Category: Daily Manna

நமது விண்ணப்பத்தை கேட்பவர் நம் ஆண்டவர்.

அன்பான சகோதர,சகோதரிகளுக்கு,நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் நாமத்தில் என் அன்பின் நல்வாழ்த்துக்கள். இன்றும் கண்ணீரோடு, கவலையோடு எனக்கு உதவி செய்ய யாருமே இல்லையே, என்னை நேசித்து என்மேல் அன்பு காட்ட ஒருவரும் இல்லையே என்று ஏங்கித் தவிக்கிறீர்களா? நீங்கள் விடும் பெரும் மூச்சை ஆண்டவர் கேட்டுக்கொண்டு இருக்கிறார் . உங்களுக்கு நேரிட்ட தீங்கை நினைத்து மனம் இரங்கி உங்கள் எதிரிகளிடம் இருந்து காப்பாற்ற உங்களுக்காக காத்திருக்கிறார். இரவும்,பகலும் வெள்ளமென கண்ணீர் விடும் உங்கள் விண்ணப்பத்தையும், ஜெபத்தையும் கேட்கிறார். அதற்கு நாம் முதற்சாமத்தில் எழுந்து நம் உள்ளத்தில் உள்ளதை அவர்முன் நம் விண்ணப்பத்தை தண்ணீரைப்போல் ஊற்றும்படி கூறுகிறார். தாம் தேர்ந்துக்கொண்டவர்கள் அல்லும், பகலும் தம்மை நோக்கி கூக்குரல் இடும்பொழுது கடவுள் அவர்களுக்கு நீதி வழங்காமல் இருப்பாரோ? அவர்களுக்கு துணை செய்ய காலம் தாழ்த்துவாரோ? விரைவில் அவர்களுக்கு நீதி வழங்குவார் என நான் உங்களுக்கு சொல்கிறேன் என்று இயேசு நமக்கு வாக்கு அளிக்கிறார். லூக்கா 18:7. நாம் ஞானமுள்ளவர்களாய் நடந்து நேர்மையானவற்றை பேசினால் கடவுளின் உள்ளம் மகிழ்ந்து நம் விண்ணப்பத்தைக் கேட்கும். வளமுடன் இருக்கும்...

கடவுளின் வாக்கை நம் இதயத்தில் பதிப்போம்.சங்கீதம் 119:11

அன்பான சகோதர,சகோதரிகளுக்கு,நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் நல்வாழ்த்துக்கள். இந்த நாளிலும் நம் கடவுள் நம்முடைய வேண்டுதல்களை கேட்டு நம் தேவைகளை எல்லாம் பூர்த்தி செய்ய ஆவல் உள்ளவராய் நமது அருகில் இருந்து பார்த்துக்கொண்டு என் மகனே,என் மகளே,உனக்கு என்ன வேண்டும்? நீ கேட்பதை தர ஆவலாய் இருக்கிறேன் நீ என் சித்தப்படி கேட்டால் அதை உனக்கு நிச்சயம் தருவேன்,என்று சொல்கிறார்.ஆகையால் நாம் அவர் நமக்கு அருளிய வாக்கின் படியே கேட்டு அவரிடத்தில் இருந்து நமக்கு தேவையான ஆசீர் வாதங்களை எல்லாம் கேட்டு பெற்றுக்கொள்வோமாக! ஆண்டவர் நம்மை எந்த அளவு நேசிக்கிறாரோ அந்த அளவு நம்மை சோதித்து பார்ப்பார். நாம் அதை அறிந்து எந்த சோதனையிலும் மனம் சோர்ந்து போகாமல் அவரின் பாதமே தஞ்சம் என்று அவரையே பற்றிக்கொண்டால் நமக்கு மனம் இரங்கி,நம் மேல் மனதுருகி நம் வேண்டுதலை நமக்கு அருளிச் செய்வார்.ஒரு சிறு குழந்தையை ஒரு தாய் குழந்தையின்...

மனந்திரும்பிச் சிறு பிள்ளைகளைப்போல் மாறுவோம்.

அன்பான சகோதர, சகோதரிகளுக்கு நம் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் இனிய நல்நாமத்தில்  என் அன்பின் நல்வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மிக்க மகிழ்ச்சி கொள்கிறேன். இந்த உலகில் இயேசு வாழ்ந்த காலத்தில் அவருடைய சீடர்கள் இயேசுவை அணுகி விண்ணரசில் யார் பெரியவர் என்று கேட்டார்கள். அப்பொழுது அவர் ஒரு சிறு பிள்ளையை அழைத்து அவர்கள் நடுவில் நிறுத்தி நீங்கள் மனந்திரும்பிச் சிறு பிள்ளைகளைப்போல் ஆகாவிட்டால் விண்ணரசில் புகமாட்டீர்கள் என உறுதியாக உங்களுக்கு சொல்கிறேன். இந்த சிறு பிள்ளையைப்போல் தம்மைத் தாழ்த்திக் கொள்பவரே விண்ணரசில் மிகப்பெரியவர்.இத்தகைய சிறுபிள்ளை ஒன்றை என் பெயரால்ஏற்றுக்கொள்பவர் எவரும் என்னையே ஏற்றுக்கொள்கிறார் என்று மத்தேயு 18:1 to 5 வரை வாசிக்கிறோம். நாமும் இந்நாளில் ஆண்டவர் விரும்பும் வண்ணம்நாமும் ஒரு சிறுகுழந்தையைப் போல் மாறுவோம். அப்பொழுது நம் ஆண்டவர் நம்மை உயர்ந்த கன்மலையின் மேல் நிறுத்துவார். இஸ்ரயேல் குழந்தையாய் இருந்தபோது அவன்மேல் அன்பு கூர்ந்தேன் எகிப்திலிருந்து என் மகனை அழைத்து வந்தேன். ஆனால் எவ்வளவு நான் வருந்தி அழைத்தேனோ அவ்வளவாய் என்னை விட்டு தூரமாய்...

