நற்கருணை ஆண்டவர் நம் இயேசு.
அன்பானவர்களே! நம்முடைய நற்கருணையின் ஆண்டவராம் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் என் அன்பின் நல்வாழ்த்துக்கள். நம்முடைய ஆண்டவர் பாலகனாய் இந்த உலகத்தில் தோன்றி நம் எல்லோருக்காகவும், ஏன் இந்த உலகத்தில் பிறக்கும் ஒவ்வொரு மனுஷனுக்காகவும்,அவருடைய தோளில் சிலுவையை சுமந்து நம் ஒவ்வொருவருடைய பாவத்துக்காகவும் சிலுவையில் அடிக்கப்பட்டு கடைசி சொட்டு இரத்தம் வரைக்கும் நமக்காக சிந்தி அவரின் உயிரை கொடுத்து நம்மை மீட்டுள்ளார் என்பது யாவரும் அறிந்ததே.எசாயா 53ம் அதிகாரத்தை முழுதும் வாசித்து பார்த்தால் நன்கு புரியும். பிரியமானவர்களே! இப்படிப்பட்ட ஆண்டவரை நாம் தெய்வமாக கொண்டுள்ளது எத்தனை விசேஷித்தவர்கள் நாம்.அவருடைய உடலை அப்பமாகவும்,அதாவது நற்கருணையாகவும்,அவர் இரத்தத்தை திராட்சரசமாகவும் பருகும் நாம் அவரின் எண்ணங்களின்படி வாழ்கிறோமா? என்று யோசித்து பார்ப்போம். இதை ஏன் சொல்கிறேன் என்றால் ஒரே இரத்தத்தால் கழுவப்பட்ட நமக்குள் எத்தனை பிரிவினைகள், எத்தனை ஜாதிகள்?. அவர் உடல் என்ன ஜாதியோ, நாம் எல்லாரும் அந்த ஜாதியே! அவரின் இரத்தம் என்ன மதமோ, நாம் எல்லோரும் அந்த மதமே. கிறிஸ்துவர்கள் என்று பெயர்...