Category: Daily Manna

ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துவோம்..1 யோவான் 3:11

ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துவோமாக! ஏனெனில், அன்பு கடவுளிடமிருந்து வருகிறது. அன்பு செலுத்தும் அனைவரும் கடவுளிடமிருந்து பிறந்தவர்கள். அவர்கள் கடவுளை அறிந்துள்ளார்கள். அன்பில்லாதோர் கடவுளை அறிந்துக்கொள்ளவில்லை. ஏனெனில் கடவுள் அன்பாய் இருக்கிறார். நாம் வாழ்வு பெறும் பொருட்டுக் கடவுள் தம் ஒரே மகனை உலகிற்கு அனுப்பினார். இதனால் கடவுள் நம்மீது வைத்த அன்பு வெளிப்பட்டது. நாம் கடவுள் மீது அன்பு கொண்டுள்ளோம் என்பதினால் அல்ல. மாறாக அவர் நம்மீது அன்புக்கொண்டு தம் மகனை நம் பாவங்களுக்காக அவர் இரத்தத்தை சிலுவையில் சிந்தி நம்மை மீட்கும்படி இந்த உலகிற்கு அனுப்பி இரத்ததினால் நம்மை சம்பாதிக்கும்படி செய்து இவ்வாறு தமது அன்பை வெளிப்படுத்தினார். அன்பானவர்களே! கடவுள் இவ்வாறு நம்மீது அன்புக்கொண்டார் என்றால், நாமும் ஒருவர் மற்றவர் மீது அன்புக்கொள்ள கடமைப்பட்டிருக்கிறோம். கடவுளை எவரும் என்றுமே கண்டதில்லை. நாம் ஒருவர் மற்றவரிடம் அன்பு கொண்டுள்ளோமென்றால் கடவுள் நம்மோடு இணைந்திருப்பார். அவரது அன்பு நம்மிடம் நிறைவு பெறும். அன்பின் ஊற்றே கடவுள்தான். அன்பு செலுத்துவோரே கடவுளுக்கு நெருக்கமானவர்கள் ஆவார்கள். ஜெபம் அன்பே...

ஆண்டவரின் சொற்படியே வலைகளைப் போடுவோம்.லூக்கா 5:5

இயேசுகிறிஸ்து இந்த உலகத்தில் வாழ்ந்த காலத்தில் தமக்கென 12 சீடர்களை தெரிந்துக்கொண்டு தம்முடைய வல்லமையை அவர்களுக்கும் அளித்து நீங்கள் எங்கும் சென்று என் நற்செய்தியை அறிவியுங்கள் என சொல்கிறார். ஒருநாள் அவர் கெனசரேத்து ஏரிக்கரையில் நின்று கொண்டிருந்தார். திரளான மக்கள் அவரின் இறைவார்த்தையை கேட்பதற்கு நெருக்கிக் கொண்டு இருந்தனர். அப்போது ஏரிக்கரையில் இரண்டு படகுகள் நிற்கக்கண்டார். மீனவர் படகைவிட்டு இறங்கி வலைகளை அலசிக்கொண்டு இருந்தனர். அப்படகுகளுள் ஓன்று சீமொனுடையது. அதில் இயேசு ஏறினார். அவர் கரையிலிருந்து அதைச் சற்றே தள்ளும்படி அவரிடம் கேட்டுக்கொண்டு படகில் அமர்ந்தவாறே மக்கள் கூட்டத்துக்கு கற்பித்தார். அவர் பேசி முடிந்தபின்பு சீமோனை நோக்கி ஆழத்திற்கு தள்ளிக் கொண்டுபோய் மீன் பிடிக்க உங்கள் வலைகளை போடுங்கள்என்றார். ஆழத்திற்கு தள்ளிக்கொண்டுபோய் என்பதற்கு எதிர் காலத்தில் நாம் செய்ய வேண்டிய அருள்பணியைக் குறிக்கும். சீமோன் மறுமொழியாக ஐயா,இரவு முழுதும் நாங்கள் பாடுபட்டு உழைத்தும் ஒன்றும் கிடைக்கவில்லை. ஆயினும் உமது சொற்படியே வலைகளைப் போடுகிறேன் என்றார். அப்படியே அவர்கள் செய்து பெருந்திரளான மீன்களை பிடித்தார்கள் வலைகள் கிழியத் தொடங்கவே...

கடவுளின் துணையால் எம்மதிலையும் தாண்டலாம்.தி.பா.18:29.

