யார் பெரியவர்.
என்றும்போல் அன்றும் விடியக்காலத்தில் சரளா எழுந்து வந்து வாசற்கதவை திறந்தாள். அப்பொழுது திண்ணையில் மூன்று வழிப்போக்கர்கள் [வயதானவர்கள்] உட்கார்ந்து இருந்தார்கள். சரளாஅவர்களைப் பார்த்து ஐயா!உங்களுக்கு என்ன வேண்டும், ஏன் இங்கே உட்கார்ந்து இருக்கிறீர்கள் என்று கேட்டாள் . அவர்கள் அவளிடம் அம்மா,நாங்கள் தூர தேசத்திலிருந்து வருகிறோம். இராமுழுதும் நடந்து வந்ததால் சிறிது களைப்பாக உள்ளது. அதனால் சிறிது நேரம் இங்கே உட்கார்ந்து இளைப்பாறிவிட்டு செல்லலாம் என்று நினைத்து இங்கே உட்கார்ந்து இருக்கிறோம். இதோ நன்கு விடிந்ததும் அருகில் உள்ள டீ கடைக்கு சென்று டீ அருந்திவிட்டு பக்கத்து கிராமத்துக்கு செல்கிறோம்,என்று சொன்னார்கள். உடனே சரளா ஐயா!உங்களுக்கு விருப்பம் இருந்தால் நான் டீ போட்டு தருகிறேன். நீங்கள் அருந்திவிட்டு செல்லுங்கள். நீங்கள் என் அப்பா மாதிரி இருக்கிர்கள் என்று சொன்னாள். அதற்கு அவர்கள் உன்னிடம் டீ வாங்கி குடிக்க வேண்டும் என்றால் உன் வீட்டுக்குள் வரவேண்டும் என்றால் எங்களில் யாரை முதலில் அழைப்பாயோ, அதைவைத்துதான் நாங்கள் உள்ளே வருவோம் என்று சொன்னார்கள். நாங்கள் மூவரும் ஒவ்வொரு குணாதிசயம் கொண்டவர்கள். நாங்கள்...