Category: Daily Manna

செல்வம் என்னும் பொறுப்பு

லூக்கா நற்செய்தியாளரின் பல நல்ல சிந்தனைகளுள், முக்கியமானது செல்வத்தைப் பற்றிய அவரது கருத்தாக இருக்கிறது. செல்வத்தைப்பற்றியும், செல்வந்தர்களைப் பற்றியும், அதிகமாகச் சொல்கிறவர் லூக்கா நற்செய்தியாளர் என்றால், அது மிகையாகாது. லூக்கா நற்செய்தியை அனைவரையும் அனைத்துச் செல்கின்ற நற்செய்தி. ஏழைகளுக்கு ஆதரவு சொல்லும் அவர், செல்வந்தர்களையும் விட்டுவிடுவதில்லை. அவர்களின் குற்றங்களை, அவர்கள் செய்யும் தவறுகளைச் சுட்டிக்காட்டுகிறார். அதே வேளையில், அவர்களின் வாழ்வுக்கான வழியையும் காட்டுகிறார். அதன் ஒரு பகுதிதான் நாம், இன்று வாசிக்கக்கேட்ட நற்செய்திப் பகுதி. செல்வத்தைப் பல வழிகளில் நாம் பயன்படுத்தலாம். நமக்கும் பயன்படுத்தலாம். மற்றவர்கள் பயன்பெறக்கூடிய வகையிலும் பயன்படுத்தலாம். எப்படிப் பயன்படுத்துகிறோம் என்பதில் தான், நமது மீட்பு அடங்கியிருக்கிறது என்பதை, நற்செய்தியாளர் சுட்டிக்காட்டுகிறார். செல்வம் என்பது கடவுளால் கொடுக்கப்படுகிற வெறும் ஆசீர்வாதம் மட்டுமல்ல, மாறாக, அது மிகப்பெரிய பொறுப்பு. செல்வந்தர்களிடமிருந்து அதிகமாக எதிர்பார்க்கப்படுகிறது. யாருக்கு அதிகமாக கொடுக்கப்பட்டிருக்கிறதோ, அவர்களிடம் இருந்து அதிகமாக எதிர்பார்க்கப்படுகிறது, என்பது நம் ஆண்டவர் இயேசுவின் வார்த்தைகள்....

”என்னோடு மகிழுங்கள்; ஏனெனில் காணாமற்போன என் ஆட்டைக் கண்டுபிடித்து விட்டேன்” (லூக்கா 15:6)

இயேசு யாரைத் தேடி வந்தார்? கடவுளிடமிருந்து அகன்றுசெல்வோர் யாராயிருந்தாலும் அவர்களுக்கு வாழ்வளிக்கவே இயேசு வந்தார். ஆனால் சில வேளைகளில் சில மனிதர்கள் தங்களுடைய உண்மையான நிலையை மறந்துபோகிறார்கள். கடவுளின் முன்னிலையில் தாங்கள் நல்லவர்கள் என இவர்கள் இறுமாப்புக் கொள்வதோடு, பிறரைக் குறைகூறுவதிலும் பிறர் பாவிகள் எனக் குற்றம் சாட்டுவதிலும் இவர்கள் ஈடுபடுவது வழக்கம். ஆனால் இயேசுவின் போதனைப்படி, நாம் எல்லோருமே கடவுளின் இரக்கத்தை நம்பி வாழ வேண்டியவர்களே. நமக்குக் கடவுளின் உதவி தேவை இல்லை என நாம் கூற இயலாது. ஏனெனில் நாம் எல்லாருமே மந்தையைவிட்டு அகன்று போகின்ற ஆட்டிற்கு ஒப்பானவர்களே. நம்மைத் தேடி வருகின்ற அன்புமிக்க கடவுள் நம்மைக் கண்டுபிடித்து நம்மேல் தம் அன்பைப் பொழிகிறார் என்னும் உண்மையை நாம் ஏற்றாக வேண்டும். காணாமற்போன ஆட்டைத் தேடிச் செல்கின்ற ஆயரைப் போல நம்மைத் தேடி வருகின்ற கடவுளை நாம் எவ்வாறு புரிகின்றோம்? எல்லையற்ற அன்பு அவருடைய உள்ளத்தில் இருக்கிறது என்பதில்...

ஞானத்தால் மீட்பு அடைவோம் !

