Category: Daily Manna

பொறுமை – வாழ்வின் வெற்றிக்கு அடித்தளம்

எப்படியாவது இயேசுவை ஒழித்துக்கட்ட வேண்டுமென்ற வேட்கை, மறைநூல் அறிஞர்களின் அறிவுக்கண்களை மறைத்துவிடுகிறது. அடிப்படை இல்லாத ஒரு குற்றச்சாட்டை இயேசுவின் மேல் சுமத்துகிறார்கள். இயேசு இதை அறியாதவரல்ல. அதற்காக, நிதானம் இழந்து அவர்கள் மீது கோபப்படுகிறவரும் அல்ல. நிதானம் இழக்காமல் பொறுமையோடு, அதேநேரம் துணிவோடு அவர்களின் கூற்றைப்பொய்யாக்குகிறார். இயேசு வாழ்ந்த காலத்தில் பேய்களை ஓட்டக்கூடிய மந்திரவாதிகள் எத்தனையோ பேர் இருந்தனர். பேய் பிடித்திருந்தால் இவர்களை மக்கள் நாடிச்செல்வது சாதாரணமான செயல். இயேசுவிடமும் அந்த நம்பிக்கையோடு தான் மக்கள் பேய்பிடித்தவர்களை அழைத்து வந்திருந்தனர். ஆனால், அவர் மீது சமத்தப்பட்ட ‘பேய்களின் தலைவன் பெயல்செபுலைக்கொண்டே பேய்களை ஓட்டுகிறான்’ என்ற குற்றச்சாட்டு கவனிக்கத்தக்கது. இயேசுவின் பதில் மக்களுக்கு அவர்மீதுள்ள குற்றச்சாட்டு ஆதாரமற்றது என்பதைத் தெளிவுபடுத்துகிறது. ஒரு அரசன் தன்னுடைய வீரர்களைப்பயன்படுத்தி தன்னுடைய அரசை விரிவுபடுத்தத்தான் முயற்சி எடுப்பான். தன்னுடைய வீரர்களைக்கொல்வது தன்னையே அழிப்பதற்கு சமம் என்பதைப்புரியாதவன் பைத்தியக்காரனாகத்தான் இருக்க முடியும். அப்படி இருக்கும்போது பேய்களின் அரசை ஏற்படுத்த...

உண்மையான சீடர்கள்

இந்த உலகப்போக்கின்படி பார்த்தால், இயேசு எப்படி இந்த படிக்காத பாமரர்களை தனது திருத்தூதர்களாக தேர்ந்தெடுத்தார் என்பது நமது கேள்வியாக இருக்கும். காரணம், அவர்கள் செல்வந்தர்கள் அல்ல, அந்த சமுதாயத்தின் விளிம்புநிலை மக்கள். அவர்கள் வாழ்ந்த சமுதாயத்தில் அவர்களுக்கென்று எந்த செல்வாக்கும் கிடையாது. அவர்கள் படிக்காதவர்கள். மறைநூலைப்பற்றிய அறிவே இல்லாதவர்கள். இப்படிப்பட்டவர்கள் எப்படி போதனையாளர்களாக மாற முடியும்? இப்படிப்பட்டவர்கள் எப்படி இயேசுவின் போதனையைப் புரிந்து, அறிவிக்க முடியும்? எந்த அடிப்படையில் இயேசு இவர்களை தனது சீடர்களாக அழைத்தார்? இரண்டு காரணங்களை நாம் உறுதியாகச் சொல்ல முடியும்? இயேசுவிடத்தில் அவர்களுக்கு ஏதோ ஒருவிதமான ஈர்ப்பு இருந்தது. அதனால் தான் இயேசு அழைத்தவுடன் மறுப்பு சொல்லாமல், அவரைப்பின்தொடர்ந்தனர். அதாவது, இயேசுவை தங்களது போதகராக ஏற்றுக்கொள்வதில் எந்த தயக்கமும் இருந்ததாகத் தெரியவில்லை. அவர் சிறந்த போதகர் என்கிற நம்பிக்கை அவர்களுடைய மிகப்பெரிய பலம். இரண்டாவது காரணம், அவர்கள் இயேசுவின் சார்பில் துணிவோடு நின்றார்கள். ஏனென்றால், இயேசு பாரம்பரியம்...

