Category: Daily Manna

நம்முடைய நற்செய்திப்பணி

திருத்தூதர் பணி 18: 23 – 28 அப்போல்லா என்ற பெயருடைய யூதர் ஒருவரைப் பற்றிய செய்தி இன்றைய முதல் வாசகத்தில் நமக்குத் தரப்படுகிறது. அவர் சொல்வன்மை மிக்கவர் என்றும், மறைநூல்களில் புலமை வாய்ந்தவர் என்றும், அவருக்கு அடைமொழிகள் தரப்படுகிறது. இவற்றிற்கும் மேலான ஒரு பண்பும் அவருக்குத் தரப்படுகிறது. அதுதான் அவருடைய பணிவாழ்க்கையில், மிகச்சிறந்த பண்பாக இருக்க முடியும் என்று நினைக்கிறேன். அவர் ஆர்வமிக்க உள்ளம் கொண்டிருந்தார். ”ஆர்வமிக்க உள்ளத்தோடு இயேசுவைப் பற்றிய செய்தியைப்பிழையற அறிவித்தும் கற்பித்தும் வந்தார். இறைவனுடைய பணியைச் செய்வதற்கு நமக்கு முதலாவதாக ஆர்வம் இருக்க வேண்டும். எந்த ஒரு செயலையும் இரண்டு விதத்தில் நாம் செய்ய முடியும். ஏனோதானோவென்று வெறும் கடமைக்காக செய்வது முதல் வகை. செய்வதில் நிறைவோடு, ஆர்வத்தோடு செய்வது இரண்டாவது வகை. அப்போல்லோ இரண்டாவது வகையான மனிதராக இருக்கிறார். அந்த ஆர்வம் பல உதவி செய்யக்கூடிய நண்பர்களையும், கேட்கிறவர்களை கிறிஸ்துவின்பால் ஈர்க்கக்கூடியதாகவும் இருக்கிறது. திருப்பாடல்...

கட்டளைகளைக் கடைபிடிக்க

(யோவான் 3 : 16-21) மொத்த இறையியலையும் இறையியலின் மையமான கிறித்துவியலையும் ஒரே வாக்கியத்திற்குள் அடக்கிவிட்ட இறைவார்த்தைதான் 3:16. இயேசு என்றால் யார்? இயேசு ஏன் நமக்காக இறக்க வேண்டும்? என்ற அனைத்துவிதமான கேள்விகளுக்கும் இந்த ஓரு வசனம் இரத்தினச் சுருக்க விளக்கமாக அமைகின்றது. ‘அன்பே கடவுள்’ என்பது இறைவனின் இலக்கணம். அவரது அன்பு சொல்லில் மட்டுமல்லாது செயலிலும் வெளிப்படுகிறது. உலகப் படைப்பிலும் அதன் பராமரிப்பிலும் கடவுளின் அன்பை நாம் காண முடிகிறது. அதே அன்பு இறையேசுவின் உருவத்தில் தங்கி நம்மோடு இன்று வரை அவரின் உடனிருப்புடன் நம்மை வழிநடத்திக் கொண்டிருக்கிறது. கல்வாரி மலையில் இந்த அன்பு உச்சத்தை அடைகின்றது. ஆனால் இன்றைய நற்செய்தி இறையன்பையும் அதன் நிராகரிப்பையும் நம்முன் வைக்கின்றது. “ நாம் கடவுளுக்கு அன்பு செய்வதில் அன்று, அவரே நம்மை அன்பு செய்து நமது பாவங்களுக்குப் பரிகாரமாக தம் மகனையே அனுப்பியதால் தான் அன்பின் தன்மை விளங்குகின்றது” (உரோ...

உயர்த்தப்பட்டவரை உற்று நோக்கி

(யோவான் 3 : 7-15) பழைய ஏற்பாட்டினை நிறைவு செய்பவர் நம் ஆண்டவர் இயேசு. மறைவாக இருந்த அனைத்திற்கும் நல்ல விளக்கத்தைக் கொடுத்ததோடு, தன்னிலே பலவற்றை வெளிப்படுத்தினார். இயேசு, தான் சாகும் முன்பே அவர் எவ்வாறு இறந்து மாட்சிமைப்படப் போகிறார் என்பதனை நிக்கதேம் என்ற பரிசேயரிடம் பேசிக் கொண்டிருப்பதே இன்றைய நற்செய்தி. பழைய ஏற்பாட்டிலுள்ள இந்த வெண்கலப் பாம்பு என்பது ஒரு அடையாளம். பாலைவனத்தில் மோசே தலைமையில் இஸ்ரயேல் இனம் பயணம் செய்த பொழுது நச்சுப் பாம்புகளால் கடிபட்டு இறந்தனர். அப்பொழுது மோசே வெண்கலத்தால் செய்யப்பட்டப் பாம்பை உயர்த்தி, அதைப் பார்ப்போர் பாம்பின் நஞ்சுக்குப் பலியாக மாட்டார் என்று உறுதி மொழிந்தார். இந்த நிகழ்வுக்கும் கல்வாரி நிகழ்வுக்கும் மிக நெருங்கிய தொடர்பு இருக்கிறது. விலக்கப்பட்ட மரத்தின் மூலமாக நுழைந்த பாவம் சிலுவை மரத்தின் மூலமாகக் கழுவப்படுகிறது. முதல் ஆதாமின் மூலமாகக் கீழ்ப்படிதல் இல்லாமையால் வந்த பாவமும் சாவும் இயேசுவின் கீழ்ப்படிதலாலும் சாவினாலும்...