கர்த்தருக்குள் அன்பான சகோதரர்,சகோதரிகளுக்கு, ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் அன்பின் நாமத்தில் நல்வாழ்த்துக்கள். ஆண்டவரிடம் அடைக்கலமாக வரும் ஒருவரையும் அவர் வெறுத்து ஒதுக்கமாட்டார்.தாயினும் மேலான அன்புக்காட்டி நம்மை கட்டி அரவணைத்து பாதுக்காத்துக்கொள்வார் அவருடைய பாதத்தில் தஞ்சம் புகுந்து அவரின் துணையால் எம் மதிலையும் தாண்டும் கிருபையை பெற்றுக்கொள்வோம். நாம் 1 சாமுவேல் 17ம் அதிகாரத்தை வாசித்து பார்ப்போமானால் அதில் தாவீது கோலியாத்தை தோற்கடித்த விதத்தை காணலாம். சாதாரணமாக இருந்த தாவீது ஆடுகளை மேய்த்துக்கொண்டு இருந்தவரிடம் அவர் தகப்பனார் பாளையத்தில் இருக்கும் உனது சகோதரர்களுக்கு பால்கட்டிகளை கொடுத்துவிட்டு அவர்கள் நலமுடன் இருக்கிறார்களா? என்று பார்த்துவிட்டு வா என்று அனுப்புகிறார். தாவீதும் ஆவலோடு தமது சகோதரர்களை கானச் செல்கிறார். அங்கு போனபொழுது பெலிஸ்தியனான கோலியாத் இஸ்ரயேல் ஜனங்களை அவமானப்படுத்தும் விதத்தில் உங்களில் தைரியமுள்ளவன் எவனோ அவன் என் ஒருவனிடம் போரிட வேண்டும் என்று சவால் விட்டுக்கொண்டு இருந்தான். அதைக்கேட்ட இஸ்ரயேல் படைத்தளபதிகள் யாவரும் பயந்து அவனை எதிர்கொள்ள தயங்கினர். ஆனால் தமது சகோதரர்களை பார்க்கப்போன தாவீது அவன் இழிவாக பேசிய சொல்லைக்கேட்டு படைகளின் ஆண்டவர் என்னோடு...

ஆண்டவரின் கண்கள் நேர்மையானவர்களை பார்க்கிறது.1பேதுரு 3:12

கர்த்தருக்குள் அன்பான சகோதர,சகோதரிகளுக்கு,நம் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் நல்வாழ்த்துக்கள். ஆண்டவரின் கண்கள் எப்பொழுதும் தமக்கு பயந்து உண்மையோடும் நேர்மையோடும் நடக்கும் ஒவ்வொருவரின் மேலும் இருக்கும். அவர்களை ஆண்டவர் ஒருபோதும் கைவிடவே மாட்டார். அவர்கள் கூப்பிடும்பொழுது அவர்களின் சத்தத்தை கேட்டு உடனே அவர்களின் எல்லா உபத்திரங்களில்  இருந்தும் காத்துக்கொள்வார். நேர்மையாளருக்கு நேரிடும் தீங்குகள் பல. ஆனால் அவை அனைத்தினின்றும் ஆண்டவர் அவர்களை விடுவிக்கின்றார் திருப்பாடல்கள் 34:19. அவர்கள் எலும்புகளை எல்லாம் அவர் பாதுக்காக்கின்றார். அவற்றுள் ஒன்றும் முறிபடாது. தீயோரைத் தீவினையே சாகடிக்கும்.நேர்மையாளரை வெறுப்போர் தண்டனை பெறுவர். ஆண்டவருக்கு பயந்து வாழ்வோமானால் அவர்தம் தூதர் சூழ்ந்து நின்று காத்திடுவார். வாழ்க்கையில் இன்பம் காண விருப்பமா? வாழ்வின் வளத்தைத் துய்க்குமாறு நெடுநாள் வாழ நாட்டமா? அப்படியானால் தீச்சொல்லின்று நாவைக் காத்து வஞ்சக மொழியை நம்மை விட்டு அகற்றவேண்டும். இவ்வாறு தீமையை விட்டு விலகி நன்மை செய்வோமானால் நல்வாழ்வை அடைந்திடுவோம். ஏனெனில் ஆண்டவரின் கண்கள் நம்மை நோக்கிகொண்டிருக்கிறது. நமக்கு தீமை செய்வோரை கண்டும் நாம் மனம் புழுங்க தேவையில்லை....

கடவுளால் எல்லாம் இயலும்.மாற்கு 10:27

கர்த்தருக்குள் அன்பான சகோதர,சகோதரிகளுக்கு,நம் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் நல்வாழ்த்துக்கள். இந்த நாளிலும் நமது வாழ்க்கையில் நடக்கும் கஷ்டங்களையும், பாடுகளையும் நினைத்து நமது மனம் சோர்ந்து போய் இருக்கலாம். ஆனால் அந்த துன்பத்தின் வழியாக நாம் நடக்கும் போது அதில் ஏற்படும் அனுபவத்தினால் நிறைய காரியங்களை கற்றுக்கொள்ளலாம். அதனால்தான் தாவீது சொல்கிறார். நான் உபத்திரவப்பட்டது எனக்கு நல்லது. அதினால் உமது பிரமாணங்களைக் கற்றுக்கொள்கிறேன். சங்கீதம் 119:71. ஒரு ராணுவ வீரன் ஒருவன் முகாமில் தீவிரமாக யாருக்கும் பயப்படாமல் தைரியத்தோடு சண்டை செய்தானாம். ஆனால் அவனுக்கு ஒரு வியாதியினால் தன் வாழ்நாளை எண்ணிக்கொண்டு இருந்தானாம். எப்படியும் உயிர் போகப்போகிறது. இராணுவத்தில் இறந்தால் நாட்டுக்காக வீர மரணம் அடைந்த திருப்தி இருக்கும் என்று நினைத்து தீவிரமாக சண்டை செய்தான். இதைப்பார்த்த அந்த நாட்டு ராஜா இவன் நம் படையில் இருந்தால் நமக்கு எப்பொழுதும் வெற்றி கிடைக்கும் என்று நினைத்து அவனை ஒரு நல்ல மருத்துவரிடம் அழைத்து சென்று அவனுக்கு உண்டான எல்லா செலவுகளையும் ஏற்றுக்கொண்டு அவனுக்கு சிகிச்சை அளிக்க...