சகோதர அன்பு
நாம் யாவரும் கடவுளின் மக்கள் என்று அழைக்கப்படுகிறோம். கடவுள் நம்மிடம் எத்துனை அன்பு கொண்டுள்ளார்,என்று பாருங்கள். 1 யோவான் 3:1. ஆண்டவரிடம் எந்தவொரு பாரபட்சமும் இல்லை.அவருடைய சாயலாக படைக்கப்பட்ட நம் எல்லோரையும் சகோதர,சகோதரிகளாய் அவருடைய உறுப்பாய் இருக்கும்படி படைத்திருக்கிறார். உடல் ஒன்றே: உறுப்புகள் பல,உடலின் உறுப்புகள் பலவாயினும் உடல் ஒன்றாயிருப்பதுபோல நாமும் கிறிஸ்துவின் உறுப்புகளாய் இருக்கிறோம்.1 கொரிந்தியர் 12:12; 13. நீங்கள் யூதரா?கிரேக்கரா? செல்வந்தரா?அடிமையா?நாம் எல்லோரும் ஒரே தூய ஆவியால் ஒரே உடலாய் இருக்கும்படி திருமுழுக்கு பெற்று அந்த ஒரே ஆவியையே பானமாகவும் பெற்றோம். இவ்வாறு கடவுள் நம்மை படைத்திருக்கும்பொழுது நமக்குள் ஏன் கோபம், சண்டை, பொறாமை, பகைமை, பிரிவினை, கட்சிமனப்பான்மை, கலாத்தியர் 5:20. இதையெல்லாம்விட்டு நாம் யாவரும் ஆண்டவர் விரும்பும் பிள்ளைகளாக மாறி வாழுவோம்.ஆவியின் கனியாகிய அன்பு, மகிழ்ச்சி, அமைதி, பொறுமை, பரிவு, நன்மை, நம்பிக்கை, கனிவு, தன்னடக்கம் இவைகளைப் பற்றிக்கொண்டால் நம்மிடம் அன்பு நீரூற்றைப்போல் ஊறும்.கலாத்தியர் 5:22 .நாமும் அவருடைய உறுப்பாய் மாறுவோம் என்பதில் ஐயமில்லையே! ஒருவர் மற்றவர்களுடைய சுமைகளை தாங்கிக் கொள்ளுவோம். அவர்களோடு ஒப்பிட்டு பெருமை பாராட்டாமல் இயேசுகிறிஸ்து நமக்காக...