இறைவன் தரும் ஆசீர்வாதம்
1அரசர்கள் 18: 41 – 46 நாம் வணங்கும் இறைவன் ஆசீர்வாதத்தின் கடவுள் என்கிற செய்தி, இன்றைய வாசகத்தின் மூலமாக நமக்கு வழங்கப்படுகிறது. நாடெங்கிலும் பஞ்சம் ஏற்பட்டிருக்கிறது. மனிதர்களுக்கும், கால்நடைகளுக்கும் தண்ணீர் இல்லை. இப்படிப்பட்ட சூழ்நிலையில், இறைவாக்கினர் எலியா, தன்னை அரசன் முன்னால் நிறுத்தி, உண்மையான இறைவன் யாவே இறைவன் என்பதையும், பாகால் இறைவன் பொய்யானவர் என்பதையும் நிரூபிக்கிறார். மக்கள் அனைவரும் கடவுளை உண்மையான இறைவனாக ஏற்றுக்கொள்கிறார்கள். அந்த தருணமே, அவர்களின் பஞ்சம் நீங்கியது என்பதை, இந்த வாசகத்தில் நாம் பார்க்கிறோம். பாகால் தெய்வத்திற்கான பலிபீடங்களையும், மதகுருக்களையும் கொன்றொழித்த பின்பு, மக்கள் ஆண்டவரை ஏற்றுக்கொள்கிறார்கள். பாவங்களை மன்னிக்கின்ற தேவன், இஸ்ரயேல் மக்களின் மனமாற்றத்தை எண்ணிப்பார்த்து மகிழ்ச்சியடைகிறார். அவர்களை பஞ்சத்தின் பிடியிலிருந்து விடுவிக்க திருவுளம் கொள்கிறார். இறைவன் மக்கள் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்று திருவுளம் கொண்டிருக்கிறவர். அவர்கள் துன்பப்பட வேண்டும் என்று ஒருபோதும் நினைப்பவர் கிடையாது. எனவே தான், மக்கள் அவரை...