அன்பும்,அமைதியும்,அளிக்கும் கடவுள் நம்மோடு இருக்கிறார்.
கர்த்தருக்குள் அன்பான சகோதர,சகோதரிகளுக்கு, நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் என் அன்பின் நல்வாழ்த்துக்கள். இந்த நாளிலும் நாம் ஆண்டவருக்கு பிரியமானவர்களாய் இருக்கிறோமா என்று நம்முடைய இருதயத்தை ஆராய்ந்து பார்த்து அவருக்கு பிரியமாய் வாழ்ந்தோமானால் அவர் நம்மேல் வைத்த அன்பு இன்னது என்று விளங்கும். அன்பே உருவான கடவுள் நம் ஒவ்வொருவருக்காகவும் மரணத்தை ருசிப்பார்த்தார்.நாம் சந்தோசமாக, சமாதானமாக, அமைதியுடன் வாழ வேண்டுமாய் அவர் தம் உயிரையே நமக்காக கொடுத்தார். நம்முடைய அறிவுக்கெட்டாத அந்த அன்பை நாமும் அறிந்தோமானால் அதின் மகிமை நமக்கு நன்கு விளங்கும்.இதை வாசிக்கும் நீங்கள் ஒவ்வொருவரும் அன்பை அறிந்துக்கொள்ளும் வல்லவர்களாகவும், தேவனுடைய சகல பூரணத்தினாலும நிறையப்படவும், கடவுளின் மகிமையின்படி அவரின் அன்பின் மகத்துவத்தை அறிந்து செயல்பட்டால் எவ்வளவு நலமாயிருக்கும். அப்பொழுது நம் தேவன் நமக்கு அன்பையும்,அமைதியும் அளித்து நம்மோடு இருந்து நம்மை ஆசீர்வதிப்பார். அன்பு அடுத்திருப்பவருக்குத் தீங்கிழைக்காது. அதனால் தான் மறைநூல் அன்பு திருச்சட்டத்தின் நிறைவு என்று கூறுகிறது. நாம் ஒருவரிலொருவர் ஊக்கமான அன்பு...