விழிப்போடு செயல்படுவோம்
ஒரு கிராமத்தில் ஒரு விவசாயி தனது குடும்பத்துடன் வாழ்ந்து வந்தார். அவருக்கு போதுமான அளவு நிலம் இருந்தது. அந்த நிலத்தில் அவர் இட்ட பயிர்கள் நன்கு விளைந்து நல்ல பலனைக் கொடுத்து வந்தது. அந்த குடும்பம் சந்தோஷமாக வாழவேண்டிய அளவுக்கு கடவுள் அந்த குடும்பத்தை ஆசீர்வதித்து வைத்திருந்தார். ஒருநாள் அந்த ஊரில் ஒரு விளம்பரம் ஒளிபரப்பட்டது. அதில் பக்கத்து கிராமத்தில் அந்த ஊர் மக்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து ஒரு திருவிழாவுக்கு ஏற்பாடு செய்திருந்தனர். அதை மற்ற கிராமத்து மக்களுக்கும் தெரியப்படுத்தி எல்லோரும் வந்து அந்த திருவிழாவில் கலந்துக்கொள்ள வேண்டும் அழைப்பு விடுத்தனர். அதுவே அந்த விளம்பர ஒளிப்பரப்பு. இந்த விவசாயி இதைக்கேட்டு அந்த ஊருக்கு போய் தானும் அந்த திருவிழாவில் கலந்துக்கொள்ளவேண்டும் என்று நினைத்து தன் வீட்டில் உள்ளவர்களிடம் தெரியப்படுத்தினார். அவர்களும் மறுப்பு ஏதும் சொல்லாமல் சம்மதித்தனர். விவசாயி புறப்பட்டு சென்றார். அந்த திருவிழாவில் நிறைய கலை நிகழ்ச்சிகள் இருந்தன. இவர் ஒவ்வொன்றாக பார்த்து வந்தார். ஒரு இடத்தில் ஒரு ரூபாய் போட்டால் இரண்டு...