கிறிஸ்துவில் கொண்டிருக்கிற பற்றுறுதி

1பேதுரு 5: 5 – 14 தொடக்க கால கிறிஸ்தவ வரலாற்றில், ஆங்காங்கே கிறிஸ்துவை ஏற்றுக்கொண்ட மக்கள், ஒரு குழுவாக வாழ ஆரம்பித்தனர். சிறு சிறு கிறிஸ்தவ குழுக்கள் தோன்றின. தொடக்கத்தில் அவர்களோடு சீடர்கள் தங்கி, அவர்களுக்கு இறைவார்த்தையை அறிவித்திருந்தாலும், மற்ற இடங்களுக்கும் நற்செய்தி அறிவிக்க செல்ல வேண்டும் என்பதால், அவர்கள் வேறு இடங்களுக்குச் சென்றனர். அதேவேளையில், அவர்களை தொடர்ந்து கண்காணிப்பதும் அவசியமாக இருந்தது. இதற்கு சீடர்கள் கண்டுபிடித்த முறை தான், கடிதங்கள். தாங்கள் நற்செய்தி அறிவித்து, கிறிஸ்துவில் உறுதிப்படுத்தப்பட்ட மக்களுக்கு, அவர்கள் அவ்வப்போது, கடிதங்களை எழுதி, அவர்கள் தொடர்ந்து விசுவாசத்தில் வளர்வதற்கு, துணைநின்றனர். அப்படிப்பட்ட கடிதம் தான், இன்றைய முதல் வாசகத்தில் நமக்கு தரப்படுகிறது. இந்த திருமுகத்தில் பேதுரு மக்களுக்கு பல அறிவுரைகளைச் சொல்கிறார். குறிப்பாக, கிறிஸ்தவ வாழ்க்கையில் ஏற்படும் கவலைகளையும், சோதனைகளையும் அவர் விளக்கிக் கூறுகிறார். குறிப்பாக தீமைக்கு எதிரான போராட்டத்தில் வெற்றி பெற வேண்டிய முக்கியத்துவத்தை அவர்...

ஆண்டவர் தோற்றுவித்த நாள் இதுவே

திருப்பாடல் 118: 2 – 4, 22 – 24, 25 – 27a, (1) ”கடவுள் தோற்றுவித்த நாள்“ என்கிற இந்த வரிகள் பல நேரத்தில் தவறாக விளக்கம் கொடுக்கப்படுகிறது. இது புதிய நாளை குறிக்கக்கூடிய அர்த்தத்தில் பார்க்கப்படுகிறது. ஆனால், அது தவறு. இது கடவுள் பிற்காலத்தில் அனுப்ப இருக்கிற மீட்பரின் நாளை குறிக்கக்கூடியதாக இருக்கிறது. அதாவது, இயேசுவைக் குறிக்கும் வார்த்தையாக இது இருக்கிறது. இயேசுவில் மீட்பிற்கான அடித்தளக்கல்லை கடவுள் நட்ட இருக்கிறார் என்பதை, இந்த வரிகள் வெளிப்படுத்துவதாக இருக்கிறது. பழங்காலத்தில், மிகப்பெரிய அரசுகள், வெகு எளிதாக தங்களது அதிகாரத்தை சாதாரண நாடுகள் மீது நிலைநாட்டின. இஸ்ரயேலை அவர்கள் ஒரு பொருட்டாக மதித்ததே இல்லை. ஆனால், கடவுள் அவர்கள் வழியாகத்தான் இந்த உலகத்தை மீட்டார். பாபிலோனிலிருந்து நாடுகடத்தப்பட்ட யூதர்கள், தங்களது நாட்டிற்கு வந்து, மீண்டும் கோவிலைப் புதுப்பிக்கத் தொடங்கிய நாட்களில், இந்த திருப்பாடல் எழுதப்பட்டிருக்கலாம். எனவே தான், கட்டிடத்தின் தொடர்பான...