ஞானிகளை வெட்கப்படுத்த தேவன் மடமைகளை தெரிந்துக்கொண்டார்
சிலுவை பற்றியச்செய்தி அழிந்து போகிறவர்களுக்கு மடமையாக தோன்றலாம். ஆனால் மீட்பு பெறும் நமக்கோ அது கடவுளின் வல்லமையை காணச் செய்யும். ஏனெனில் ” ஞானிகளின் ஞானத்தை அழிப்பேன் . அறிஞர்களின் அறிவை வெறுமையாக்குவேன், என்று மறைநூலில் எழுதியுள்ளது. நாங்கள் ஞானிகள்;ஆண்டவரின் சட்டம் எங்களோடு உள்ளது’ என நீங்கள் எவ்வாறு கூறமுடியும்? மறை நூல் அறிஞரின் பொய் எழுதும் எழுதுகோல் பொய்யையே எழுதிற்று. ஞானிகள் வெட்கமடைவர்; திகிலுற்றுப் பிடிபடுவர்; ஏனெனில், அவர்கள் ஆண்டவரின் வாக்கைப் புறக்கணித்தார்கள்; இதுதான் அவர்களின் ஞானமா? என்று எரேமியா 8 : 8,9,ஆகிய வசனங்களில் வாசிக்கலாம். ஞானிகள் தன் ஞானத்தைக் குறித்துப் பெருமை பாராட்டவேண்டாம். வலியவர் தம் வலிமையைக் குறித்துப் பெருமை பாராட்ட வேண்டாம். செல்வர்கள் தம் செல்வத்தைக் குறித்தும் பெருமை பாராட்டவேண்டாம். பெருமை பாராட்ட விரும்புவோர் இயேசுகிறிஸ்துவை அறிந்து அவரே நம்முடைய ஆண்டவர் என்றும், அவரே நமக்காக நம்முடைய பாவத்துக்காக சிலுவை சுமந்து அடிக்கப்பட்டு, நொறுக்கப்பட்டு தமது இரத்தத்தையும், தண்ணீரையும் கொடுத்து நம்மேல் உள்ள அளவிட முடியாத பேரன்பால் நீதியோடும், நேர்மையோடும் செயலாற்றி நம்முடைய வாழ்விற்காக அவர் தமது...