தன்னிலன்பு, பிறரன்பு, இறையன்பு
மத்தேயு 6:1-6, 16-18 தன்னிலன்பு, பிறரன்பு, இறையன்பு தவக்காலத்தைத் துவங்கும் இந்தப் புனிதமான நாளிலே, நம்மை நாமே சீர்தூக்கிப் பார்க்கத் திரு அவை அழைக்கின்றது. இந்த அருளின் காலத்தைக் கடவுளின் கொடையாகவும், அவரின் பேரிரக்கத்தின் பரிசாகவும் ஏற்றுக் கொள்வோம். கிறித்துவின் பாடுகளை நம் கண்முன் வைத்து, நம் பாவங்களுக்கு மன்னிப்பையும், பரிகாரத்தையும் செய்ய முயற்சிப்போம். அதற்கு நம்மைத் தகுதியாக்கிக் கொள்ள நாம் மூன்று பண்புகளை மனதில் கொண்டு செயல்பட வேண்டும். 1. ஈதல் : தருமம் சாவினின்று நம்மைக் காப்பாற்றும், எல்லாப் பாவத்தினின்றும் நம்மைத் தூய்மையாக்கும். தருமம் செய்வோரின் வாழ்வை நிறைவுள்ளதாக்கும். (தோபி – 12:9) ஈதல் நாம் பிறரன்பில் வாழ்ந்திட நம்மை அழைக்கின்றது. ஈயென்று கேட்பவனுக்குக் கொடுப்பது மட்டுமன்று நாமே வலியச் சென்று வறியவரைத் தேடிக் கொடுப்பதினால் மட்டுமே இது முழுமை பெறும். 2. செபித்தல் : இன்று முதல் நாற்பது நாள் நாம் செபத்திலும் வழிபாட்டிலும் ஈடுபட்டு இருப்பது...