கர்த்தர் வெறுக்கும் காரியங்களை நாம் செய்யாமல் இருப்போம்.
கர்த்தருக்குள் அன்பான சகோதரர்,சகோதரிகளுக்கு,நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் என் அன்பின் நல்வாழ்த்துக்கள். இந்த நாளிலும் நாம் ஆண்டவர் விரும்பும் காரியங்களில் நடந்து அவர் ஒருவருக்கே மகிமை உண்டாக வாழ்ந்து அவரின் திருவுளத்தை நிறைவேற்ற ஒன்றுபடுவோம். நாம் ஒருவரோடு ஒருவர் உண்மையாய் இருப்போம். நாம் வாழும் வாழ்க்கை நீதியாகவும், நல்லுறவுக்கு வழி கோலுவதாகவும் இருக்கட்டும். ஒருவருக்கு எதிராக மற்றொருவர் தீமைசெய்ய மனத்தாலும் நினைக்காமலும், பொய்யாணை இடுவதையும் தவிர்ப்போம். ஏனெனில் இவைகளை நமது ஆண்டவர் வெறுக்கிறார். செக்கரியா 8 – 16 ,17. நீதியை விதைப்போம்,அன்பின் கனியை அறுவடை செய்வோம். ஆணவத்தையும், இறுமாப்பையும், தீமையையும், உருட்டையும், புரட்டையும் கர்த்தர் வெறுக்கிறார். கடவுள் நேர்மையாளரையும், பொல்லாரையும் சோதித்தறிகிறார். வன்முறையில் நாட்டங்கொள்வோரை அவர் வெறுக்கிறார். நேர்மையுடன் நீதி வழங்கவும், ஒருவருக்கொருவர் அன்பும், கருணையும் காட்டுவோம். நம்முடைய சகோதரருக்கு எதிராக தீமைசெய்ய மனத்தாலும் நினைக்கவேண்டாம். ஆவியானவர் வாயிலாக நமது ஆண்டவர் போதிக்கும் திருச்சட்டத்தையும், வாக்குகளையும் கேட்டும் நமது இதயத்தை கடினப்படுத்தாதபடிக்கு ஆண்டவரின் வார்த்தைக்கு செவிகொடுப்போம். அவர் நமக்கு கட்டளையிடும் காரியங்களை நாம் செய்யாவிட்டால் நமது...