Category: Daily Manna

காலைதோறும் ஆண்டவரது இரக்கம் புதுபிக்கப்படுகின்றன.

இன்றைய சிந்தனை இந்த உலகில் வாழும் நம் ஒவ்வொருவருக்கும் ஆண்டவரின் இரக்கம் தினந்தோறும் புதுப்பிக்கப்பட்டு அவரின் தயவால் நம்மை ஆட்கொண்டு வழிநடத்துகிறார். அவரின் அன்பும்,இரக்கமும்,இல்லாவிட்டால் நாம் என்ன ஆவோம்? என்ன நடக்கும் என்று யாருக்குத் தெரியும்.? எனக்கு அன்பு காட்டுவோருக்கு நானும் அன்பு காட்டுவேன்; என்னை ஆவலோடு தேடுகின்றவர்கள் என்னைக் கண்டுபிடிப்பார்கள்.நீதிமொழிகள் 8 : 17. ஆண்டவரின் பேரன்பு முடிவுறவில்லை!அவரது இரக்கம் தீர்ந்து போகவில்லை! காலைதோறும் அவை புதுப்பிக்கப்படுகின்றன!நீர் பெரிதும் நம்பிக்கைக்குரியவர்! புலம்பல் 3 : 22,23.தினமும் அவரே நம்முடைய பங்காகவும்,நம்பிக்கையாகவும் வைத்து அவர் அருளும் மீட்புக்கு அமைதியுடன் காத்திருந்து நமது ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்வோம். இந்த ஜூலை மாதம் முழுதும் நம்மை கண்மணியைப்போல் காத்துக்கொண்ட தேவனுக்கு உள்ளத்தின் ஆழத்தில் இருந்து நன்றி பலியை ஏறெடுப்போம். எத்தனையோ இக்கட்டான சூழ்நிலையில் இருந்தும் நம்மை ஒரு பொல்லாப்பும் தொடாத வகையில் காத்துக்கொண்ட அவரின் எல்லையில்லா அன்புக்கு அடிபணிவோம். கடன் பிரச்சனை, நோய்களின் போராட்டம், வேலையில்லா கஷ்டம் என எத்தனையோ தேவைகளையும்,நமக்கு தந்து இம்மட்டும் காத்து நடத்திய கடவுளுக்கு நன்றி பலியை ஏறெடுப்போம். நம்முடைய...

இயேசு அடிமையின் ரூபமெடுத்து மனுஷர் சாயலானார்.பிலிப்பியர் 2:7

இந்த உலகத்தையும் அதில் உள்ள யாவையும் உருவாக்கிய கடவுள் தம்மை எவ்வளவாய் தாழ்த்தி நம்மேல் உள்ள ஆழமான அன்பினால் இயேசு கடவுள் வடிவில் விளங்கிய அவர், கடவுளுக்கு இணையாயிருக்கும் நிலையை வலிந்து பற்றிக் கொண்டிருக்க வேண்டிய தொன்றாகக் கருதவில்லை. ஆனால், தம்மையே வெறுமையாக்கி அடிமையின் வடிவை ஏற்று மனிதருக்கு ஒப்பானார். மனித உருவில் தோன்றி, சாவை ஏற்கும் அளவுக்கு அதுவும் சிலுவைச் சாவையே ஏற்கும் அளவுக்குக் கீழ்படிந்து தம்மையே தாழ்த்திக்கொண்டார். எனவே கடவுளும் அவரை மிகவே உயர்த்தி எப்பெயருக்கும் மேலான பெயரை அவருக்கு அருளினார். ஆகவே இயேசுவின் பெயருக்கு விண்ணவர், மண்ணவர், கீழுலகோர் அனைவரும் மண்டியிடுவர். தந்தையாம் கடவுளின் மாட்சிக்காக இயேசுகிறிஸ்து ஆண்டவர் என எல்லா நாவுமே அறிக்கையிடும். இவ்வளவு மகிமையும், மாட்சியும் உள்ள இறைவன் தம்மை எப்படியெல்லாம் மரணத்துக்கு ஒப்புக்கொடுத்தார். நமக்காக அவர் முற்றிலும் மனுஷ சாயலாக ரூபமெடுத்து எப்படி எல்லாம் தாழ்த்துகிறார். ஆண்டவர் விரும்பும் காரியங்களில் ஒன்று மனத்தாழ்மையாகும். அவர் பெருமை உள்ளவர்களுக்கு எதிர்த்து செயல்படுவார். ஆனால் அவரிடத்தில் நம்மை தாழ்த்தி ஒப்புக்கொடுத்தோமானால் நமக்காக யாவையும் செய்து முடிப்பார். அவரே...

