Category: Daily Manna

ஆயிரம் தலைமுறைமட்டும் இரக்கத்தை தருபவர் நம் கடவுள். இணைச்சட்டம் 7:9.

கடவுளுக்குள் அன்பான சகோதர,சகோதரிகளுக்கு,நம் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் நல்வாழ்த்துக்கள். இதோ!இந்த நாளிலும் நம்முடைய ஆண்டவராகிய இயேசு காட்டிய பாதையில் நம் வாழ்க்கை பயணம் செல்லுமேயானால்,நம்முடைய வாழ்க்கை மட்டும் அல்லாது நமக்கு பின் வரும் நமது சந்ததியும் ஆசீர்வாதத்தை பெற்று வாழும் என்பதில்சிறிதேனும் சந்தேகம் இல்லை. நம் முன்னோர்களாகிய ஆபிரகாம்,ஈசாக்கு,என்பவர்களுக்கு நம் கடவுள் வாக்குத்தத்தம் செய்தபடியே,அவர்களின் பின்வந்த சந்ததி எத்தனையோ பாவங்களை செய்து ஆண்டவரின் நாமத்தை அலட்சியப்படுத்தினாலும் வாக்கு மாறாத நம் கடவுள் அவர்களுக்கு ஆணையிட்டப்படியே  அவர்கள் சந்ததியாரும் ஆசீர்வதிக்கப்பட அவர்கள்மேல் இரக்கம் பாராட்டுவதை திருச்சட்டத்தில் காணலாம். ஆகையால் நாம் கடவுளிடம் கேட்கும் காரியத்தை பெற்றுக்கொள்ள அவர் காட்டிய வழியில் நடந்து அவருடைய சினம் நமக்கு எதிராக செயல்பட்டு நம்முடைய ஆசீரை அழிக்காதபடிக்கு காத்துக்கொள்வோம். ஏனெனில் நம்முடைய கடவுளாகிய ஆண்டவரின் தூயமக்கள் நாம். அதுமட்டுமல்லாது இந்த பூமியில் உள்ள மக்களினங்களில் நம்மையே தம் சொந்த மக்களாக தெரிந்துக்கொண்டார். நாம் மிகவும் நல்லவர்கள் என்ற காரணத்தினால் அல்ல. நம்மீது அவர் காட்டிய அளவுக்கதிகமான அன்பினாலும், நம் முன்னோர் களுக்கு...

கடவுள் நமக்கு விதித்த வழிகளில் நடப்போம். இணைச்சட்டம் 5:33.

அன்பார்ந்த சகோதர,சகோதரிகளுக்கு,நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் நல்வாழ்த்துக்கள். இந்த நாளிலும் நம் ஆண்டவராகிய கடவுள் நமக்கு முன்னே சென்று குன்றுகளை சமப்படுத்தவும்,செப்புக்கதவுகளை,உடைத்து இருப்புத்தாழ்ப்பாள்களை தகர்த்து இருளில்  மறைத்து வைத்த கருவூலங்களை யும்,புதையல்களையும்,தர காத்திருக்கிறார்.ஏனெனில் நம்மை பெயர் சொல்லி அழைத்த ஆண்டவர் அவரே என்று நாம் அறியும்படிக்கு இதை செய்கிறார். எசாயா 45:2,3. ஆகையால் நாம் அதை பெற்றுக்கொள்ள நம்மை தகுதிப்படுத்த வேண்டுமாய் விரும்புகிறார். நாம் அவர் விதித்த வழிகளில் நடந்தால் நிச்சயம் அவைகளை எல்லாம் பெற்றுக்கொள்வோம் என்பதில் சிறிதேனும் சந்தேகம் இல்லை. ஒளியை உண்டாக்கி, இருளை படைத்து நல்வாழ்வை அமைத்து கொடுப்பவர் அவரே. உலகை உருவாக்கி அதின்மேல் மனிதரை படைத்து, வானத்தை விரித்தவரும் அவரே.அவரின்றி கடவுள் இல்லை. நீதியுள்ளவரும்,மீட்பு அளிப்பவரும் அவரே, முழங்கால் அனைத்தும் அவர்முன் மண்டியிட செய்கிறவரும் அவரே. இத்தனை வல்லமை உள்ள தேவனின் திருவுளத்தை அறிந்து அவருக்கு பிரியமாய் நடந்து இந்த தவக்காலத்திலும் அவரின் பிள்ளைகள் என்ற நற்பெயரை பெற்றுக்கொள்வோம்.அப்பொழுது நாம் நினைப்பதற்கு மேலான ஆசீர்வாதத்தை பெற்றுக் கொள்ளலாம். அவர் நமக்கு...

மனத்தாழ்மையை ஆடையாய் அணிந்துக்கொள்வோம்.

