Category: Daily Manna

கர்த்தர் தம்முடைய வார்த்தையினாலே தம்மை வெளிப்படுத்துவார்

கடவுளுக்குள் அன்பான சகோதர,சகோதரிகளுக்கு,நமது ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் நல்வாழ்த்துக்கள். இந்த நாளிலும் நாம் நமது ஒவ்வொரு தேவைகளுக்கும் ஆண்டவரிடம் கேட்போமானால் அவர் நிச்சயம் நம்மை கைவிடாமல் தமது வார்த்தையை அனுப்பி நமது தேவைகளை சந்திப்பார். நம்மை பேர்சொல்லி அழைத்த தேவன் நம்மை முற்றும் முடிய காக்க வல்லவராய் இருந்து ஒரு தீங்கும் நம்மை தொடாமல் காப்பார். நாம் தனிமையில் தவிக்கும் பொழுது அவரின் வார்த்தைகள் நம்மை ஆற்றி, தேற்றும். நம் அருகில் நம்மோடு கூடவே இருந்து நம் கண்ணீரை துடைத்து அவருடைய அளவற்ற அன்பினால் அனைத்துக்கொள்வார். அவருடைய அன்பு என்ற தென்றல் காற்று நம்முடைய இதயத்தில் வீசும் பொழுது நமது துக்கம் யாவும் சந்தோஷமாக மாறும். கவலை, கண்ணீர் யாவும் மறைந்து விடும். நாம் 1 சாமுவேல் 3ம் அதிகாரத்தில் வாசிக்கும்பொழுது சாமுவேல் சிறு குழந்தையாய் இருந்தபொழுதே கர்த்தர் அவரை ஒருநாள் பெயர் சொல்லி கூப்பிடுகிறார். ஆண்டவர் தன்னை கூப்பிடுவதை அறியாத நிலையில் அவர் ஏலியினிடத்தில் போய் இதோ இருக்கிறேன். என்னை கூப்பிட்டீரே என்று கேட்கிறார். அதற்கு ஏலி...

நன்மை செய்வதில் சோர்ந்து போகாமல் இருப்போம்

கர்த்தருக்குள் அன்பான சகோதர,சகோதரிகளுக்கு,நம் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் நல்வாழ்த்துக்கள். இந்த நாளிலும் நாம் நம்முடைய ஆண்டவரின் திருவுள சித்தத்தை நிறைவேற்றுவதில் சோர்ந்து போகாமல் இருந்து அவரிடம் கற்றுக்கொண்ட போதனையின்படியே வாழ்ந்து நற்செய்திகளை பின்பற்றி வாழ்வோம். நாம் எப்பொழுதும் நன்மை செய்வதில் ஞானம் உடையவர்களாயும், தீமை என்றால் என்ன என்றே தெரியாத கபடற்றவர்களாயும் இருக்க கற்றுக்கொள்வோம். உரோமையர் 16:19. இந்த உலகத்தின் போக்கின்படி இல்லாமல் நம் உள்ளம் புதுப்பிக்கப்பெற்று மாற்றம் அடைந்து எது நல்லது,எது உகந்தது,எது நிறைவானது என்பதை தெளிவாக கண்டு அதன்படியே வாழுவோம். நம்முடைய அன்பு கள்ளமற்றதாய் இருப்பதாக! தீமையை வெறுத்து நன்மையையே பற்றிக்கொள்ளுவோம். தீமை நம்மை வெல்ல இடம் கொடுக்காமல் நன்மையால் தீமையை வெல்லுவோம். நாம் கடவுளிடம் அன்புகூர்ந்து அவரது திட்டத்தின்படி செய்தால் அழைக்கப்பட்ட நம்மை தூய ஆவியானவர் எல்லாவற்றிலும் நம்மை நன்மையாகவே வழிநடத்துவார். ஆனால் நாம் சமயத்தில் நன்மை செய்ய விரும்பினாலும் நம்மால் தீமையைத்தான் செய்ய முடிகிறது. ஏனெனில் நமது பிறவிக்குணம் அவ்வாறு செய்ய வைக்கிறது. ஆகையால்தான் நாம் ஆண்டவரின் இரத்தத்தால் கழுவப்பெற்று...

மனந்திரும்பி பாவமன்னிப்பை பெற்றுக்கொள்வோம்.

கர்த்தருக்குள் அன்பான சகோதரர்,சகோதரிகளுக்கு,நம் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் நல்வாழ்த்துக்கள். இந்த நாளிலும் உலகத்தில் நடக்கும் ஒவ்வொரு நிகழ்வுகளையும் நாம் பார்க்கும் பொழுது எத்தனை அதிர்ச்சியான காரியங்கள் நம்மை சுற்றி நடந்துக்கொண்டு இருக்கிறது. நாம் தாயின் வயிற்றிலிருந்து வரும் பொழுது ஒன்றும் கொண்டுவரவில்லை.இந்த உலகத்தை விட்டு செல்லும் பொழுது நம்முடைய உழைப்பின் சம்பாத்தியம் எதையும் கொண்டு போக போவதுமில்லை. இது கொடிய தீங்காகும். நாம் எப்படி வந்தோமோ அப்படியே போகிறோம். என்னென்னமோ செய்ய திட்டமிடுகிறோம். ஆனாலும் ஒரு பயனும் இல்லை. வாழ்நாள் முழுதும் இருள், கவலை, பிணி, எரிச்சல், துன்பம். ஆகையால் நாம் கடவுள் நமக்கு வரையறுத்திருக்கும் குறுகிய வாழ்நாளில் மனிதர் உண்டு குடித்து, உலகில் தம் உழைப்பின் பயனைத் துய்ப்பதே நலம். அதுவே தகுந்ததுமாகும் என்று சபைஉரையாளர் 5:15,18 ஆகிய வசனங்களில் வாசிக்கிறோம். இந்தநாளிலும் நாம் செய்திகளில் நேபால் நாட்டில் நடந்த பூமி அதிர்ச்சியினால் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்ததை காண்கிறோம்.இதன்மூலம் ஆண்டவர் உயிரோடு இருக்கும் நமக்கு ஒரு எச்சரிப்பை உண்டு பண்ணுகிறார். நாம்...

