது உடனடியாக உணர்ச்சிவசப்பட்டு நாம் பொது இடத்திலே திருத்த விழைகிறோம். இதனால் தவறு செய்தவரின் மனம் உடைகிறது. இப்படி செய்வதனால் அவருக்குள் இருக்கும் மகிழ்ச்சியும் மறைகிறது. தவறு செய்தவரை எப்படி திருத்த வேண்டும் என்பது பற்றி யோசேப்பு இன்றைய நற்செய்தி வாசகத்தில் சொல்லித் தருகிறார். அன்னை மரியாள் அவரோடு கூடி வாழும் முன் அவர் கருவுற்றிருந்தது அவருக்கு தெரியவந்தது. இருப்பினும் அவர் அன்னை மரியாளை இகழ்ச்சிக்கு உள்ளாக்க விரும்பாமல் மறைவாக விலக்கிடத் திட்டமிட்டார். நாமும் மறைவாக தனியே அழைத்து தவறுகளை திருத்தினால் இரண்டு ஆச்சரியங்கள் நடக்கும். 1. அடுத்தவருக்கு உயர்வு தவறுகளை பொதுவில் சுட்டிக்காட்டும்போது அந்த...

மூதாதையரை நினையுங்கள் இன்று…

மத்தேயு 1:1-17 இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன். இன்றைய நற்செய்தி வாசகம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் மூதாதையர் பட்டியலை நமக்கு வழங்குகிறது. இது நம் மூதாதையர்களின் முக்கியத்துவத்தை நமக்கு வலியுறுத்துகிறது. அவர்கள் இன்றி நாம் இங்கில்லை. ஆகவே இன்று நம் மூதாதயரை நாம் நினைக்க வேண்டும். நினைப்பதோடு மட்டும் நிறுத்தாமல் இரண்டு செயல்களிலும் இறங்குவது இன்றைய நாளுக்கு அதிக பலத்தைக் கொடுக்கும். 1. அவர்களைப் போல்… அவர்கள் கொண்டிருந்த விசுவாசத்தை நாம் நினைத்துப் பார்த்து அதைப் கடைப்பிடிக்க வேண்டும். அவர்கள் வாழ்ந்த நல்ல படிப்பினைகளை, வாழ்க்கை முறைகளை நாம் பின்பற்ற வேண்டும். ஆண்டவர் இயேசு கிறிஸ்து தன் மூதாதையரின் வாழ்க்கை முறைகளை கடைப்பிடித்தார். அவர்களிடமிருந்த பண்புகள் அவரிடமும்...

யோவானிலும் பெரியவர்…

“மனிதராய்ப் பிறந்தவர்களுள் யோவைனை விடப் பெரியவர் ஒருவருமில்லை. ஆனால் இறைஅரசில் பங்குபெறும் சிறியவர் யோவானை விடப் பெரியவர்”. திருமுழுக்கு யோவானை உயர்த்திபேசும் ஆண்டவர் அதே வேளையில் கடவுளின் அரசில் செல்லத் தகுதிபெறுபவர் அவரினும் பெரியவர் என்று குறிப்பிடுகிறார். யார் இந்த யோவான்? அவருக்கு நேர்ந்த கதி என்ன? இயேசுவின் வருகைக்காக மக்களை தயார் செய்தவர். கடவுள் அவருக்குக் கொடுத்த பணியைத் திறம்படச் செய்தவர். இறைவாக்கினருக்கு சிறந்த மாதிரியாய் செயல்பட்டவர். ஏரோது அரசன் தன் சகோதரன் மனைவியை வைத்திருத்தலாகாது என்று இடித்துரைத்தவர். அவ்வாறு சொன்னதற்காக சிறையில் அடைக்கப்பட்டு பின்னர் சிரசேதம் செய்யப்பட்டு உண்மைக்கு சாட்சியாக வாழ்து மரித்த இறைவாக்கினர். இயேசுவின் போதனைகளை வாழ்ந்து காட்டிய யோவான் உண்மைக்காக கொல்லப்பட்டிருக்கிறார். விசுவாச வாழ்வில் உண்மைக்கு சாட்சியம் பகர்ந்தவர்கள், நேர்மையோடும் நீதியின்படியும் வாழ்ந்தவர்கள், தங்கள் நலனில் அக்கறை கொள்ளாமல் பிறருக்காக வாழ்ந்த அநேக விசுவாசிகள் இன்னல்கள் பட்டதும் கிறிஸ்துவின் கொள்கைகளுக்காக உயிர் துறந்தவர்;களும் ஏராளம். அவர்களில்...