நன்மை செய்வதில் மனம் தளர வேண்டாம். 2 தெசலோனிக்கர் 3 : 13

இன்றைய சிந்தனை இயேசுகிறிஸ்து இந்த உலகத்தில் வாழ்ந்த நாட்களில் பல ஊர்களுக்கு சென்று மக்களை சந்தித்து அவர்கள் தேவைகள் யாவையும் நிறைவேற்றி வந்தார் என்று நாம் வேதத்தில் வாசிக்கிறோம். அவர் ஒருபோதும் சோர்ந்து போகவில்லை. தமது தந்தையின் திருவுளத்தை நிறைவேற்றுவதில் மிகவும் அக்கறையும்,கரிசனையும், உடையவராய் இருந்தார். பேய்களை ஓட்டினார் அநேகரை சுகப்படுத்தினார். இறந்தவர்களை உயிரோடு எழுப்பினார்.அவர் தமது தந்தையின் திருவுளத்தை நிறைவேற்றியது போல நாமும் கிறிஸ்துவின் திருவுளத்தை நிறைவேற்ற கடமை பட்டவர்களாய் அவரின் மனவிருப்பத்தை அறிந்து அதன்படியே செயல்பட்டு நாமும் நன்மை செய்வதில் மனந்தளராமல் இருப்போமானால் ஏற்ற காலத்தில் அதின் பயனை பெற்றுக்கொள்வோம். 17ம் நூற்றாண்டில் இங்கிலாந்து தேசத்தில் ஒரு போதகர் ஒரு கிராமத்தில் இயேசுகிறிஸ்துவை பற்றி ஆலயத்தில் யாருக்கும் தெரியாமல் ஆலயத்தின் கதவுகளை எல்லாம் அடைத்துக்கொண்டு அங்கிருந்த மக்களுக்கு பிரசங்கம் செய்தாராம். ஏனென்றால் அந்த ஊர் அரசாங்கம் அப்பொழுது கெடுபிடியான சட்டத்தை கையாண்டது. இயேசுகிறிஸ்துவைப் பற்றி யாரும் பிரசங்கம் செய்யக்கூடாது. மீறி செய்தால் அவர்கள் மேல் கொலைப்பழி சுமத்தி கடுமையான தண்டனை கொடுப்பார்களாம்...

ஆண்டவர் இரக்கமும்,பரிவும் உள்ள இறைவன்.வி.பயணம்.34:6

இன்றைய சிந்தனை பேரன்புமிக்கவரும்,நம்பிக்கைக்குரியவரும் ஆயிரம் தலைமுறைக்கு பேரன்பு செய்பவரும், செய்தவரும், நம்முடைய கொடுமையையும், குற்றத்தையும், பாவத்தையும், மன்னிப்பவரும் அன்பே உருவான ஆண்டவரின் நாமத்தை போற்றி துதித்து, அவருக்கு மகிமையை செலுத்தவே நம்மை அழைத்து அறிந்திருக்கிறார். அவரை ஏற்றுக்கொண்டவர்களுக்கு இரக்கத்தையும், பரிவும் வழங்கி நாம் எண்ணுவதற்கும், நினைப்பதற்கும்,மேலாக கொடுத்து ஒவ்வொரு நாளும் ஆசீர்வதித்து காத்து வழிநடத்தி வருகிறார். பொய் சொல்வதற்கு கடவுள் மனிதன் அல்லர். மனத்தை மாற்றிக்கொள்வதற்கு அவர் ஒரு மனிதப் பிறவியும் அல்லர். அவர் சொல்லியதை செய்யாமல் இருப்பாரோ? அல்லது அவர் உரைத்ததை நிறைவேற்றாமல் இருப்பாரோ? அவருக்கு விரோதமான மந்திரமும் இல்லை, அவருக்கு எதிரான குறி சொல்லுதலும் இல்லை. அவருடைய பிள்ளைகளை ஆசீர்வதிப்பதே அவருக்கு மிகவும் பிரியமான காரியமாகும். ஆபிரகாமுக்கு வாக்களித்த இறைவன் அதை அவருக்கு நிறைவேற்றி கொடுத்தார். உன் சந்திதியில் ராஜாக்களும், பிரபுக்களும் தோன்றும்படி செய்வேன் என்று வாக்களித்த இறைவன் அவரின் முதிர்ந்த வயதில் அவருக்கு ஒரு குழந்தையை கொடுத்து கடவுள் சொல்லிய யாவற்றையும் நிறைவேற்றி கொடுத்தார். அவரின் இரக்கமும், பரிவும் என்றும் மாறாதது. செங்கடலை பிளந்து இஸ்ரயேல் ஜனங்களை...

இயேசுவின் இரத்தம் எல்லாப் பாவத்தினின்றும் நம்மைத் தூய்மைப்படுத்தும். 1 யோவான் 1 : 7

இன்றைய சிந்தனை விண்ணிலும்,மண்ணிலும்,நிறைந்திருக்கும் ஆண்டவராகிய இயேசு அருகில் இருப்பவர்களுக்கு மட்டுமல்ல, தொலையில் இருக்கும் எல்லோருக்கும் கடவுள் ஆவார். ஏனெனில் அவர் கண்ணில் படாதபடிக்கு எவராவது பதுங்கிடங்களில் ஒளிந்துக்கொள்ள முடியுமா? அவர் தம் இதயத்தின் திட்டங்களை நிறைவேற்றுவார். அதற்காகவே இந்த பூமிக்கு இறங்கி வந்தார். நம்முடைய பாவங்களை ஏற்றுக்கொண்டு நமக்கு விடுதலை அளிக்கவே அவர் சாபமானார். ஏனெனில் இதோ! தீவினையோடு என் வாழ்வைத் தொடங்கினேன்; பாவத்தோடே என் அன்னை என்னைக் கருத்தாங்கினாள். ஆம் நாம் கருவில் உருவாகும் போதே பாவம் நம்மை ஆட்கொள்கிறது. கடவுளே! உமது பேரன்புக்கேற்ப எனக்கு இரங்கும் உமது அளவற்ற இரக்கத்திற்கேற்ப என் குற்றங்களைத் துடைத்தருளும். என் தீவினை முற்றிலும் நீங்கும்படி என்னைக் கழுவியருளும்; என் பாவம் அற்றுப்போகும்படி என்னைத் தூய்மைப்படுத்தியருளும். ஏனெனில் என் குற்றங்களை நான் உணர்கின்றேன்; என் பாவம் எப்போதும் என் மனக்கண்முன் நிற்கின்றது. உமக்கு எதிராக நான் பாவம் செய்தேன்; உமது பார்வையில் தீயது செய்தேன்; எனவே உம் தீர்ப்பினால் உம் நீதியை வெளிப்படுத்தியுள்ளீர்; உம் தண்டனைத் தீர்ப்பில் நீர் மாசற்றவராய் விளங்...