தருமம் செய்யும்பொழுது முகம் கோணாதே:தோபித்து 4 : 7
தோபித்து வாழ்நாள் எல்லாம் உண்மையையும், நீதியையும் பின்பற்றி வாழ்ந்து வந்தவர்.அசீரியா நாட்டில் உள்ள நினிவே நகருக்கு நாடு கடத்தப்பட்ட அவரின் உறவினர்களுக்கு பல தருமங்கள் செய்து வந்தவர். இஸ்ரயேலர் எல்லார்க்கும் எக்காலத்துக்கும் கட்டளையிட்டிருந்தபடி திருவிழாக்களின் போது பலமுறை எருசலேமுக்கு சென்று வந்தவர். தனது கால்நடையிலும்,தானியம்,திராட்சை ரசம், ஒலிவ எண்ணெய் ஆகியவற்றில் பத்தில் ஒரு பங்கை எருசலேமில் திருப்பணி புரிந்து வந்த லேவியரிடம் கொடுத்து வந்தவர். அவர் தன் வழிமரபில் வந்த அன்னாள் என்பவளை மணந்து கொண்டார். அவர்களுக்கு ஒரு மகன் பிறந்தான்.அவன் பெயர் தோபியா. இவர்கள் யாவரும் நாடு கடத்தப்பட்டு அங்கு அடிமைகளாக இருந்தபொழுது மற்றவர்கள் எல்லோரும் அந்நாட்டின் உணவை உண்டு வாழ்ந்தனர். ஆனால் தோபித்து அந்நிய உணவை உண்ணாமல் தவிர்த்து வந்தார். ஏனெனில் தமது முழுமனதுடன் கடவுளை சிந்தனையில் நிறுத்தி உன்னத இறைவனின் விருப்பப்படி வாழ்ந்து வந்தார். அசீரிய மன்னன் சனகெரியு யூதா மக்களை கொன்று குவித்து வநதான். அப்பொழுது தோபித்து அந்த சடலங்களை எடுத்து அடக்கம் செய்து வந்தார்.தனது இன மக்களுக்கு தன்னால் இயன்ற உதவிகளை செய்துவந்தார். அதனால்...