Category: Daily Manna

ஒருவனா ? ஒன்பதில் ஒருவனா?

நீ அந்த ஒரு ஆளா? அல்லது ஒன்பது ஆட்களில் ஓருவனா?, ஒருத்தியா? நம் இறைவன் ஆள் பார்த்து தம் ஆசீரை வழங்குபவர் அல்ல. தன் பேரருட் பெருந்தன்மையால் எல்லோருக்கும் வாரி வழங்குகிறார். “அவர் நல்லோர் மேலும் தீயோர் மேலும் தம் கதிரவனை உதித்தெழச் செய்கிறார். நேர்மையுள்ளோர் மேலும் நேர்மையற்றோர் மேலும் மழை பெய்யச் செய்கிறார்.” (மத் 5 :45) அவர் உனக்குச் செய்துள்ள நன்மைகளைச் சற்று அமர்ந்து சிந்தித்துப் பார். தினமும் உனக்கு, உன் குடும்பத்திற்கு அவர் தரும் ஆசீரையும் அருட்கொடைகளையும் நினைத்துப் பார். தொழுநோயைக் குணமாக்கினால்தான் கடவுள் உன்னில் செயல்படுவதாக நினைக்காதே. ஜலதோஷம், தும்மல், இருமல் இல்லாமல் உன்னைக் காப்பதும் அந்த தெய்வமே என்பதை உணர்ந்து கொள். இப்படி சிறியது முதல் பெரியது வரை பல நன்மைகளைப் பெற்றும் இறைவனைப்பற்றிய நினைவே இல்லாமல் வாழும்போது நீயும் அந்த ஒன்பதுபேரில் ஒருவன். நாளும் நம்மைக் காத்துவரும் நல்ல தேவனை, தினமும் கொஞ்சம்...

பணி செய்து நிறைவடைவோம்

நாம் மன நிறைவோடு வாழ இன்று இயேசு சொல்லும் செய்தி சிறப்பான ஒன்று. “நாங்கள் பயனற்ற பணியாளர்கள்; எங்கள் கடமையைத்தான் செய்தோம்”(லூக்17’10) என்ற மனநிலை நமக்கு எப்பொழுதும் வேண்டும். இன்று வாழ்க்கை நிம்மதியற்றுப் போவதற்குக் காரணம் வீணான எதிர்பார்ப்பு,அதனால் அதைத் தொடர்ந்து வரும் ஏமாற்றம், அதன் தொடர்ச்சியான விரக்தி, அதன் விளைவு உடல்நோய், மன நோய். நான் பணியாளன், தொண்டன் என்ற உணர்வு மேN;லாங்கிவிடுகிறபோது இவை அனைத்துக்கும் இடமே இல்லை. எனவே வாழ்வில் நிறைவும் நிம்மதியும் இருக்கும். நாம் இறைவனின் பணியாட்கள் என்ற எண்ணம் முன்னிலையில் இருந்தால், குடும்பத்தில் மனைவி மக்களுக்கு அன்புடன் பணிசெய்வதை பெருமையென கொள்வோம். அலுவலகத்தில் உள்ளோரைச் சகோதர சகோதரியாகக் காண்போம்.அண்டை அயலாரை அன்பர்களாகக் கருதுவோம். ஆண்டவனும் பாராட்டுவான். அனைவரும் வாழ்த்துவர். மனதில் மகிழ்ச்சி நிறையும். நான் ஒரு பணியாள், என் கடமையை நான் செய்கிறேன் என்ற எண்ணம் நமக்குள் இருந்தால் நம் வாழ்க்கை நிம்மதியாக இருக்கும். ~அருட்திரு...

சாட்டை அவசியமா?

இங்கே பயன்படுத்தப்படும் “கோயில்” என்ற வார்த்தை நான்கு வித பொருள் கொடுப்பதைக் காண்கிறோம். 1. எருசலேம் தேவாலயம்பற்றியது. 2.இயேசு தன் உடலை ஆலயம் எனக் குறிப்பிடுவது. 3.திருச்சபை கிறிஸ்துவின் மறையுடல். 4.நம் ஒவ்வொருவரின் உடலும் தூய ஆவியின் ஆலயம். இந்த நான்கும் தந்தை இறைவனின் இல்லங்கள். இவற்றை சந்தையாக்குவதை மகனால் ஏற்றுக்கொள்ள முடியாது. “உமது இல்லத்தின் மீதுள்ள ஆர்வம் என்னை எரித்துவிடும்” என்ற மறை நூல் வாக்கு உண்மையாகிறது. எனவே சாட்டை பின்னி, எல்லோரையும் துரத்துகிறார். காசுகளைக் கொட்டி மேசைகளை கவிழ்த்துப்போட்டார். இந்த ஆலயங்களை நாம் எவ்வாறெல்லாம் சந்தையாக்குகிறோம். நம் ஆலயங்களைப் பயன்படுத்தாதபோதும் தவறாக பயன்படுத்தும்போதும்; நற்கருணை அருட்சாதனத்தில், திருப்பலியில் பங்குகொண்டு அவரை மகிமைப்படுத்தாதபோதும்,அவசங்கைகள் செய்கின்றபோதும்; திருச்சபைக்கும் திருத்தந்தைக்கும் எதிராகச் செயல்படும்போதும் நம் உடலை பாவச் செயல்களில் ஈடுபடுத்தும்போதும் இந்த ஆலயங்களை சந்தையாக்குக்றோம். இயேசு சாட்டை எடுக்கும் முன், புதுப்பிப்போம். புதிய ஆலயமாக்குவோம். ~அருட்திரு ஜோசப் லியோன்

பெறுவதைவிட தருவதே மேலானது !

