Category: Daily Manna

பார்வை எதற்காக?

பார்வையற்ற பர்த்திமேயுக்கு இயேசு பார்வை அளித்த நிகழ்ச்சியை மீண்டும் ஒருமுறை தியானிக்கிறோம். எனவே, இன்று வாசகத்தின் கடைசி வாக்கியத்தை எடுத்துக்கொள்வோம். உமது நம்பி;க்கை உம்மை நலமாக்கிற்று என்று இயேசு கூறியதும், அவர் உடனே பார்வை பெற்று, கடவுளைப் போற்றிப் புகழ்ந்துகொண்டே இயேசுவைப் பின்பற்றினார் என்று வாசிக்கிறோம். பார்வை பெற்ற அம்மனிதர் நமக்குக் கற்றுத்தரும் பாடம் இதுதான்: பார்வை பெறுவது கடவுளைப் புகழ்வதற்காகவும், இயேசுவைப் பின்பற்றுவதற்காகவும்தான் என்பது அவரது அனுபவம். பார்வை பெற்றதும் தனது குடும்பத்தினரைத் தேடிச் செல்லவில்லை, புதிய வாழ்வைத் தொடங்குவதற்கான முயற்சிகள் எதிலும் ஈடுபடவில்லை. மாறாக, கடவுளைப் புகழ்ந்தார், இயேசுவைப் பின் தொடர்ந்தார். இதைக் கண்ட மக்கள் யாவரும் கடவுளைப் புகழ்ந்தனர். எனவே, ஒரு நற்செய்தியாளராகவும் மாறிவிட்டார். நாமும் புதிய பார்வை பெறவேண்டும். நமது வாழ்வின் நோக்கம் கடவுளைப் புகழ்வதும், இயேசுவைப் பின்பற்றி வாழ்வதும்தான் என்பதை உணர்வதே அந்தப் புதிய பார்வை. வேறு எதற்காக இந்த வாழ்வு? வேறு எது...

இரண்டாம் வருகை !

கிறித்தவத்தின் அடிப்படை நம்பிக்கைகளில் ஒன்றுதான் இரண்டாம் வருகை. முதல் வருகையின்போது, மானிட உருவெடுத்து, பாடுபட்டு, மரித்து, உயிர்த்த இறைமகன் இயேசு இரண்டாம் முறையாக மீண்டும் வருவார். அந்த வருகையின்போது அவர் நடுவராக உலகைத் தீர்ப்பிடுவார் என்பதுவே இரண்டாம் வருகையின் பொருள். ;இதை நாம் ஒவ்வொரு நாளும் திருப்பலியிலும், விசுவாசப் பிரமாணத்திலும், இன்னும் வேறு பல வேளைகளிலும் அறிக்கையிடுகிறோம். இந்த விசுவாச அறிக்கையை எப்படி வாழ்வில் பயன்படுத்துவது? நல்ல கேள்வி. நடுவராக இயேசு மீண்டும் வரவிருக்கிற அந்த இரண்டாம் வருகை உலக முடிவில்தான் இருக்கும். உலக முடிவு எப்போது என்று மனுமகனுக்கே தெரியாது என்று இயேசுவும் கூறிவிட்டார். எனவே, நம்மைப் பொறுத்தவரை, உலக முடிவு என்பது நம் ஒவ்வொருவரின் முடிவுதான். அதாவது, நமது இறப்புதான். நாம் இறக்கின்றபோது நடுவராம் இயேசு நம்மைச் சந்தித்து நம்மைத் தீர்ப்புpடுவார். அந்தத் தீர்ப்பின் வேளைக்காக நாம் எப்போதும் ஆயத்தமாக இருக்கவேண்டும். ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நிமிடமும் நாம்...

”இயேசு, ‘மானிடமகன் வரும்போது மண்ணுலகில் நம்பிக்கையைக் காண்பாரோ?’ என்றார் (லூக்கா 18:8)

கடவுளிடத்தில் அசையாத நம்பிக்கை கொண்டு நாம் வாழ வேண்டும் என்பது இயேசுவின் போதனையில் மிக மையமான கருத்து. இங்கே நம்பிக்;கை எனப்படுவது பழைய மொழிபெயர்ப்பியல் ”விசுவாசம்” என அமைந்திருந்தது. இதையே பற்று, பற்றுறுதி எனவும் நாம் கூறலாம். கடவுளையே பற்றிக் கொள்வோர் வேறு பற்றுக்களால் பிணைக்கப்பட மாட்டார்கள். பிற பற்றுக்களிலிருந்து நாம் விடுதலை பெறுகின்ற வேளையில்தான் கடவுளிடத்தில் நாம் கொள்கின்ற நம்பிக்கை என்னும் பற்று பொருளுள்ளதாக மாறும். எனவே, இயேசு மண்ணுலகில் நம்பிக்கை எவ்வளவு நாள் தொடர்ந்து இருக்குமோ எனக் கேட்கின்ற கேள்வி நம் உள்ளத்தில் ஒரு சலனத்தை ஏற்படுத்த வேண்டும். இயேசு கூறிய உவமையில் வருகின்ற ”நேர்மையற்ற நடுவர்” மற்றும் அவரை அணுகிச் சென்று நீதிகேட்ட ”கைம்பெண்” ஆகியோரை (காண்க: லூக் 18:1-8) நாம் உருவகமாகப் பார்க்கலாம். அதாவது, அந்த நடுவர் அநீதியான ஓர் அமைப்பைக் காட்டிக் காத்தவர் எனலாம். நீதி வழங்கும் பொறுப்பை முறையாகச் செய்ய அவர் தவறிவிட்டார்....