இறைஇயேசுவில் அன்பான சகோதர, சகோதரிகளுக்கு தவக்கால வாழ்த்துக்களை சொல்வதில் மிக்க மகிழ்ச்சி கொள்கிறேன். நம்மை இருளிலிருந்து ஒளியினிடத்திற்கு அழைத்து வந்த நம் இயேசுவின் குணங்களை நாமும் பெற்று அவரின் திருவுளச் சித்தத்தை நிறைவேற்ற அவர் பாதம் பணிந்திடுவோம். அவர் சிலுவை சுமப்பதற்கு முன் நமக்கு கற்றுக்கொடுத்த அறிவுரைகளை நாமும் அப்படியே கடைப்பிடிப்போம். கடவுளின் மைந்தனாய் வந்த அவரே, அவரின் தந்தைக்கு எவ்வளவாய் கீழ்படிந்து நடந்தார் என்றால் நாம் இன்னும் எவ்வளவு கீழ்படிய கற்றுக்கொள்ள வேண்டும் என்பதை உணர்ந்து செயல்படுவோம். நான் கனிவும் மனத்தாழ்மையும் உடையவன். ஆகவே என் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொண்டு என்னிடம் கற்றுக்கொள்ளுங்கள். அப்பொழுது உங்கள் உள்ளத்திற்கு இளைப்பாறுதல் கிடைக்கும். ஆம் என் நுகம் அழுத்தாது: என் சுமை எளிதாயுள்ளது” என்றார். மத்தேயு 11 :29 , 30. இந்த நாளிலும் நாம் ஆண்டவரைப்போல் நம்மை மாற்றி ஒரே மனத்தவராய் இருக்கவும், உயர்வுமனப்பான்மை கொள்ளாமல் தாழ்நிலையில் உள்ளவர்களோடு நன்கு பழகவும், நம்மையே அறிவாளி என்று கருதாமல் பிறரையும் மதித்து வாழ்ந்து இந்த...

அன்புக் கயிறுகளால் கட்டி நடத்தும் நம் ஆண்டவர் இயேசு.

அன்பார்ந்த சகோதர,சகோதரிகளே,நம் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் இனிய நல்ல நாமத்தில் என் அன்பான நல்வாழ்த்துக்கள். நம் ஆண்டவராகிய இயேசு நமக்கு ஆயிரக்கணக்கில் வேதத்தின் மகத்துவங்களை [திருச்சட்டங்களை ] எழுதி கொடுத்திருந்தாலும் நாம் அவைகளை பற்றிக்கொள்ளாமல், அவைகள் நமக்கில்லை யாருக்கோ என்று அலட்சியப்படுத்தி விட்டு பிறகு துன்பங்களும், துயரங்களும் வரும்பொழுது மனம் சோர்ந்து போய்விடுகிறோம். ஓசேயா 8:12.  ஆண்டவராகிய இயேசு 40 நாள் இரவும், பகலும் நோன்பிருந்து பின் சாத்தானால் சோதிக்கப்படும்படி பாலை நிலத்திற்கு தூய ஆவியால் அழைத்துச்செல்லப்பட்டார் என்று மத்தேயு 4:1,2. ஆகிய வசனங்களில் வாசிக்கிறோம். அவருக்கே அந்த நிலை என்றால் நமக்கு எப்படி என்று இந்த தவக்காலத்தில் யோசிப்போம். நமக்காக பிறந்து வளர்ந்து நம்முடைய பாவங்களை சிலுவையில் சுமந்து பின்னர் அந்த சிலுவையிலே அடிக்கப்பட்டு, அந்த நேரத்திலும் நமக்காக பரிந்து பேசி, நமக்காக வேண்டுதல் செய்கிறார். இந்த மகத்துவமான ஆண்டவரின் சிந்தனைகளை, அவர் மனவிருப்பத்தை நாம் அறிந்து அவர் விரும்பும் வழியில் நடந்து அவருக்கு மகிமை சேர்ப்பதே இந்த தவக்காலத்தின் சிறப்பாகும். ஏதோ கடனே என்று வாழாமல் வாழ்க்கையின்...

எல்லா மக்களையும் ஒளிர்விக்கும் உண்மையான ஒளி நம் இயேசு.

அன்பான சகோதர,சகோதரிகளுக்கு,நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நல்ல நாமத்தில் அன்பான நல்வாழ்த்துக்கள். கடவுள் மனித அவதாரம் எடுத்து நம்மை மீட்கும் பொருட்டு இந்த உலகில் பிறந்து வளர்ந்து பலப்பல நன்மைகளை செய்து கடைசியில் தம்முடைய உயிரையும் கொடுத்து சிலுவையில் அடிக்கப்பட்டு ஈட்டியால் குத்தப்பட்டு மரித்தார் என்று வாசிக்கிறோம். இதை எல்லாம் ஏன் செய்தார்? இருளில் இருக்கும் நம் ஒவ்வொருவரையும் ஒளியினிடத்திற்கு அழைத்து செல்லவே இவ்வாறு செய்தார். ஆனால் நாமோ ஒளியான அவரை அறிந்துக்கொள்ளாமல் இருக்கிறோம். தொடக்கத்தில் வாக்கு இருந்தது. அவ்வாக்கே கடவுளாகவும் இருந்தது. அனைத்தும் அவரால் உண்டாயின. அவரால் இன்றி எதுவும் உண்டாகவில்லை. அவரிடமே வாழ்வு இருந்தது. அவ்வாழ்வே மனிதருக்கு ஒளியாக இருந்தது. ஒளியாக வந்த அவர் இருளை விரட்டி அடித்தார். இந்த பூமியில் பிறந்த அனைவருக்கும் வாழ்வளிக்கும் தெய்வமாக வந்த அவரை ஏற்றுக்கொண்டு நாமும் இந்த தவக்காலத்தில் அவர் விரும்பும் செயல்களை செய்து அவரின் நாமத்திற்கே மகிமை சேர்க்க கடனாளியாக இருக்கிறோம். அன்பானவர்களே நாம் யாவரும் அவரின் வார்த்தையாகிய வாக்குகளை கடைப்பிடித்து அவர் தரும் தீர்ப்பில்...