உங்களை துன்புறுத்துவோருக்காக இறைவனிடம் வேண்டுங்கள்
ரகு முதன் முதலாக வீட்டை விட்டு பிரிந்து ஹாஸ்டல் செல்ல அதற்கான ஏற்பாட்டை செய்து கொண்டிருந்தான். + 2 வரைக்கும் தனது பெற்றோருடன் வாழ்ந்து வந்த ரகு காலேஜில் சேர்வதற்காக, அங்கு ஹாஸ்டலில் தங்கி படிப்பதற்காக கிளம்பினான். ரகு மிகவும் பொறுமையான, அன்பான மாணவன். ஏனெனில் அவனின் பெற்றோர் அவனை நல்ல முறையில் கடவுளுக்கு பயந்து நடக்கும் வழியில் வளர்த்து இருந்தார்கள். சிறிது பயத்தோடு முதல்நாள் வகுப்புக்கு சென்றான். அங்கு இவனோடு படித்த இரண்டு மாணவர்களும் இருந்தார்கள். அதனால் ரகுவிற்கு கொஞ்சம் தைரியமாக இருந்தது. இவர்கள் மூவரும் ஒரே அறையில் தங்கிக்கொண்டனர். அதனால் எங்கு போனாலும் மூவரும் சேர்ந்தே போவார்கள், வருவார்கள். இரண்டு மாதம் கழித்து லீவுக்கு வீட்டுக்கு வந்துவிட்டு விடுமுறை முடிந்ததும் மறுபடியும் காலேஜிக்கு சென்றான். ஏதோ காரணத்தால் மற்ற இரண்டு பேரும் வரவில்லை. ரகு அலைபேசியில் அழைத்து கேட்டதற்கு இரண்டுநாள் கழித்து வருகிறோம் என்று சொன்னார்கள். அதனால் அன்று ரகு தனியாக ஹாஸ்டலில் இருந்து தன் வகுப்புக்கு போனான். மூன்றாம்...