எப்பொழுதும் விழிப்பாயிருந்து ஜெபம் செய்திடுவோம். லூக்கா 21:36.
கர்த்தருக்குள் அன்பான சகோதர,சகோதரிகளுக்கு,நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் என் அன்பின் நல்வாழ்த்துக்கள். இந்த நாளிலும் நாம் நமக்கு ஏற்படும் எல்லா தொல்லைகளில் இருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள ஆண்டவரின் பாதத்தில் நம்மை ஒப்புவித்து அவரையே சார்ந்து அவரையே பற்றிக்கொண்டால் அப்பொழுது நமக்கு ஏற்படும் எல்லா தொல்லைகளில் இருந்தும் நம்மை பாதுகாத்து கோழி தன் குஞ்சுகளை காக்கும் வண்ணமாய் நமது ஆண்டவரும் நம்மை பாதுக்காத்து வழிநடத்துவார். நாம் இந்த உலக பிரமான காரியத்தில் ஈடுபடும் முன்னே அதற்காக எவ்வளவு நேரம் ஒதுக்குகிறோம், அதற்காக எவ்வளவோ பிரயாசப்பட்டு ஆயத்தமாகிறோம். ஒரு ஓட்டப்பந்தயத்தில் ஓட வேண்டுமானால் அதற்காக மாதக்கணக்கில் பயிற்சி எடுக்கிறோம். ஒரு பரீட்சைக்கு தயாராக வருஷ கணக்கில் படிக்கிறோம். அதுவே ஆண்டவரின் காரியத்தில் நாம் எவ்வளவு நேரம் ஒதுக்குகிறோம்? எவ்வளவு நேரம் வேதம் வாசிக்கிறோம்? எவ்வளவு நேரம் ஜெபம் செய்கிறோம்? ஆராய்ந்து பார்ப்போம். அழிந்து போகும் காரியத்துக்கு அவ்வளவு நேரத்தை ஒதுக்கும் நாம் அழிவில்லாத நித்திய வாழ்வை பெற்றுக்கொள்ள எவ்வளவு நேரம் ஆயத்தமாகிறோம் என்று இதை வாசிக்கும் ஒவ்வொருவரும் உங்கள் மனசாட்சியிடம்...