நம் கடவுளின் பெயரால் வெற்றிக்கொடி நாட்டுவோமாக! தி.பா.20:5.

அன்பான இறைமக்கள் யாவருக்கும் நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் என் அன்பான நல்வாழ்த்துக்கள். அன்பானவர்களே! இந்த பிப்ரவரி மாதம் முழுதும் கடவுள் நம்மோடு கூடவே இருந்து எல்லாத் தீங்கிற்கும் விலக்கி பாதுகாத்து நம்முடைய தேவைகளை சந்தித்து ஆசீர்வதித்து வழிநடத்தி அவரின் செட்டைகளின் மறைவில் வைத்து காத்து வந்திருக்கிறார். இதுபோல் இந்த மார்ச் மாதம் முழுதும் கடவுள் நம்மோடு இருந்து அவரின் கிருபையால் தாங்கி காத்து வழிநடத்த வேண்டுமாய், நாம் ஒவ்வொருவரும் அவருடைய பெயரால் வெற்றி பெற்று அவருக்கே வெற்றிக்கொடி நாட்டுவோமாக! ஆண்டவருக்கு புகழ்ப்பா அமைத்து பாடுவோம்.ஏனெனில் அவர் நமக்கு மாட்சியுறும் செயல்களைப் புரிந்துள்ளார். அனைத்துலகமும் இதை அறிந்து ஆர்ப்பரித்து அக்களிப்போம். தூயவர் நம்மிடையே சிறந்து விளங்குகிறார். ஏசாயா 12:5,6. இந்த மாதத்தில் அவர் பரிவு என்னும்  கட்டுகளால் நம்மை பிணைத்து,அன்புக் கயிறுகளால் கட்டி, நம் கழுத்தின்மேல் இருந்த நுகத்தை அகற்றி நமக்கு எல்லாவற்றையும் தந்து காத்திருக்கிறார். ஓசேயா 11:4. நாம் எத்தனையோ காரியத்தில் அவரை துக்கப்படுத்தியிருந்தாலும் அன்பே உருவான அவர் நம் தப்பிதங்களை பொருட்படுத்தாமல் அவரின் இரத்தத்தால்...

நம் உடன்பிறந்தார் தப்பிதங்களை மனப்பூர்வமாய் மன்னிப்போம். மத்தேயு 18:35

அன்பும், பாசமும் நிறைந்த என் உடன் பிறவா சகோதர, சகோதரிகளுக்கு நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் என் அன்பின் நல்வாழ்த்துக்கள். கடவுள் நமக்கு அவரின் அன்பின் மேன்மையை உணர்த்தி நாம் ஒவ்வொருவரும் எப்படி வாழ வேண்டும் என்று நமக்கு சொல்லி வைத்திருக்கிறார். நாமும் அவரின் கட்டளைக்கு கீழ்படிந்து நடப்போமானால் நிச்சயம் இந்த உலகில் ஒரு வெற்றி உள்ள வாழ்வை வாழ்ந்து அவர் மகத்துவத்தை நாமும் பெற்றுக்கொள்ளலாம். இந்த தவக்காலத்திலும் நாம் தினந்தோறும் ஆலயம் செல்லலாம், திருப்பலியில் பங்கு பெறலாம். நம்முடைய மனசாட்சியை சோதித்து பார்ப்போம். அவற்றை ஒழுங்காக கடைப்பிடிக்கும் நாம் நம் சகோதர, சகோதரிகளிடம், நம் பெற்றோர்களிடம், நம் பிள்ளைகளிடம், கணவன் மனைவியிடமும், மனைவி கணவனிடமும், நம் நண்பர்களிடமும் நாம் எவ்வாறு நடந்து கொள்கிறோம்? கடவுளின் விருப்பப்படி செயல்படுகிறோமோ? அல்லது வெளியில் அவர்களோடு பேசி நம் உள்ளத்தில் அவர்களை வெறுக்கிறோமா? என்று நம்மை நாம் ஆராய்ந்துப் பார்ப்போம். நம் மனசாட்சி நாம் செய்யும் காரியத்தை குற்றம் உண்டு, குற்றம் இல்லை என்று நமக்கு தீர்ப்பு வழங்கும்....