சில உண்மைகளை அனுபவத்தின் மூலம் மட்டுமே கற்றுக்கொள்ள முடியும். அவற்றுள் ஒன்றுதான் கொடுப்பதன் மேன்மை. கொடுங்கள், உங்களுக்குக் கொடுக்கப்படும் என்ற ஆண்டவரின் அருள்வாக்கின் அருமையை அனுபவித்துப் பார்த்தால்தான் தெரியும். இன்றைய முதல் வாசகத்திலும், நற்செய்தி வாசகத்திலும் கொடுத்தலின் மேன்மை போற்றப்படுகிறது. முதல் வாசகத்தில் இறைவாக்கினர் எலியாவுக்கு அப்பம் கொடுத்துப் பசி நீக்கிய கைம்பெண்ணுக்கு ஆண்டவர் அற்புதமான முறையில் தொடர்ந்து உணவு கிடைக்கச் செய்த நிகழ்வை வாசிக்கிறோம். நற்செய்தி வாசகத்திலோ ஆண்டவர் இயேசு மறைநுhல் அறிஞர்களைச் சாடும்போது அவர்கள் பிறருக்குக் கொடுப்பதற்குப் பதிலாக, கைம்பெண்களின் வீடுகளைப் பிடுங்கிக்கொள்வதைக் கண்டனம் செய்கிறார். அத்துடன், ஏழைக் கைம்பெண் போட்ட காணிக்கையையும் பெரிதும் பாராட்டுகிறார். இரு வாசகங்களிலும் வருகின்ற கைம்பெண்கள் தாங்கள் பெறுகின்ற நிலையில் இருந்தபொழுதும்கூட கொடுக்கின்ற மனம் உள்ளவர்களாக இருந்தனர். எனவே, பாராட்டையும், இறை ஆசியையும் பெற்றுக்கொண்டனர். பொதுவாகவே, குறைவாக உள்ளவர்களுக்குத்தான் நிறைவான மனம் இருக்கிறது என்று நாம் சொல்கிறோம். இந்தக் கைம்பெண்கள் அதை எண்பித்துக்காட்டுகின்றனர்....

அறிவுள்ள செயல்பாடு

“நேர்மையற்ற செல்வத்தைக்கொண்டு உங்களுக்கு நண்பர்களைத் தேடிக்கொள்ளுங்கள்” இயேசுவின் இந்த அறிவுரை அதிர்ச்சியை தருகிறதா? உண்மை. ஆனாலும் அவர் சொல்ல வந்த கருத்தை கவனத்தில் கொள்ள வேண்டும். நேர்மையற்ற செல்வம் என இயேசு குறிப்பிடுவது இவ்வுலக செல்வங்களையே. இயேசுவின் பார்வையில்,விண்ணகச் செல்வத்தோடு ஒப்பிடும்போது இவை நேர்மையற்ற செல்வம். இருப்பினும் மனித கண்ணோட்டத்தில், நேர்மையான வழிகளில் சம்பாதித்தவை அனைத்தும் நேர்மையான செல்வம்தான். இந்த செல்வத்தைக்கொண்டு நண்பர்களைத் தேடிக்கொள்ள வேண்டும். விண்ணக செல்வத்தைத் சேர்த்துக்கொள்ள வேண்டும். நேர்மையான செல்வம் என்பது விண்ணகச் செல்வம் ஒனறே. “கிறிஸ்து இயேசுவைப் பற்றிய அறிவே நான் பெறும் ஒப்பற்றச் செல்வம்”; (பிலிப்பியர் 3 :8). “எகிப்தின் செல்வங்களைவிட, “மெசியாவின்” பொருட்டு இகழ்ச்சியுறுவதே மேலான செல்வம்”(எபிரேயர் 11 :26) இவ்வுலகில் கடவுள் நமக்குத் தந்த செல்வத்தைப் பயன்படுத்தி எவ்வாறு நண்பர்களை தேடிக்கொள்வது விண்ணக செல்வத்தைச் சேர்த்துக்கொள்வது என்பதற்கான வழிகளை ஆராய்வோம். அதைச் செயல்படுத்துவோம். அப்பொழுது நேர்மையற்ற செல்வத்தைக் கையாளுவதில் நாம் நம்பத்தகுந்தவராய்...