மக்களுக்காக வாழ்ந்த இயேசு

கழுகுப்பார்வைகள், இயேசுவிடம் குற்றம் கண்டுபிடிக்க கூர்ந்து பார்க்க ஆரம்பித்து விட்டன. எப்படியும் இயேசுவை தொலைத்துவிட வேண்டும் என்று, தலைமைச்சங்கத்தால் அனுப்பப்பட்ட குழு, இயேசுவை பின்தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது. இயேசுவின் ஒவ்வொரு அசைவும் தீவிரமாகக் கவனிக்கப்படுகிறது. இந்த சூழ்நிலையில், இயேசுவின் முன்னால், ஓய்வுநாளில் கைசூம்பிப்போன மனிதன், குணம் பெறுவதற்காக காத்திருக்கிறான். அந்த மனிதனுக்கும் தெரியும், ஓய்வுநாளில் சுகம்பெறுவது, தனக்கு சுகம் கொடுக்கிறவருக்கு தேவையில்லாத பிரச்சனைகளைத் தரும் என்று. ஆனால், அந்த மனிதன் அதைப்பற்றியெல்லாம் கவலைப்படவில்லை. குணம் பெறுவது ஒன்றையே இலக்காக வைத்திருக்கிறான். ஓய்வுநாளில் குணப்படுத்துவது வேலைசெய்வதாகும். உயிர்போகக்கூடிய சூழ்நிலையில் இருக்கிற ஒருவனுக்கு மட்டுமே, ஓய்வுநாளில் உதவி செய்ய வேண்டும். மற்றவர்களுக்குச் செய்தால், அது ஓய்வுநாளை மீறிய செயலாகும். ஏன் இப்படி மனிதாபிமானம் இல்லாமல் இந்த சட்டங்களை வைத்திருக்கிறார்கள் என்று நமக்கு கேட்கத்தோன்றும். நமது பார்வையில், இதனைப் புரிந்து கொள்ள முடியாது. ஆனால், யூதர்கள் எந்த அளவுக்கு, இதனை கடைப்பிடித்தார்கள் என்று பார்த்தோம் என்றால்,...

இயேசுவின் பார்வை

இயேசுவைப்போல எளிதான, மக்கள் பயன்பாட்டில் உள்ளவற்றை வைத்து, புரிய முடியாத விண்ணரசை புரிய வைக்கிறவர் யாரும் இருக்க முடியாது. அவருடைய போதனையை முழுவதுமாக நாம் ஒன்றுதிரட்டிப்பார்த்தால் இந்த உண்மை நமக்குப் புலப்படும். இன்றைய நற்செய்தியும் இதற்கு சிறந்த எடுத்துக்காட்டு. அறிய முடியாத, புரிய முடியாத வாழ்க்கை இரகசியங்களை இயேசு வெகுஎளிதாக நமக்குப் புரிய வைத்துவிடுகிறார். நமது வாழ்வின் வெற்றி பெற, நம்மைச் சுற்றி நடக்கும் நிகழ்ச்சிகளை உன்னிப்பாகக் கவனித்தாலே போதும். அதுவே நாம் அடைய வேண்டிய இலக்கை வெகு எளிதாகக் காட்டிவிடும். இயேசுவின் வாழ்க்கை ஒரு வெற்றி வீரரின் வாழ்க்கை. அவரது வெற்றிக்கு காரணம், அவர் இந்த உலகத்தையும், நடக்கும் நிகழ்ச்சிகளையும் பார்த்தவிதம் தான், என்பது அவரின் வாழ்வை சிந்தித்துப் பார்த்தால் நன்றாகத் தெரியும். கடற்கரையில் மக்களுக்குப் போதித்துக்கொண்டிருக்கிறார். போதிக்கிறபோது, அங்கே இருக்கிற மீனவர்களைப் பார்க்கிறார். மீன்களைப் பார்க்கிறார். வலைகளைப் பார்க்கிறார். அதிலிருந்து மக்களுக்கு இறையாட்சியின் தத்துவத்தை விளக்குகிறார். மரத்தின் நிழலில்...

இறைவனின் அருட்கரம்

விருந்தோம்பல் என்பது மத்திய கிழக்குப் பகுதியில் புனிதமான ஒன்றாகக் கருதப்பட்டது. அறிமுகமில்லாத நபர்கள் வந்தாலும், அவர்களுக்குத் தேவையான அனைத்தையும் கவனிப்பது ஒரு யூதரின் முக்கியக் கடமையாக இருந்தது. அறிமுகமில்லாத நபர்களுக்கே இப்படி என்றால், விருந்தினர்களுக்கு எப்படிப்பட்ட உபசரிப்பு கொடுக்கப்பட வேண்டும் என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை. பொதுவாக விருந்தில் திராட்சை இரசம் பரிமாறப்பட்டது. திராட்சை இரசம் மகிழ்ச்சியின், விருந்தின் அடையாளம். அதில் தண்ணீர் கலந்து பரிமாறினார்கள். ஆக, திருமண விருந்து வீடு. விருந்தினர்கள் வந்திருக்கிறார்கள். அது மகிழ்ச்சியின் இடம். இப்படிப்பட்ட இடத்தில் திராட்சை இரசம் தீர்ந்துவிட்டது என்றால், நிச்சயம் அதைவிட திருமண வீட்டார்க்கு அவமானம் ஏதுமில்லை. அவர்களின் நிலைமை படுமோசமானதாக இருந்தது. பாலஸ்தீனம் பகுதியில் ஏழைகளும், வறியவர்களும் மிகுந்திருந்தனர். உணவுக்காக கடுமையாக அவர்கள் உழைக்க வேண்டியிருந்தது. அப்படியிருக்கிறவர்களுக்கு, திருமண விருந்து என்பது, அந்த வேதனைகளை எல்லாம் மறந்து மகிழ்ச்சியாக இருக்க வேண்டிய தருணமாக, இருக்க வேண்டும். அந்த கொண்டாட்டத்திற்கு வழியே இல்லையென்றால்,...