Category: Daily Manna

”அஞ்சாதீர்கள்; சிட்டுக்குருவிகள் பலவற்றைவிட நீங்கள் மேலானவர்கள்” (லூக்கா 12:7)

விவிலியத்தில் பல இடங்களில் ”அஞ்சாதீர்கள்” என்னும் சொல் ஆளப்படுவதை நாம் காணலாம். இதோ ஒருசில எடுத்துக்காட்டுகள்: எசாயா 43:1-2; நீதிமொழிகள் 3:25-26; லூக்கா 1:30; மத்தேயு 10:29-30. மனிதரின் வாழ்க்கையில் அச்சம் ஏற்படுவதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். நமக்கு ஏதோ ஆபத்து நிகழப்போகிறதோ என்னும் எண்ணம் மேலோங்குகின்ற வேளையில் நாம் அச்சமடைகிறோம். நமக்கு ஏற்படுகின்ற பயம் பிற மனிதர் நமக்குத் தீங்கிழைக்கப் போகிறார்களோ என நாம் நினைப்பதால் ஏற்படலாம். அல்லது இயற்கை நிகழ்வுகள் நம் உள்ளத்தில் பயத்தை எழுப்பலாம். அன்றாட உணவும், வாழ்வதற்குத் தேவையான பொருளாதாரமும் நமக்கு இல்லையே என்னும் உணர்வினால் பயம் தோன்றலாம். நோய்நொடிகள் ஏற்படும்போதும், நம்மைச் சார்ந்திருப்போருக்குத் தீங்கு ஏற்பட்டுவிடுமோ என நாம் நினைப்பதாலும் அச்சம் தோன்றலாம். மனித வாழ்க்கையின் எல்லா நிலைகளிலும் அச்சம் ஏற்படக் கூடும். ஆனால் விவிலியம் நமக்குத் தருகின்ற செய்தி, ”எதைக் கண்டும் நீங்கள் அஞ்சவேண்டாம்” என்பதே. நாம் உண்மையிலேயே அஞ்சவேண்டிய ஒருவர் உண்டு....

”நீங்களும் நுழைவதில்லை; நுழைவோரையும் தடுக்கிறீர்கள்” (லூக்கா 11:52)

இயேசு பரிசேயரையும் மறைநூல் அறிஞரையும் மிகக் கடுமையாகக் கண்டித்துப் பேசிய பகுதி (காண்க: லூக்கா 11:37-54) பல உண்மைகளை வெளிப்படுத்துகிறது. ”ஐயோ! உங்களுக்குக் கேடு!” என்று இயேசு கூறுவது இயேசுவின் சாந்தமான குணத்திற்கு நேர்மாறாக இருப்பதுபோல் தோன்றலாம். ஆனால், இயேசு கண்டிப்பது அக்கால சமய, மற்றும் சமூகத் தலைவர்களிடம் காணப்பட்ட குறைகளை மட்டுமல்ல, மாறாக அவர்களிடமிருந்து எதிர்பார்க்கப்பட்ட நேரிய நடத்தை என்னவென்பதையும் இயேசு உணர்த்துகிறார். அதே நேரத்தில், இயேசு கண்டித்த குறைகளும் அவர் போற்றியுரைத்த நடத்தையும் இன்று வாழ்கின்ற நமக்கும் பொருந்தும். தாமும் நுழையாமல் பிறரையும் நுழையவிடால் செயல்படுவது எதைக் குறிக்கிறது? வீட்டு வாசலில் ஒருவர் நிற்கிறார் என வைத்துக்கொள்வோம். ஒன்றில் அவர் வீட்டுக்குள் நுழைய வேண்டும் அல்லது வாயிலை அடைத்துக்கொண்டு நிற்காமல் அங்கிருந்து வெளியேறிட வேண்டும். அப்போது வீட்டுக்குள் பிறர் நுழைய முடியும். இதையே இயேசு ஓர் உருவகமாகக் கொண்டு இறையாட்சி பற்றிய ஆழ்ந்த உண்மையை விளக்குகிறார். நுழைதலும் நுழையவிடுதலும்...

”பத்திலொரு பங்கைக் காணிக்கையாகப் படைக்கிறீர்கள்” (லூக்கா 11:42)