ஆண்டவரை நாடுவோருக்கு நன்மை ஏதும் குறையாது

கர்த்தருக்குள் அன்பான சகோதரர்,சகோதரிகளுக்கு, நம் தேவனாகிய இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் என் அன்பின் நல்வாழ்த்துக்கள். நாம் ஆண்டவரை தேடுவதால் நமக்கு அவர் உண்டு பண்ணி வைத்திருக்கிற ஆசீர்வாதங்கள் அநேகமாய் இருக்கும். அவரை கடவுளாக கண்டுக்கொண்ட நாம் பேறுபெற்றவர்கள். ஏனெனில் நம்மை அவர் தமது உரிமை சொத்தாக தெரிந்தெடுத்துள்ளார். அவர் வானில் இருந்தாலும் அங்கே இருந்து நம்மை காண்கிறார். அவரின் சிங்காசனத்திலிருந்து உலகெங்கும் வாழ்வோரைக் கூர்ந்து நோக்கிக் கொண்டுத்தான் இருக்கிறார். நம் உள்ளங்களை உருவாக்கியவரும்,நமது செயல்கள் அனைத்தையும் உற்று நோக்குபவரும் அவரே. ஆகையால் தான் இவ்வாறு சொல்கிறார். சிங்கக் குட்டிகள் உணவின்றிப் பட்டினி இருக்க நேரிட்டாலும், ஆண்டவரை நாடுவோர்க்கு நன்மை ஏதும் குறையாது.சங்கீதம் [திருப்பாடல்கள் 34:10 ல் வாசிக்கிறோம். நாம் யோனா புத்தகத்தை வாசித்து பார்ப்போமானால் ஆண்டவரின் அன்பையும், அவரின் பேரன்பையும், இரக்கத்தையும், மனஉறுக்கத்தையும் காணலாம். கடவுள் நம்மை சில வேளைகளில் கடினமான பாதையில் வழிநடத்தினாலும் அதில் நன்மையே உண்டாகும். அவர் தீர்ப்பு வழங்குவது பழிவாங்குவதற்கு அல்லவே அல்ல. தமது மக்களை திருத்துவதற்கே. நினிவே மக்கள் பாவம்...

ஆண்டவர் நம்மை என்றென்றைக்கும் கைவிடவே மாட்டார்.

கர்த்தருக்குள் அன்பான சகோதர, சகோதரிகளுக்கு நம் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் நல்வாழ்த்துக்கள். இந்த நாளிலும் நம்மை ஆண்டவர் நமது எல்லாத்தேவைகளையும் சந்தித்து நம்மை அவருடைய இறக்கைகளின் மறைவில் மறைத்து காத்து, நாம் போகையிலும், வருகையிலும் நம்மோடு கூடவே இருந்து நம்மை என்றென்றைக்கும் கைவிடாமல் காப்பார். அதற்கு நாம் நமக்கு ஒத்தாசை வரும் பர்வதங்களுக்கு நேராய் நம்முடைய கண்களை ஏறெடுப்போம். அப்பொழுது விண்ணையும், மண்ணையும் உண்டாக்கிய ஆண்டவரிடமிருந்து நமக்கு உதவி வரும். நம்முடைய கால் இடறாத படிக்கு பார்த்துக்கொள்வார். நம்மை காக்கும் தேவன் கண்ணயர்வதுமில்லை: உறங்குவதுமில்லை, ஆண்டவரே நம்மை காக்கின்றார். நம் வலப்பக்கத்தில் உள்ளார். அவரே நமக்கு நிழலாய் இருக்கிறார். பகலில் கதிரவனும், இரவில் நிலாவும், நம்மை தீண்டாது. ஆண்டவர் நம்மை எல்லாத் தீமையிலிருந்தும் பாதுக்காப்பார். அவரே நம் உயிரையும் காத்திடுவார். பணியாளனின் கண்கள் தன் தலைவனின் கைதனை நோக்கியிருப்பதுபோல, பணிப்பெண்ணின் கண்கள் தன் தலைவியின் கைதனை நோக்கி யிருப்பதுபோல நாமும் ஆண்டவர் நமக்கும் இரங்கும் வரை அவரையே நோக்கியிருப்போம். அப்பொழுது ஆண்டவர் நம்மேல் மனதுருகி நம் வேண்டுதலை...