உண்டார்கள், குடித்தார்கள் !

நோவாவின் காலத்திலும், லோத்தின் காலத்திலும் நடந்த நிகழ்வுகளைச் சுட்டிக்காட்டும் இயேசு, வரலாற்றிலிருந்து நாம் சில பாடங்களைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்துகிறார். நோவாவின் காலத்தில் மக்கள் இறையச்சம் இன்றி உண்டும், குடித்தும் வந்தார்கள். லோத்தின் காலத்திலும் இறைவனின் கட்டளைகளை மக்கள் மறந்தார்கள். உண்டார்கள், குடித்தார்கள். வாங்கினார்கள், விற்றார்கள். நட்டார்கள், கட்டினார்கள். அதாவது, இந்த உலகின் செயல்பாடுகளிலேயே கவனமாக இருந்தார்கள், ஆனால், விண்ணக வாழ்வுக்குரிய செயல்பாடுகளை மறந்தார்கள் அல்லது புறக்கணித்தார்கள். எனவே, அழிந்தார்கள். எனவே, எச்சரி;க்கையாயிருங்கள் என்கிறார் இயேசு. இந்த 21ஆம் நூற்றாண்டில் பழைய காலத் தவறுகளையே நாம் மீண்டும் செய்கிறோமோ என்று தோன்றுகிறது. நமது காலத்திலும் மக்கள் அலுவலகம் செல்வதிலும், பணம் சம்பாதிப்பதிலும், கடன் வாங்கி வீடு கட்டுவதிலும், வணிகம் செய்வதிலும், பொழுதுபோக்குகளில் ஈடுபடுவதிலும் செலவழிக்கும் நேரமும், அக்கறையும் இறைவனுக்குரிய , இறையாட்சிக்குரியவற்றில் செலவழிப்பதில்லை. எனவே, நோவாவின் காலத்தில் நடைபெற்றது போல, லோத்தின் காலத்தில் நடைபெற்றது போல, அழிவுக்குரிய செயல்கள் நமக்கும்...

இறையாட்சி உங்கள் நடுவேயே !

மன மகிழ்ச்சியை வெளியே தேட முடியாது. அது அகத்தின் உள்ளேதான் இருக்கிறது. அதுபோல, இறையாட்சியும் மானிட வாழ்வுக்கு வெளியே இல்லை. நமது நடுவிலேயே இருக்கிறது என்னும் ஆண்டவரி;ன அமுத மொழிகள் இன்று நமக்கு வாழ்வு தரும் வார்த்தைகளாக வழங்கப்படுகின்றன. இன்று பலரும் தங்கள் தேடுதலை வெளியே வைத்திருக்கிறார்கள். சிலர் அற்புதங்களைத் தேடி நற்செய்திக் கூட்டங்களுக்குச் செல்கிறார்கள். சிலர் புதமைகளைத் தேடி திருத்தலங்களுக்குச் செல்கிறார்கள். சிலர் மகிழ்ச்சியைத் தேடித் திரையரங்குகளுக்குச் செல்கிறார்கள். ஆனால், தங்களுக்குள்ளேயே தேடினால், அமைதியும், நீதியும், மகிழ்ச்சியும் தங்களின் வாழ்விலும், பணியிலுமே அடங்கியிருக்கிறது என்பதைக் கண்டுகொள்ளலாம். இறையாட்சி கண்களுக்குப் புலப்படும் முறையில் வராது என்கிறார் ஆண்டவர். இறையாட்சியி;;ன் அடையாளங்களைக் கண்டுகொள்ளலாம். எங்கெல்லாம் சமத்துவம் இருக்கிறதோ, எங்கெல்லாம் மனிதர்கள் மன்னிப்பை அனுபவிக்கிறார்களோ, எங்கெல்லாம் பொருள்களைவிட மனிதர்கள் பெரிதாக மதிக்கப்படுகிறார்களோ, எங்கெல்லாம் இறைவனின் விழுமிங்கள் போற்றப்பட்டு, நடைமுறைப்படுத்தப்படுகின்றனவோ, அங்கெல்லாம் இறையாட்சி புலர்ந்துவிட்டது என்றுதானே பொருள். எனவே, இறையாட்சியை நாம் வெளியே தேடவும் வேண்டாம்....