சில கிறிஸ்தவ சபைகளில் ”பத்திலொரு பங்கைக் காணிக்கையாகப் படைக்கின்ற” வழக்கம் உண்டு. இதற்கு அடிப்படை லேவியர் நூலில் உள்ளது: ”நிலத்தின் தானியங்களிலும், மரங்களின் கனிகளிலும் பத்திலொன்று ஆண்டவருக்குரியது” (லேவி 27:30). கடவுளிடமிருந்து நாம் அனைத்தையுமே கொடையாகப் பெறுகின்றோம். எனவே, கடவுளுக்கென நாம் ஒரு பகுதியைக் காணிக்கையாகக் கொடுப்பது பொருத்தமே. இயேசு அக்காலத்தில் நிலவிய இப்பழக்கத்தைக் கண்டித்தார் என்பதற்கில்லை. மாறாக, கடவுளுக்குக் காணிக்கை கொடுக்கிறோம் என்று சொல்லிவிட்டு, உண்மையிலேயே ஏழைகளைப் பற்றிக் கவலைப்படாமல், கடவுளின் அன்பில் நிலைத்திராமல் வாழ்வது முன்னுக்குப்பின்முரணாக உள்ளது என்பதை இயேசு சுட்டிக்காட்டுகிறார் (லூக்கா 11:42). கடவுளுக்குக் கொடுக்கப்படுகின்ற காணிக்கை கடவுளின் புகழுக்காகவும், கடவுளின் சாயலாக உருவாக்கப்பட்ட மனிதரின் நலனுக்காகவும் பயன்படுத்தப்பட வேண்டும் என்பதை எல்லாரும் ஏற்றுக்கொள்வர். எனினும், பத்திலொரு பங்கைக் காணிக்கையாக்க வேண்டும் என்று மக்களைக் கட்டாயப்படுத்துவது சரியல்ல. கட்டாயத்தின் அடிப்படையில் வழங்கப்படுவது உண்மையான கொடை என்று சொல்ல முடியாது. உளமார உவந்து வழங்குவதே உண்மையான கொடை, அன்பளிப்பு....

உண்மையான வாழ்வு வாழுவோம்

உணவருந்துவதற்கு முன் இயேசு தனது கைகளைக் கழுவாவதைக்கண்டு பரிசேயா்கள் வியப்படைந்திருக்க வேண்டும். அது சுகாதாரம் என்பதற்காக அல்ல, மாறாக, அது கடைப்பிடிக்க வேண்டிய சடங்குமுறைகளுள் ஒன்று. மக்கள் மத்தியில் மிகப்பெரிய போதகராக மதிக்கப்படும் இயேசு அடிப்படை சடங்குகளைக்கூட பின்பற்றாதது, பரிசேயர்களுக்கு எரிச்சலையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தி இருக்க வேண்டும். பரிசேயர்களுக்கு வெளிப்புற அடையாளங்களுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை, அது காட்டும் உள்ளார்ந்த அர்த்தத்திற்கு கொடுக்க மறந்துவிட்டார்கள். வெளிப்புற அடையாளங்களுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்தால் போதும் என்ற மனநிலை அவர்களுக்கு இருந்தது. அப்படி வாழ்ந்தாலே கடவுள் முன்னிலையில் நீதிமானாக விளங்க முடியும் என்ற தவறான எண்ணம் அவர்களிடத்திலே இருந்தது. இத்தகைய மனநிலையை தவறு என இயேசு சுட்டிக்காட்டுகிறார். தினமும் ஆலயத்திற்கு செல்வதும், விவிலியத்தை ஆழ்ந்துபடித்து தியானிப்பதும், திருச்சபைக்கு நம்மால் இயன்றதைக் கொடுப்பதும் மட்டும்தான் கிறிஸ்தவனின் கடமை என்ற பாணியில் நமது வாழ்வை அமைத்துக்கொண்டு உள்ளத்தில் வஞ்சகமும், தற்பெருமையும், பொறாமையும் இருந்தால் நாமும் பரிசேயர்களைப்போலத்தான். அப்படிப்பட்ட நிலைக்கு...

நினிவே மக்களின் எடுத்துக்காட்டு !

“தீர்ப்பு நாளில் நினிவே மக்கள் இத்தலைமுறையினரோடு எழுந்து இவர்களைக் கண்டனம் செய்வார்கள். ஏனெனில் யோனா அறிவித்த செய்தியைக் கேட்டு அவர்கள் மனம் மாறியவர்கள். ஆனால், இங்கிருப்பவர் யோனாவைவிடப் பெரியவர் அல்லவா!” என்னும் இயேசுவின் ஆதங்கத்தை இன்றைய அறைகூவலாக எடுத்துக்கொள்வோம். நினிவே மக்கள் பேறு பெற்றவர்கள். காரணம், இறைவாக்கினர் யோனாவையும், அவரது செய்தியையும் ஏற்றுக்கொண்டார்கள். மனம் மாறினார்கள், தங்கள் வாழ்க்கையை மாற்றிக்கொண்டார்கள். எனவே, இறைவனும் அவர்கள்மீது இரக்கம் காட்டினார். ஆனால், இயேசுவின் காலத்துப் பரிசேயர், சதுசேயர், பல யூதர்கள் இயேசுவையும், அ வரது போதனையையும் புறக்கணித்தார்கள். இயேசுவைக் கொல்ல முன்வந்தார்கள். எனவே, இறைவனின் இரக்கத்தைப் பெற இயலவில்லை. நினிவே நகர மக்கள் அவர்களைப் பார்த்து நகைப்பார்கள், கண்டனம் செய்வார்கள். நாம் எப்படி? இறைவார்த்தையை நாள்தோறும் வாசிக்கிறோம், தியானிக்கிறோம், செபிக்கிறோம். ஆனால், நம் வாழ்வு மனம் மாறியவர்களுக்குரிய வாழ்வாக இருக்கின்றதா? இல்லை, பார்த்தும், பார்த்தும் பாராமலும், கேட்டும், கேட்டும் கேளாமலும், மனம் மாறாமலும் இருக்கின்றோமா?...