இவ்வுலகில் நாம் புரிந்துகொள்ள முடியாத செய்திகள் பல இருக்கின்றன. நமது உடல் நலம், மகிழ்ச்சி, செல்வம், வெற்றிகள்… இவையெல்லாம் எங்கிருந்து வருகின்றன. அவற்றைத் தொடர்ந்து பெறுவதற்கு என்ன உத்திகளைக் கையாளலாம் என எவ்வளவுதான் ஆழமாக எண்ணிப்பார்த்தாலும், மானிட மனம் குறைபாடுள்ளது என்பதை ஏற்றுக்கொள்ளத்தான் செய்கிறோம். ஆனால், இறைவன் தருகிற ஞானம் நம்மில் நிலைத்திருந்தால், நாம் அனைத்தையும் புரிந்துகொள்ள முடியும். குறிப்பாக, நம் வாழ்வின் நிலையாமை, நம் வாழ்வின் இறுதி இலக்கு… போன்றவற்றை இறைவன் மட்டுமே நமக்கு வெளிப்படுத்த முடியும். “நீர் ஞானத்தை அருளாமலும், உயர் வானிலிருந்து உமது தூய ஆவியை அனுப்பாமலுமிருந்தால், உமது திட்டத்தை யாரால் அறிந்துகொள்ள முடியும்? என்னும் செய்தி இந்த உண்மையை நன்கு வெளிப்படுத்துகிறது. இறைவன் தரும் ஞானத்தால் மட்டுமே நாம் மீட்பு அடைய முடியும் என்று இன்றைய முதல் வாசகம் நிறைவுபெறுகிறது. எனவே, தூய ஆவி என்னும் இறைவனின் கொடைக்காக மன்றாடுவோம். ஆவியின் ஆற்றலால் செயல்பட்டு, மீட்படைந்தோராய்...

விருந்தில் பங்கு பெறுவோர் பேறுபெற்றோர்!

இயேசுவின் இந்த உவமையைக் கொஞ்சம் சிந்தித்துப் பார்த்தால், வியப்புதான் மேலிடும். காரணம், திருமண விருந்துக்கு வர மறுப்பது என்பது சற்று வியப்பான செய்திதான். அதிலும் ஒவ்வொருவரும் சொன்ன சாக்குபோக்குகளும் ஏற்றுக்கொள்ளத்தக்கதாக இல்லை. ஆம், இயேசு சொன்ன உவமையின் நோக்கமும் அதுதான். இறைவன் தருகின்ற விருந்தில் பங்கு கொள்வதற்கு நாம் மிகவும் தயங்குகிறோம். அதுவே வியப்புக்குரியதுதான். அதிலும் அத்தயக்கத்துக்கான காரணங்களாக நாம் முன்வைக்கும் காரணங்கள் அதிலும் வியப்புக்குரியவை என்பதை நமக்கு விழிப்பூட்டவே இயேசு இந்த உவமையைச் சொல்லியிருக்கிறார். இறையாட்சியின் விருந்திற்கு இறைவன் நம்மை அழைக்கின்றார். அந்த விருந்து நிறைவான, நிலையான, அழியாத விருந்து. அந்த விருந்தை நாம் திருப்பலியிலும், இறைமொழியிலும், இறை அனுபவங்களிலும் பெறுகிறோம். ஆனாலும், அந்த விருந்தின்மீது நாம் அதிக ஆர்வம் கொள்வதில்லை. மாறாக, அழிந்து போகின்ற உணவு, பொழுதுபோக்குகள், நிறைவற்ற உறவுகள்… இவற்றில் நாம் அதிக ஆர்வம் காட்டுகிறோம். அத்துடன், இறையாட்சியின் விருந்தில் கலந்துகொள்ளாததற்கு நாம் ஆயிரம் சாக்குபோக்குகளைச் சொல்கிறோம்....

அனைத்து ஆன்மாக்கள் திருவிழா

நவம்பர் மாதம் ஆன்மாக்களின் மாதம். ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் இரண்டாம் தேதி, அகில உலக திருச்சபை ஆன்மாக்களுக்காக சிறப்பாக மன்றாட நமக்கு அழைப்புவிடக்கிறது. அனைத்து ஆன்மாக்களின் நினைவுநாள், மற்ற விழாக்களைப் போன்றோ, பெருவிழாக்களை போன்றதோ அல்ல. இந்த விழாவிற்கென்று தனித்தன்மை இருக்கிறது. இறந்து போன ஆன்மாக்களை நாம் இந்த நாளில் சிறப்பாக நினைவுகூா்ந்தாலும், வழிபாட்டு ஆண்டின் தரத்தில், மிக முக்கியம் வாய்ந்த, ஆண்டவரின் விழாக்களில் ஒன்றாகவே இது கருதப்படுகிறது. அப்படியே கடைப்பிடிக்கப்படுகிறது. பழங்காலத்தில் இறந்தவர்களுக்கு மரியாதை செய்யும் வழக்கம், அனைத்து சமயங்களிலும் இருந்தது. இந்த பழக்கமே, நாளடைவில் கிறிஸ்தவர்கள் மத்தியிலும் தோன்றியிருக்கலாம். இதனைப்பின்பற்றி தான், இறந்தவர்களுக்காக இறைவேண்டல்களும், திருப்பலிகளும் ஒப்புக்கொடுக்கும் பழக்கம் ஏற்பட்டது. ஆயரான இசிதோர் கி.பி. 636 ல், இறந்தவர்களுக்கென்று ஒருநாளை ஒதுக்கி, அவர்களுக்காக மன்றாடும் முறையை ஏற்படுத்தினார். இது நாளடைவில் பல துறவி மடங்களிலும், அதிலும் குறிப்பாக தொமினிக்கன் துறவற மடங்களில் தொடர்ந்து கடைப்பிடிக்கப்பட்டது. ஆனால், கி.பி. 15...